• மனம் திரும்பி விட்டீர்களா???(4)

    நமது ஆத்துமா

    jesus18

    ஹாய் பிரெண்ட்ஸ், ஏற்கனவே மனம் திருப்புதல்ன்னா என்னன்னு நீங்க உங்களேயே கேட்க ஆரம்பித்த சத்தம் நம் இயேசப்பாவையும் கண்டிப்பா தொட்டிருக்கும்னு நம்புறோம்.

    முதலில் இந்த மனம்னா என்னன்னு தெரிந்தா தான அதில் என்ன திரும்பனும், எது திரும்ப கூடாதுன்னு நம்மால புரிந்து கொள்ள முடியும் பிரெண்ட்ஸ்…..

    சரி நீங்களே சொல்லுங்க, இந்த மனம்னா என்ன??? இது கூட தெரியாதா??? அது வேற ஒண்ணும் இல்லை….சில நேரம் நமக்கு ஏதாவது தாங்க முடியாத துயரம் ஏற்படுற சமயம்…… ஏதோ நம்ம இதயத்துக்கும், நம்ம தொண்டைக்கும் நடுவில ஒண்ணு ரொம்பவே வேதனைப்படுற மாதிரி தோணுமே….அதுதான் மனசு……இன்னும் சிலபேரு சொல்ல  ஆரம்பிச்சிட்டீங்க பிரெண்ட்ஸ்….. அதான் மன சாட்சி….மன சாட்சின்னு எல்லாரும் சொல்லுறாங்களே…அதுக்கு பேர்தான் மனசு…..நாம என்ன காரியம் பண்ணினாலும் நமக்கு முன்னாடியே நாம என்ன செய்யணும் என்பதை அந்த மன சாட்சிதான தீர்மானிக்குது….. நீங்க சொன்ன உங்க வார்த்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்!!!

    நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொன்ன மனசு என்கிற காரியத்தை இது வரை நம்ம கண்கள் பார்க்க முடியா விட்டாலும் கூட, அது நமக்குள்ள இருந்து நம்ம நல்லதை, கெட்டதை தீர்மானிக்குது என்பது மட்டுமில்ல அதுவும் நம்ம உடம்பு எப்படி நம்ம நல்ல கெட்ட காரியங்களால் பாடுபடுதோ அதே மாதிரி கண்டிப்பா பாடுப்படுது என்பது மட்டும் நம்மால் மறுக்க முடியாத உண்மை…..எப்படி ரொம்பவே சின்ன குழந்தைகள் தனக்கு வயிறு பசிக்குதுன்னு கூட சொல்ல முடியாத நாட்களில் சோறு பசிக்குதுன்னு சொல்லுவாங்களே அது மாதிரி,  அடுத்து அம்மா, எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது, சாப்பாடு தாங்கன்னு சொல்லுற மாதிரி இந்த மனசும் கூட நாம சந்தோசப்படும் போதும், கஷ்டப்படும் போது நம்ம கூட இருந்து தன்னுடைய உணர்வுகளை வெளிபடுத்தும். அது எங்க இருக்குன்னு நம்மால தெளிவா சொல்ல முடியாத காரணத்தினாலதான் நாமளும் நம்ம இஷ்டத்துக்கு சொல்லுறோம்…..துக்கம் தொண்டையை அடைக்குதுன்னும், ஏதோ இதயமே ரொம்பவே லைட்டான மாதிரி தோணுதுன்னும் நமக்கு தெரிந்த பெயர்ல நாம நம்ம மனசை சொல்லிக் கொள்ளுகிறோம்……..

    சரி நமக்கு தெரிந்த காரியங்களை எல்லாம் இந்த மனசை குறித்து ஏற்கனவே அடுக்கிட்டோம்….இனிமே நம்ம இயேசப்பா இந்த மனசை குறித்து என்ன சொல்லுறாங்கன்னு கேட்கலாமா??? ரொம்ப ஈஸியா இதை நம்ம தேவன் சொல்ல நினைக்கிறார்….நீ மனசுன்னு ஒண்ணை கண்டுபிடிக்க முடியாத இடத்தில ஏன் தேடுற குட்டிமா??? உண்மையில் மனசுன்னா உன்னை என்னைக்கி என்னுடைய ரூபமா படைச்சேனோ  அன்னைக்கே அதையும் சேர்த்துதான் படைத்தேன்.அதாவது நம்ம தேவன் எப்படி ஆவி, ஆத்துமா, சரீரம் என்கிற மூன்று பண்புகளோட இருக்கிறாரோ அதே மாதிரிதான் முதன் முதலில் நம்ம முற்பிதாவான ஆதாமை படைக்கும் போது, நம்ம தேவன் நம்மை படைக்கும் போதும் ஆவி, ஆத்துமா, சரீரம் என்கிற மூன்று பண்புகளோட படைச்சிட்டாங்க……உடனே நமக்குள்ள சின்ன சந்தேகம் வரலாம்….. இந்த மூணுல நம்ம தேவன் நம்மகிட்ட சொல்லுற மனசுன்னா எது??? நம்ம சந்தேகம் ரொம்பவே நியாயமான ஒண்ணு பிரெண்ட்ஸ்….அதுனால அந்த சந்தேகத்தையும் என் தேவன் ஏதாவது சொல்லிருவாங்களான்னு நீங்க பயப்பட வேண்டாம்…..

    இந்த நேரத்தில் நம்ம இயேசப்பா நம்மகிட்ட ஒரு காரியத்தை பகிர்ந்து கொள்ள ஆசைபடுறாங்க பிரெண்ட்ஸ்…..அது என்னதுன்னா நாம பைபிள் படிக்கும் போது ஏற்படுகிற நியாயமான கேள்விகளை நம்ம தேவன் என்றும் குறை சொல்லுகிறதில்லையே….ஆனா குறை பார்க்கணும்னு நினைச்சே படிக்கும் போதுதான் நம்ம தேவன் ரொம்பவே வேதனைபடுறாங்க….சில நேரத்தில கோபம் கூட படுறாங்க….அதுனால சப்போஸ் நாம நம்ம பைபிளை படிக்கும் போது ஏதாவது சந்தேகம் வந்தா தயக்கம் இல்லாம அதை நமக்கு எழுதி கொடுத்த நம்ம இயேசப்பாகிட்டயே கேளுங்க….அப்பா, இந்த மாதிரி இந்த பக்கத்தில நீங்க சொல்லி இருக்கிற சத்தியத்தை என்னால புரிஞ்சுக்க முடியலை….அதுனால தயவு செய்து எங்களுக்கு சொல்லி கொடுங்கன்னு நீங்க கேட்டா கண்டிப்பா அந்த பகுதிக்கான விளக்கத்தை எப்படியாவது நம்ம தேவன் உங்களுக்கு புரிய வைப்பார்….. தீடீர்னு உங்க வீட்டுக்கு விசிட் வருகிற உங்க சொந்தகாரங்க மூலமாகவோ, இல்லை அந்த வார துவக்கத்தில நீங்க கலந்து கொள்ளுகிற சர்ச் மீட்டிங்கில் பேசுற ஊழியக்காரர் மூலமாகவோ இல்லை ரொம்ப வேண்டாம் உங்க குழந்தை பேசுற மழலை மொழியில் கூட உங்க தேவன் தன் சத்தியத்தை வெளிபடுத்த முடியும்…..அதுனால தன் வார்த்தையை தேடுகிற தன் பிள்ளைகளுக்கு அவர் என்றும் பதில் சொல்ல ஆர்வமா இருக்கிறாங்க….அதை விட்டுட்டு அந்த பைபிளை யார் படிப்பா….ஒரு பகுதி கூட புரியலைன்னு வீணா விதண்டாவாதம் பேசிட்டு இருக்காதீங்க….அது நம்ம தேவனுக்கு கொஞ்சம் கூட பிடித்தம் இல்லாத காரியம்…..

    சரி நாம நம்ம தேவன் சொல்லி கொடுத்த ஆவி, ஆத்துமா, சரீரத்தை குறித்து இப்ப பார்க்கலாமா? நம்ம நியாயமான சந்தேகத்துக்கு நம்ம இயேசப்பா என்னதான் பதில்  சொல்லுறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா? இந்த மூணு காரியத்தில நாம மனசுன்னு ஒண்ணை தேடிட்டு இருந்தோமே அது வேறு ஒண்ணுமில்லை பிரெண்ட்ஸ்…..அது நம்ம ஆத்துமா என்கிற இடத்தைதான் பெற்று இருக்கு… சோ, இனிமே யாராவது மனசாட்சின்னு சொல்லும் போது அது என்னது…ஏதும் தொண்டைக்கும், இதயத்துக்கும் நடுவில பந்து உருள மாதிரி இருக்குமோன்னு கற்பனை பண்ணிராதீங்க….. நம்ம தேவன் நமக்கு சத்தியத்தை சொல்லி கொடுத்த பிறகும் அதை காத்தில பறக்க விட்டுட்டு மீண்டும் தேடின இடத்திலேயே தேடிட்டு இருக்காதீங்க….ப்ளீஸ்….

    சரி மனசுன்னா என்னன்னு நம்ம இயேசப்பா சொல்லி கொடுத்துட்டாங்க. அப்ப மனம் திரும்புதல்ன்னா ஆத்துமா திரும்புதலா??? உங்க மனது ஏற்கனவே கேள்வி கேட்க ஆரம்பிச்சிருச்சு…… சரி ஒண்ணு செய்யலாமா பிரெண்ட்ஸ்…நம்ம பைபிள்ல இருக்கிற ஆத்துமான்னு நம்ம பரிசுத்த ஆவியானரால் எழுதப்பட்டிருக்கிற எல்லா இடங்களையும் கொஞ்சம் வாசித்து பார்த்துட்டு வந்திரலாமா??? அப்பதான அடுத்த முறை நம்ம இயேசப்பா ஆத்துமான்னு சொல்லி பேச ஆரம்பிக்கும் போது அவர்கிட்ட நமக்கு இருக்கிற கேள்விகளை எல்லாம் கேட்க முடியும்….சரியா????? நமது தேவனுக்குள் சந்திப்போம்…….

    Related Post

    Categories: மனம் திரும்புதல்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    7 − = four

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>