-
கனிகொடா அத்திமரம்
கனிகொடா அத்திமரம் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா 13:6-9 இல் எழுதப்பட்டுள்ளது. இது பாவ வழிகளை விட்டு திரும்பாதவர்களுக்கு நடக்கவிருப்பதை விளக்கும் கதையாகும். மத்தேயு, மாற்கு நற்செய்திகளில் அத்திமரம் பற்றிய குறிப்பு உள்ளது, ஆனால் அவை உவமை வடிவில் இல்லாமல், இயேசு ஒரு கனிகொடா அத்திமரத்தைக் கண்டு அதனை சபித்ததாகவும் உடனே பட்டுப்போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
உவமை
——————
ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளிடம், “பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன், எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் வீணாக அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்றார். தொழிலாளர் மறுமொழியாக, “ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப் போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி, இல்லையானால் இதை வெட்டிவிடலாம்” என்று அவரிடம் கூறினார்..
பொருள்
——————-
இதில் தோட்டக்காரர் கடவுளாகும். தொழிலாளர் பரிசுத்த ஆவியாகும். ஒரு மனிதனுக்கு கடவுள் அவனது பாவ வழிகளை விட்டு திரும்ப பல சந்தர்ப்பங்களை கொடுப்பார். ஆனால் பலன் இல்லாது போனால் கனிகொடா அத்திமரம் வெட்டப்பட்டு தீயில் போடப்படுவது போல நரகத்தில் தள்ளப்படுவார்கள்..
Original Source From: ta.wikipedia.org
கனிகொடா அத்திமரம்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives