• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 47

    அந்த சத்தம் அவளை படைத்த தேவனை கூட உருக்கி விட்டது உண்மை ….. இந்த நிமிசம் வரைக்கும் அந்த பொண்ணுக்கு இந்த ரகசியம் தெரியாதால இனிமேலும் தெரிய வேண்டாம்…..கண்காணிப்பவர் சொல்லி கொண்டிருந்த வார்த்தைகள் அவள் காதுகள் கேட்டுக் கொண்டிருந்தாலும் அந்த வார்த்தைகளின் மேல் இப்போது அவளுக்கு கவனம் இல்லை….

    ஆனா இந்த பொண்ணுதான் ரொம்பவே புத்திசாலியா இருக்கிறாளே…..நாம சொல்லா விட்டாலும் அவளே இந்த காரியத்தை தெரிந்து கொள்ளுறதுக்கு நிறைய வாய்புக்கள் இருக்கே கண்காணிப்பவரே! அப்ப நான் என்ன செய்ய….. அந்த ஏஞ்சல் கேட்டதுக்கு

    நம்ம எஜமானர் வருகைக்கு நாம ஆயத்தமாகிட்டிருக்கோம்…இந்த சமயத்தில் அந்த பொண்ணால எந்த பிரச்சனையை வராம பார்த்து கொள்ள வேண்டியது உன் பொறுப்பு….அந்த பொண்ணு அந்த இரகசியத்தை என்றும் தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் என்றும் அவளுக்குள்ள தாழ்வு மனப்பான்மையை வைச்சிட்டே இருக்க வேண்டியதை நீயே பார்த்துக்கோ….கண்காணிப்பவர் சொன்ன போது அந்த ஏஞ்சலுக்கும் மட்டுமில்ல இவளுக்கு கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    எப்பவும் அவ நம்ம எஜமானரை நெருங்க முடியாத தூரத்தில் நினைக்கும் வண்ணம் அவளை தான் ஒண்ணுமே இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்திரு….கண்காணிப்பவர் சொன்ன வார்த்தையில் அரண்டே போனாள்….இதே வேதனையை தான அன்னைக்கி ரேஷ்மி கூட நான் பேசின விசயத்தில் எனக்கு விதைச்சி என்னை நரகத்திற்கு இழுத்துட்டு போனான்….இன்னிக்கி நான் என்றும் என் தேவனை நினைக்க கூட முடியாத தூரத்திற்கு என்னை அனுப்ப பார்க்கிறான்…..அவள் தனக்குள் சொல்லி கொண்டாள்….அப்ப என்கிட்டே குழைஞ்சு பேசினது எல்லாம் அவன் நடிப்பா….அவள் யோசித்து கொண்டிருந்த போதே அந்த ஏஞ்சல்….சரி கண்காணிப்பவரே….. என்று சொல்லும் சத்தம் கேட்டது.

    இயேசப்பா….என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு பார்த்தீங்களா??? என்னை ஒண்ணுமேயில்லைன்னு ஆக்கிறதுக்காக சாத்தான் எத்தனை பெரிய அளவுக்கு திட்டங்கள் போடுறான்….இப்ப நான் என்ன செய்யணும் இயேசப்பா….என்று அவள் சொல்லி விட்டு தன் தேவன் பதிலுக்கு காத்திருந்தாள். அவளில் ஒரு மாற்றம் அடைந்ததை பாவம் அவளே தெரிந்திருக்க வில்லை.

    அவளை அந்த மெல்லிய காற்றில் மகிழ்ச்சி அடைந்தவளாய் தேங்க்ஸ் இயேசப்பா. நீங்க என்கூட இருக்கீங்க. சோ…அந்த சாத்தனால என்னை என்ன பண்ண முடியும்….என்று சொல்லிய அவள் உதடுகள் அடுத்த நிமிசமே சொல்லியது…இயேசப்பா…இந்த சாத்தான் பத்தி நீங்க சொல்லி இருக்கும் போது…… நீ சிருஷ்டிக்க பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்……ன்னு சொல்லி இருக்கீங்க….ஆனா இந்த சாத்தான் நீங்க உருவாக்கி பார்த்துக்க சொல்லி இருக்கிற இந்த ஏதேன் தோட்டத்திலேயே தனக்கு விரோதமா வர நினைக்கிற ஆட்களை கூட தன் ஞானத்தால் சுத்தமா இல்லாம ஆக்க நினைக்கிறானே!!!! அப்படி இருக்கும் போது ஏன் நீங்க அவனுடைய காரியத்தை தெரிந்த பிறகும் காப்பாற்றுகிற வேலையை கொடுத்தீங்க. இவனை ஏன் உங்க பரிசுத்த பர்வதத்தில உட்கார வைச்சி அக்கினி மயமான கற்களின் நடுவில் உலவ வைச்சீங்க…. அவள் நேரடியாகவே தன் தேவனிடம் தன் இருதயத்தில் இருந்த எல்லா வார்த்தைகளையும் கொட்டி விட்டாள்.

    தேவ ஞானத்தை குறைத்து மதிப்பிட கூடாது…என்று அவள் இருதயம் அவளுக்கு சொல்லி கொண்டே இருந்தாலும் ஏன்….என்று கேள்வி எழும்பாமல் இல்லை….

    அந்த வார்த்தைகள் அவள் கேட்டு கொண்டிருந்த அந்த நேரம் ஏதோ ஒரு கரம் அவள் கையை பிடித்து இழுப்பதை போல உணர்ந்தாள். அதுவும் கண்காணிப்பவரும், அந்த ஏஞ்சலும் பேசி கொண்டிருந்த அதே இடத்தை நோக்கி அது இழுத்து கொண்டு செல்லவும் உண்மையில் பயந்து போனாள். இயேசப்பா அங்க அந்த சாத்தானும், அந்த ஏஞ்சலும் பேசிட்டிருக்காங்க. ஆனா நான் இப்படி எனக்கே தெரியாம எங்கயோ போறேனே….அவள் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கே வந்து விட்டாள்.

    ஏன்….என்று தன் மனதில் சொல்லிய அந்த நொடி ஏதோ ஒரு பலமான காற்று தன்னை நோக்கி வருவதை அவள் உணர்வதற்குள் அது அவளை அப்படியே சுற்றி எங்கோ கொண்டு சென்றது…தீர்மானித்தே விட்டாள். சாத்தான்தான் ஏதோ தந்திரம் பண்றான்….என்று. அந்த காற்று தன்னில் இருந்த எலும்புகளை மட்டும் ரணமாக்க வில்லை….மொத்தமே தான் இறந்து விட்டதாகத்தான் அவள் நினைத்தாள்.

    ஆனா கண் விழித்து பார்த்த போது ஏதோ ஒரு புதிய இடத்தில் இருப்பதை மட்டும் உணர்ந்தாள் அவள். படுத்து கொண்டிருந்தது ஒரு மாட்டு தொழுவம்…ஏன் நான் இங்கே வந்தேன்…அவள் சொல்லி கொண்டிருந்த போதே அவள் பக்கத்தில் இருந்த மாடு இவளை அதிசயமாக பார்த்தது…. அப்பொழுதுதான் அந்த சத்தத்தை கேட்டாள்…அந்த பாத்திரத்தை எடுத்துட்டு வா ஜேம்ஸ்…..ஒருவர் சத்தம் கொடுத்து கொண்டே இவள் இருந்த தொழுவத்தில் தான் நுழைந்து கொண்டிருந்தார். அச்சோ…நான் என்ன பண்ணுறது…..அவள் நினைப்பதற்குள் அவளை நெருங்கி விட்டார்.

    ஏய் யாரு நீ….இங்க என்ன பண்ணிட்டு இருக்க….அவர் கேட்டு கொண்டிருந்த போதே வீட்டினில் இருந்து அவருடைய மனைவியும், அவரை போலவே இருந்த அவர் பையனும் வந்து விட்டனர்….ஆனால் அவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று மட்டும்தான் அவளுக்கு தெரிய வில்லை. இயேசப்பா இது எதுக்கு….எனக்கு ஒண்ணுமே புரியலை…மனதினில் சொல்லி கொண்டாள்.

    அவர் சத்தம் கூட அதிகரிக்க ஆரம்பித்தது…. நான் கேட்டும் பதில் சொல்லாம இருக்க…இங்க எதுவும் திருட வந்தியா….கேட்ட கேள்வியில் பயந்து போய் அழ ஆரம்பித்தாள். இயேசப்பா நான் என்ன செய்ய….தயவு செய்து சொல்லுங்க…நான் உங்க நீதியை புரிஞ்சுக்காம அதை குறித்து கேள்வி கேட்டதால இந்த பனிஷ்மென்ட்டா…..கேட்ட அந்த நொடி…..ஷீலா, அந்த பெரிய சாட்டையை எடு. ரெண்டு கொடுத்தா தானா பதில் வரும்னு நினைக்கிறேன்…..அவர் கிட்டதட்ட கர்ஜிக்க ஆரம்பித்தார்.

    அவள் என்ன சொல்லுவது என்று தெரியாமல் தான் நின்று கொண்டிருந்த இடத்திலயே நின்றாள்.

    இன்னிக்கி இயேசப்பா எனக்கு அடி உறுதி….மனதினில் சொல்லி கொண்டாள். அவர் தன் மனைவி இன்னும் சாட்டையை எடுத்து வராமல் நிற்கவும் உன்னை சொல்லி எத்தனை நேரம் ஆகுது…என்ன பண்ணிட்டு இருக்க….அவர் கோபப்படவும்….

    அவர் அருகில் வந்த அவர் மனைவி ஏதோ அவர் காதில் பேசவும் உண்மையில் அமைதியாகி போனார். ஒன்றும் பேசாமல் வீட்டிற்குள் அவர் நுழைவதையே ஆச்சரியமாக பார்த்தாள். ஏன் என்ன ஆச்சு….வாய் திறந்தே கேட்டு விட்டாள். அம்மாவையும், அப்பாவையும், புதியதாய் வந்து நின்ற அந்த பெண்ணையும் புரியாமல் பார்த்த வண்ணம் ஜேம்ஸ்…..

    ஜேம்ஸ்….குழாயில் தண்ணீர் பிடிச்சி அந்த தொட்டியில் நிரப்பு…அம்மா சொன்ன வார்த்தைக்கு ஒன்றும் எதிர் பேசாமல் ஜேம்ஸ் செய்த காரியத்தை பார்த்து கொண்டு நின்றாள்.

    நீ ஏன் அங்கயே நிற்கிற குட்டி….இங்க வா….ஷீலா அழைத்த போது ஒன்றும் சொல்லாமல் தொழுவத்தில் இருந்து வெளியே வந்தாள்.

    யார் இவங்க….. இங்க அப்படி என்னதான் நடந்திட்டு இருக்கு….. அவள் மனம் யோசித்து கொண்டே இருந்தது.

    நீ எதை குறித்தும் பயப்பட வேண்டாம் குட்டி…. என் பேரு ஷீலா….உன்னுடைய தேவனைதான் நாங்களும் தொழுது கொள்ளுறோம்….இப்போதைக்கு உனக்கு இந்த காரியம் தெரிந்தா போதும். உன்னை திட்டினது என்னுடைய கணவர்தான். அவர் பேரு பால். இவன் எங்க பையன் ஜேம்ஸ்….ஸ்கூல்ல பத்து படிக்கிறான்…. அவர் சொல்லி கொண்டிருந்த அவளில் கேள்விகள் எழும்பாமல் இல்லை….ஆனா என் தேவனை ஆராதிக்கிற குடும்பத்தில் இருந்து எனக்கு என்ன பிரச்சனை வந்திர போகுது……மனதை திடப்படுத்தி கொண்டாள்.

    இயேசப்பா நீங்க ஏன் இந்த இடத்திற்கு கூட்டிட்டு வந்தீங்கன்னு எனக்கு தெரியாட்டியும் கண்டிப்பா ஏதோ ஒரு பாடம் சொல்லி கொடுக்க போறீங்கன்னு மட்டும் தெரிஞ்சிகிட்டேன்….அவள் மனதில் சொல்லி கொண்டிருந்த போது

    உன்னை நேசிக்கிற தேவனை நீ எந்த வகையிலும் சந்தேகப்பட வேண்டாம்….அவர் உன்னை பாதுகாப்பான இடத்துக்கு தான் கூட்டிட்டு வந்திருக்காங்க……சொன்ன வார்த்தைகள் உண்மையில் ஆறுதலாக இருந்தது.

    உண்மையில் இவங்க யாரு. என் மனசில நான் நினைக்கிற காரியங்கள் எல்லாம் இவங்களுக்கு தெரியுதே…ஆனா பார்த்தா இவங்க ஏஞ்சல் மாதிரி தெரியலையே. என்னை மாதிரி ஒரு சாதாரணமா ஆளா தெரியுறாங்க….சொல்லி கொண்ட அவள் அடுத்த நொடியே தன் வார்த்தையை திருத்தி கொண்டாள். பார்க்க இவங்க சாதாரணமா இருந்தாலும் ஆவிக்குரிய காரியத்தில் இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியாதே….சோ நானே எதையும் தீர்மானிக்கலை இயேசப்பா…உங்க பொண்ணுன்னு சொன்னதே எனக்கு சந்தோசம்…..மனதினில் சொல்லி கொண்டாள்.

    மனசை போட்டு எதையும் குழப்பிக்காம போய் குளிச்சிட்டு வா….சொன்ன போது அப்போ…நான் இந்த வீட்டில் இன்னும் எத்தனை நாள் தங்கணும்….. அவள் யோசித்து கொண்டிருந்த போதே

    இந்த ஒரு நாள்தான் குட்டி….அடுத்து நீ உன் தேவன் சொன்ன காரியத்தை நிறைவேற்ற உடனே கிளம்பலாம்……. உண்மையில் அவள் மயக்கம் போடாத குறைதான். எப்படி என்னை பற்றி இத்தனை தூரம் தெரிஞ்சி வைச்சிருக்காங்க….என்னை பற்றி எப்படி இவங்களுக்கு ஏற்கனவே தெரியும்??? மனதில் கேட்டு பிரயோஜனம் இல்லை….நேரடியாக கேட்பதுதான் பெஸ்ட்….என்று நினைத்தவள் கேட்டும் விட்டாள்.

    அதை குறித்து பிறகு உனக்கு சொல்லுறேன்….ஆனா இப்ப குளிச்சிட்டு எங்களோட சாப்பிட வாமா…..அவர் சொல்லிய அன்பில் கீழ்படிய தான் மனம் விரும்பியது.

    குளித்து விட்டு வந்தவளுக்கு அவளுக்கு தேவையான எல்லா டிரெஸ்ஸையும் அவள் பாத்ரூம் அருகேயே ஜேம்ஸ் அம்மா வந்து வைக்கவும்….சப்போஸ் இவங்க வீட்டில் என்னை மாதிரியே ஒரு பொண்ணு இருக்கா??? எப்படி எனக்கே ஏத்த மாதிரி டிரஸ் எத்தனை பொருத்தமா வைச்சிருக்காங்க…..சொல்லி கொண்டவள் டிரஸ் மாற்றி விட்டு அந்த வீட்டின் ஹாலில் நுழைந்தாள். அவள் வீடு மாதிரி இல்லாமல் கிராமத்து பாணியில் கட்டப்பட்ட வீடாக தெரிந்தது….. ஒரு பெரிய ஹால்….அடுத்து ஒரு சின்ன கிச்சன்….அடுத்தது ஒரு சின்ன அறை…அவ்வளவுதான்….சின்ன வீடாக தெரிந்தாலும் ரொம்பவே அம்சமாக தெரிந்தது அவளுக்கு அந்த வீடு.

    ஹாலில் அவளுடைய வருகைக்காக தான் ஜேம்ஸ் அம்மா காத்து கொண்டிருந்தார் அவளை பார்த்ததும் சிரித்தவராய் ….சாப்பிடுறியா குட்டி….என்ற போது

    சாப்பிட்டு கொண்டிருந்த அவருடைய கணவர் அவரை பார்த்து முறைத்தது அவளுக்கும் புரிந்தது. என்னால பாவம் இவங்களுக்குள்ள பிரச்சனை….கஷ்டமாய் உணர்ந்தாள்.

    உள்ளே வாமா…..அவர் கூறிய போது தயக்கமாய் உள்ளே வந்தாள். ஜேம்ஸ்…நீ பாப்பாவை கூட்டிட்டு வந்து உன் பக்கத்தில் உட்கார வை….சொன்ன போது ஒரு நொடிதான் அவன் ஆச்சரியப்பட்ட விதம் புரிந்தது. ஆனால் அடுத்த நொடியே எழுந்து வந்தவன் அவள் கையை பற்றி கொண்டு தன் அருகில் உட்கார வைத்தான்.

    அவளுக்கும், அவனுக்கும் தட்டில் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார் அவர். சாப்பாடை ரொம்பவே ரசித்து சாப்பிட்டாள். தன்னை சுற்றி நடக்கும் எந்த காரியத்தையும் அவள் உணர்ந்து கொள்ள முடியா விட்டாலும் தன் தேவன் தனக்கு எல்லாவற்றையும் நன்மையாக முடித்து தருவார் என்பதில் மட்டும் அதிக நம்பிக்கை வைத்தாள்.

    உனக்கு தூக்கம் வந்தா தூங்கலாம்…ஏன்னா ஜேம்ஸ் ஸ்கூல் கிளம்பியாச்சு….என்று அவர் சொன்ன போது….அச்சோ….நான் ஸ்கூல் போகணுமே…அவள் சொன்ன அந்த நொடி மீண்டும் ஜேம்ஸ் அப்பா இவள் அருகில் வந்தவராய் உன் பேரு என்ன….எந்த ஊர்ல இருந்து வந்திருக்க…. அவர் கேட்ட போது

    தன் பேரை சொன்னாள்….சொன்ன போது அவர் முகம் ஆச்சரியத்தால் நிறைந்ததை அவளும் பார்த்தாள். தன் மனைவியின் முகத்தை பார்த்தவர்….ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்தவராய் வீட்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தார்….ஏன் என்ன ஆச்சு…என் ஊரு பேர் கூட கேட்கலை…அதுக்குள்ள….அவள் கேட்ட போது

    ஒன்றும் பதில் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்தார் அவர். என்னை  சுத்தி என்ன நடக்குது…எல்லாம் ஆச்சரியம் நிறைந்ததா இருக்கு…. அவள் யோசித்து கொண்டிருந்த போதே ஜேம்ஸ் தன் யூனிபார்மில் வந்து நின்றான். அம்மா….நான் கிளம்புறேன்….நான் திரும்பி வரும் போது பாப்பா வீட்டில் இருப்பாளா….கேட்டவனுக்கு அவன் அம்மாவால் ஒரு புன்னகையை மட்டும் தான் கொடுக்க முடிந்தது.

    அது நம்ம இயேசப்பா சித்தம்….சொன்ன போது அவன் முகத்தில் சிறிது வருத்தம் தெரிந்ததை அவளும் பார்த்தாள். ஏன்….நான் யார்ன்னே தெரியாது…ஆனா இவங்க என் மேல ஏன் இத்தனை பாசம் வைக்கணும்…. அவள் மனம் கேள்வி கேட்டது.

    பை….என்று அவளுக்கு கையசைத்து கிளம்பினான் ஜேம்ஸ். அவன் கண்களில் இருந்து மறைந்த அந்த நொடி இப்பனாச்சும் நீங்க சொல்லுவீங்களா ஆன்ட்டி. நான் ஏன் இந்த இடத்திற்கு வந்தேன்ன்னு எனக்கு தெரியாது ஆனா உங்களுக்கு எப்படி என்னை தெரியும். முதல்ல அங்கிள் ரொம்பவே கோபப்பட்டார்…ஆனா என் பெயரை கேட்டவுடன் ஒண்ணும் சொல்லாமல் அப்படியே அமைதியா போயிட்டார்…. எங்க அம்மா, அப்பா, ஊர் பேரு எதுவும் அவர் கேட்கலை. ஜேம்ஸ் அண்ணா கூட என்னை பாப்பான்னு சொல்லுறாங்க…நீங்க யாரு….என்னை எப்படி உங்களுக்கு தெரியும்??? கேட்ட போது அவர் கண்களில் கண்ணீர் வந்ததை அவள் கவனித்தாள். உடனே அதை துடைத்தவராய்

    உனக்கு தரிசனத்தில் நம்பிக்கை இருக்கா??? கேட்ட போது

    ம் நம்பிக்கை உண்டு….ஆனா எனக்கும் தரிசனத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்குது??? கேட்டவளை பார்த்து சிரித்தவராய்

    நீ யாரு, உன் பெயர் என்ன?? உன்னை நம்ம தேவன் எப்படி நடந்திட்டு இருக்காங்க….எல்லா காரியமும் என் இயேசப்பா எனக்கு சொன்னாங்க….அவர் சொன்ன போது உண்மையில் ஒரு நொடி மூச்சடைத்து போனாள். இந்த மாதிரி கூடவா முடியும்….ஆச்சரியத்தின் உச்சத்தில் அவள்.

    உன்னை தேவன் ரொம்பவே அழகான விதத்தில் பயன் படுத்திட்டு இருக்காங்க என்பது மட்டும் எனக்கு தெரியும். ஆனா எந்த வகையில் என்பதை ரொம்பவே நம்ம தேவன் மறைவா வைச்சிட்டாங்க…. அவர் சொன்ன போது ஆச்சரியப்பட்டாள். தேங்க்ஸ் இயேசப்பா….உங்க நாமத்திற்கே என்றென்றும் மகிமை உண்டவாதாக!!! சொன்னாள் அவள்.

    அப்ப நம்ம இயேசப்பா உங்களோட தரிசனம் மூலமா பேசுவாங்களா??? அவள் ஆச்சரியமா கேட்ட போது

    கண்டிப்பா….தேவன் தன் பிள்ளைகளுக்கு என்றும் தன்னை வெளிப்படுத்த தயங்குறதே இல்லை. அதுல ஒரு வகை தான் இந்த தரிசனம் மூலமா தன் பிள்ளைகள் கிட்ட பேசுறது…..அவர் சொன்ன போது

    ஆனா சில நேரங்களில் நம்ம எண்ணங்கள் கூட கனவா வர்றது உண்டே ஆன்ட்டி….எப்படி நம்மளால் இதை பிரிச்சி பார்க்க முடியும்….. அவள் கேட்ட போது

    இதுல ரொம்ப ஒண்ணும் கஷ்டம் கிடையாது குட்டி. உனக்கு வந்த கனவா இருக்கட்டும் இல்லை தரிசனமா இருக்கட்டும் நம்ம தேவ சந்நிதானத்தில் உட்கார்ந்து அவர்கிட்ட கேட்டா போச்சு….அது வெறும் கனவா….இல்லை நம்ம தேவன் நமக்கு உணர்த்த நினைக்கிற அவருடைய காரியமா???….சொன்ன போது அவள் சிரித்தாள்.

    நீங்க சொன்ன இதே காரியத்தை தான் எங்க அம்மாவும் ஒரு முறை சொன்னாங்க….அவள் சொன்ன போது

    உங்க அம்மா மேல உனக்கு ரொம்ப பிரியம் உண்டா??? அவர் தீடீர்னு அந்த கேள்வியை கேட்ட போது அவள் சிரித்து கொண்டே

    ரொம்ப….ரொம்ப……எனக்கு எங்க அம்மாவையும், அப்பாவையும் ரொம்ப பிடிக்கும்….என்று சொன்னவளை பார்த்து கொண்டே இருந்தார்.

    எனக்கு ஒரு சந்தேகம் ஆன்ட்டி….கேட்கலாமா??? கேட்டவளை பார்த்து

    கண்டிப்பா….சொல்லி சிரித்தார்.

    நீங்க ஏன் என்னை குட்டின்னு கூப்பிடுறீங்க??? கேட்டவளை பார்த்து

    அது நாங்க எங்களுடைய பொண்ணை அப்படி கூப்பிடும்னு நினைச்சிருந்தோம். எங்களுக்கு பெண் பிள்ளை கிடையாது. இப்ப எங்க வீட்டிற்கு வந்திருக்கிற முதல் பெண் பிள்ளை நீதான். அதுனால தான் உன்னை அப்படி கூப்பிட்டேன்…..சொல்லிய போதே அவர் குரலில் இருந்த வருத்தத்தை அவள் புரிந்து கொண்டாள்.

    உனக்கு எதுவும் வித்தியாசமா இருந்தா சொல்லிரு….நான் அப்படி இனிமே கூப்பிடலை……. அவர் சொன்ன போது அவசரமாக மறுத்தாள். இல்லை ஆன்ட்டி…நீங்க என்னை அப்படியே கூப்பிடுங்க….சொல்லி விட்டு அமைதியானாள்.

    அந்த நேரத்தில் தொழுவத்தில் இருந்து வந்த சத்தத்தில் உடனே….. நீ இங்கயே இருமா…இப்ப வந்திட்டேன்….  சொல்லி விட்டு ஓடினார். ஏன் என்ன ஆச்சு….அவளும் அவருக்கு பின்னாலயே வந்தாள்.

    ஒரு காளை தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மாட்டை முட்டி கொண்டிருந்தது. அடி பட்ட மாட்டின் கழுத்து பகுதியில் கீறல் பட்டு சிறிது ரத்தம் வேறு எட்டி பார்த்தது. வலியில் தான் அந்த மாடு கூப்பிட்டது என்பதை அவளும் தெரிந்து கொண்டாள்.

    அந்த காளை மாட்டை அந்த இடத்தில் இருந்து மாற்றி சிறிது தூரத்தில் கட்டி கொண்டிருந்தவர் குட்டி, அந்த கண்ணாடிக்கு முன்னாடி ஒரு குட்டி டப்பா இருக்கு பாருமா….அதை எடுத்துட்டு வா….. என்று சொன்ன போது அவளும் தேடி பிடித்து அதை அவர் கையில் கொடுத்தாள்,

    அதை திறந்தவர் அதில் இருந்த மருந்து பொடியை அந்த அடிபட்ட மாட்டின் கழுத்தில் போட்டார். அப்பொழுது அந்த சாம்பல் நிற காளை அத்தனை தூரம் இருந்தாலும் கயிறை பிய்த்து கொண்டு மீண்டும் அந்த மாட்டை முட்ட வருவது போல தான் திமிறி கொண்டு நின்றது. பார்த்தவளுக்கு ஆச்சரியம்….ஏன் இந்த சாம்பல் நிற காளை இப்படி பண்ணுது……கேட்ட போது

    அது ஒண்ணுமில்லை குட்டி…. இதுதான் நாங்க முதல்ல வாங்கின காளை. ஆனா எப்ப இந்த மாடு வந்திச்சோ அப்போதையில் இருந்து இந்த சாம்பல் நிற காளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை…எப்ப பார்த்தாலும் முரட்டு தனம்….தன் இடத்தை இது பிடிச்சிரும்னு….தேவையில்லாத பயம்….இதோட எத்தனை தடவை இதே மாதிரி நடந்திருச்சு தெரியுமா….. இது இந்த மாட்டை மட்டுமில்ல எல்லாத்தையும் இப்படி தான் பண்ணுது…இந்த வீட்டுக்கு வருகிற ஆட்களை கூட இதே மாதிரிதான் தாக்க வருது…நீ மட்டும்தான் பிழைச்ச……. அவர் சொன்ன போது இதுதான் என் இயேசப்பா சொல்ல நினைக்கிற சத்தியமா???மனதினில் கேட்டு கொண்டாள்,

    இந்த சாம்பல் நிற காளை எங்கயோ அர்த்தம் சொல்லுதே….. சாத்தான்….கண்டிப்பா அதுதான்….நான் கூட இயேசப்பாகிட்ட கேட்டேனே…ஏன் இந்த சாத்தான் தனக்கு விரோதமா வர நினைக்கிற ஆட்களை சுத்தமா இல்லாம ஆக்க நினைக்கிறான்…..ஆனா இங்க அந்த மாடு சாம்பல் காளைக்கு விரோதி கிடையாது. அதுவா தான் அப்படி நினைச்சிருக்கு…… அதே மாதிரிதான் சாத்தான் கூட யார் அந்த ஏதேன் தோட்டத்திற்கு போனாலும் விரோதியா நினைக்கிறானா????தனக்குள்ளேயே கேட்டு கொண்டாள். ஆனா நான் கேட்ட கேள்வியில் ஒரு பகுதி நீங்க சொல்லி கொடுத்திட்டீங்க…அடுத்த பகுதி பிரெண்ட்….அவள் கேள்வியுடன் அவர் முகத்தை பார்த்தாள்.

    நீ என்ன நினைக்கிறேன் எனக்கு புரியுது குட்டி. அப்ப இதை வெளியே எங்கயாவது விடாம மத்த மாடுகளுக்கு பிரச்சனை தருகிற மாதிரி ஏன் இங்கயே வைச்சிருக்கீங்க…சரியா…..அவர் கேட்ட போது அவளும் தலை அசைத்தாள்.

    ஒரு மாசமா இதுக்கு டைம் கொடுத்தாச்சு குட்டி. இதை நாங்க ரொம்பவே விரும்புறோம்….நாங்க எந்த வகையிலும் தாழ்வா நினைக்கலைன்னு உறுதி பண்ண தினமும் இதை மட்டும் உங்க அங்கிள் தனியா மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போவாங்க….அடுத்து ருசியுள்ள ஆகாரம் வேறு….மற்றவங்களுக்கு கூட கொடுக்காம இதுக்குன்னு தனியா….. அடுத்து சில நேரம் சிறப்பு அலங்காரம் வேறு இதுக்கு செஞ்சாச்சு….இனிமே வேறு என்ன செய்ய முடியும் இதை…..எந்த காரியத்தையும் புரிந்து கொள்ளுற நிலையில் இல்லை அது.

    இப்ப மேட்டிமை வேறு அதிகமா ஆச்சு…..முந்தி முட்ட வெறும் கொம்பை முறுக்கிட்டுத்தான் வரும். இப்ப முட்டி காயப்படுத்த வேறு செய்யுது….இப்ப உங்க அங்கிள் இதை கூட்டிட்டு போக கசாப்பு கடைக்காரரை தான் கூப்பிட போயிருக்காங்க…..இன்னிக்கோட அது வாழ்க்கை முடிந்தாலும் முடிஞ்சிரும்….. அவர் சொன்ன போது தான் தன் தேவனிடம் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோசத்தில் குதிக்க நினைத்தாள். ஆனாலும் தன் அருகில் ஆன்ட்டி இருந்ததால் அடக்கி வாசித்தாள்.

    இயேசப்பா அப்ப சாத்தான் குணம் தெரிந்தும் நீங்க அவனுக்கு கொடுத்த பதவி உயர்வு நீங்க அவன் மேல வைச்சிருந்த அன்பை வெளிபடுத்த….ஆனா அடுத்தும் கூட அவன் அதை புரிய தவறின காரியத்தால் தான் அவனை நீங்க அவன் இடத்தில் இருந்து தள்ள வேண்டியதா போச்சா இயேசப்பா…. அவள் கேட்ட போது அவளை தொட்ட மெல்லிய காற்றில் சந்தோசம் அடைந்தவளாய் தேங்க்ஸ் இயேசப்பா….நீங்க வெளிபடுத்தின சத்தியத்திற்காக நன்றிகள் ஆண்டவரே…..ஒரு சாம்பல் நிற காளை மூலமா எத்தனை பெரிய சத்தியத்தை இந்த தகுதி இல்லாத பாத்திரத்துக்கு சொல்லி கொடுத்திருக்கீங்க…..அவள் மனதில் சொல்லி கொண்டாள்.

    இயேசப்பா , நீங்க எனக்கு சத்தியத்தை சொல்லி கொடுத்திட்டீங்க….அப்ப நாம திரும்பவும் ஏதேன் தோட்டம் எப்ப போறோம்….அவள் கேட்டு கொண்டிருந்த சமயத்தில்

    உனக்கு தூக்கம் வந்தா போய் தூங்குமா??? அவர் சொன்ன போது அதை சாக்காக எடுத்து கொண்டவள்….தேங்க்ஸ் ஆன்ட்டி….நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன் சரியா….சொன்னாள்.

    அவளோடு வந்தவர் அவளுக்கு பெட்டை சரி பண்ணி கொடுத்த பிறகு…..குட் நைட் ஆன்ட்டி….. சொல்லி கண்களை மூடினாள். அவளை பார்த்து சிரித்தவர்.…சரிமா….என்றவாறு வெளியேறினார்.

    தேங்க்ஸ் இயேசப்பா….எத்தனை பெரிய சந்தோசத்தை நீங்க எனக்கு கொடுத்திருக்கீங்க. சாத்தான் உயர்வு குறித்து எனக்குள்ள நிறையவே குழப்பம் இருந்துச்சு….ஆனா என்ன அழகா நீங்க எனக்கு உங்க சத்தியத்தை சொல்லி கொடுத்திருக்கீங்க…..தேங்க்ஸ் இயேசப்பா…..சொல்லி கொண்டே இருக்கும் வண்ணம் இருந்தது அவளுக்கு….என் தேவன் சாத்தானுக்கு கூட எத்தனை அழகான சந்தர்ப்பத்தை கொடுத்து அவன் மேல வைச்சிருந்த அன்பை உணர்த்திருக்காங்க….ஆனா அதை கூட உணராம போயிட்டானே….சிறிது கலக்கமாக கூட உணர்ந்தாள்.

    அப்பொழுதுதான் ஜேம்ஸ் அப்பா வரும் சத்தம் கேட்கவும் இன்னும் இறுக்கமாக கண்களை மூடி கொண்டாள். பாவம் என்னால காலையிலயே டென்ஷன் ஆகிட்டார் அங்கிள்…இப்பவும் கஷ்டப்படுத்த வேண்டாம்….மனதினில் நினைத்தவளாய் தூங்க முயற்சித்தாள்.

    அவர் இருமும் சத்தம் கூட கேட்டு கொண்டுதான் இருந்தது….இயேசப்பா நீங்க இங்க என்னை கூட்டிட்டு வந்த விசயம் முடிஞ்சிருச்சே….சாரி பிரெண்ட்….உங்க சித்தம் இருந்தா நாம கிளம்பலாமா…..தன் தேவனிடம் வேண்டி கொண்டிருந்தாள்.

    குட்டி…..தூங்கிட்டாளா….ஜேம்ஸ் அப்பா கேட்கவும் அவளுக்கு ஆச்சரியம். என்னை காலையில் பிடிக்காமல் இருந்தவருக்கு இப்ப தனக்கு பிடிச்ச பெயரை வைச்சி என்னை கூப்பிடுறாங்க…. வியந்தாள்.

    ஜேம்ஸ் அம்மா அவளை அந்த அறையில் பார்க்க வந்ததை தெரிந்து கொண்டாள். வேறு வழியில்லாமல் தூங்கின மாதிரி நடித்தாள்.

    ஜேம்ஸ் அம்மா பேசுவதும் அவளால் கேட்க முடிந்தது. ம் தூங்கிட்டா….நீங்க அவளை குட்டின்னு கூப்பிடுறீங்க…..வியப்போடு கேட்டார்.

    குட் ஆன்ட்டி…எனக்கு இருந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கே….மனதினில் பாராட்டினாள்.

    நீ ரெண்டு நாள் முன்னாடி சொன்னப்ப நான் நம்பலை. ஆனா நான் என் கண் முன்னால பார்த்தப்ப…..எவ்வளவு பெரிய ஆச்சரியம்…. தேங்க்ஸ் lord….சொன்ன போது அவள் மனதினிலும் சில எண்ணங்கள் தோன்றியது.

    இல்லை….இதுக்கு மேல நாம தூங்காம இருந்தா நல்லது கிடையாது. ஒட்டு கேட்ட மாதிரி ஆயிரும்…இயேசப்பா ப்ளீஸ்….என்னை தூங்க வைங்க….மனதினில் வேண்டி கொண்டாள் தன் தேவனிடம்…..

    இனிமே நம்ம பொண்ணு நம்ம கூட இருக்கட்டும்…அவ திரும்பவும் மெட்ராஸ் போக வேண்டாம்…..ஜேம்ஸ் அப்பா உடைந்த குரலில் சொன்ன போது உண்மையில் பயந்து போனாள்.

    நான்….பொண்ணா….இது வரைக்கும் நான் எந்த ஊருன்னு கூட இவங்களுக்கு சொல்லலை….ஆனா நான் மெட்ராஸ் என்பது…..கேள்விகள் வந்து கொண்டே இருந்தது.

    பத்து வருசங்களுக்கு முன்னாடி இப்ப அவளை வளர்த்திட்டு இருக்கிற அவ அம்மா, அப்பாக்கு நாம கொடுத்த வாக்கை ஏன் மறந்து போறீங்க….ஜேம்ஸ் அம்மா சொன்ன போது

    அவ நம்ம பொண்ணு…நமக்கு பிறந்த பொண்ணு….அவளை கண்ணில் பார்த்த பிறகு என்னால விட்டு கொடுக்க முடியாது….பத்து வருசத்துக்கு முன்னாடி அவ குழந்தையா இருந்தப்ப வேண்டாம்னு நான் தான் சொன்னேன். ஆனா அப்ப அவளை விட்டு கொடுக்க முடியாதுன்னு சொன்ன நீ இப்ப ஏன் பிள்ளையை கண்ணில் பார்த்த பிறகும் கல்லு மாதிரி இருக்க….ஜேம்ஸ் அப்பா…..இல்லை அவள் அப்பா கோபப்பட்டு கொண்டிருந்ததை அவளும் கேட்டாள்.

    அவ இப்ப நம்ம பொண்ணு இல்லை. அதை நல்லா தெரிந்து கொள்ளுங்க….அவளை அவளுடைய அவ அம்மா, அப்பா நல்லா பார்த்து கொள்ளுறாங்க….தேவன் பயன்படுத்துகிற பாத்திரமா இருக்கா….இல்லை….அவ மேல நமக்கு உரிமை என்றும் இல்லை….பார்க்க ஆசைப்பட்ட என் ஆசையையும் நிறைவேற்றிட்டாங்க…இதுக்கு மேல எனக்கு எந்த ஆசையும் இல்லை….சொல்லி விட்டு அவர் அவர் அழுத சத்தம் அவளுக்கு தெளிவாக கேட்டது.

    இயேசப்பா….இது என்னது…என்னமோ என்னை சுத்தி நடந்திட்டு இருக்கு….உண்மையில் நான் யாருப்பா….இது எதுவும் கனவா….. கண்களை திறந்து பார்த்தாள்.

    உண்மை என்பதை அவள் படுத்து கொண்டிருந்த இடமும், அடிக்கடி கத்தி கொண்டிருந்த மாடுகளின் சத்தமும் உறுதி பண்ணியது….ஏன் இயேசப்பா…..துக்கத்தின் அதிக உச்சத்தில் மனதினில் கதறி விட்டாள்….ப்ளீஸ் பிரெண்ட்…….என்னை காப்பாத்துங்க………

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    1 + = eight

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>