-
எதிர்பாராத நேரத்தில் வருவார்
ஒருமுறை அமெரிக்க அதிபர் ஈசன் ஹோவர் (Eisenhover) விடுமுறையில் இருந்தபோது, பத்திரிக்கையில் அவருக்கு என்று குறிக்கப்பட்டு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் ஆறு வயது நிரம்பிய பால் என்னும் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மரணதறுவாயில் இருப்பதாகவும், அவன் அமெரிக்க அதிபரை பார்க்க விரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, அவர் அந்த சிறுவனை போய் பார்க்க முடிவு செய்தார். அப்படியே ஒரு நாள் அந்த சிறுவனின் வீட்டிற்கு போய் கதவை தட்டினார்.
.
அச்சிறுவனின் தகப்பன் டொனால்ட் கதவை திறந்தபோது அமெரிக்க அதிபரைக்கண்டு அதிர்ச்சியுற்றார். சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன் செய்யாமல், மிகவும் சாதாரண உடைகளை உடுத்தியிருந்த அவர், அதிபரை உள்ளே அழைத்து, சிறுவனிடம் கொண்டு சென்றார். அதிபர் சற்று நேரம் அந்த சிறுவனிடம் பேசிவிட்டு கிளம்பினார்.
.
அக்கம்பக்கத்திலிருப்பவர்களுக்கு அதுவே அந்த நாளின் பேச்சாக இருந்தது. ஆனால் டொனால்ட்க்கோ சந்தோஷமேயில்லை. ஏனெனில் அவர் அதிபரின் வருகையை எதிர்ப்பார்க்காததினால், சரியான உடை உடுத்தாமல், முகச்சவரன்கூட செய்யாமல் இருந்து விட்டோமே என்று, மிகவும் துக்கப்பட்டார்.
.
ஆம் பிரியமானவர்களே! நம் ஆண்டவர் நாம் எதிர்பாராத நேரத்தில் வருவார். நாம் ஆயத்தமா? கறைதிரையற்ற இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்தியிருக்கிறோமா? அல்லது கறைகளோடு காணப்படுகிறோமா?
.
வேத வசனம்:
—————–கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். (II பேதுரு 3:10)
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். (வெளி 3:3)
.
Original Source From: anudhinamanna.net
விசேஷித்தவர்களாய் மாற்றுபவர் சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள்
எதிர்பாராத நேரத்தில் வருவார்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives