• வேதாகம பாத்திரங்கள்(4)

    மறைக்கப்பட்டது !!!

    vethak4

    ஹாய் குட்டிஸ், நம்ம தேவன் நம்ம இயேசப்பா ஏன் அடிமையின் ரூபம் எடுத்தார்ன்னு அழகா சொல்லி கொடுத்தாங்க, சரிதான.

    சரி குட்டிகளா, இன்னிக்கி நம்ம இயேசப்பா என்ன சொல்லி கொடுக்கிறாங்கன்னு பார்ப்போமா???

    நம்ம இயேசப்பா ஏற்கனவே நம்மகிட்ட பேசிட்டு இருக்கிற இந்த நாட்கள்ல நம்ம பிதாப்பா படைச்ச ஆதாமுக்கும், தனக்கும் இந்த பூமி வந்தப்ப அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு  சொன்னாங்க…..அது உங்களுக்கு நல்லாவே தெரியும். சாயல், ரூபம் ரெண்டு இந்த பூமிக்கு வந்தப்ப ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அடுத்து அதிகாரங்கள் கூட சேம்தானாம். இப்பவும் நீங்க நம்பாம எங்களை நீங்க பார்க்கிறதை எங்களாலும் புரிஞ்சுக்க முடியுது…..

    நம்ம இயேசப்பா….அதாவது நம்ம தேவனால் ரெண்டாவது ஆதாம்ன்னு அழைக்கப்பட்டவர், ரூபத்தில், முதல் ஆதாம் மாதிரி இருந்தாருன்னு சொன்னப்ப கூட நீங்க இதே ஆச்சரியத்தோடதான் யோசித்தீங்க….ஆனா நம்ம தேவன் அதை குறித்து சொல்லி கொடுத்தப்ப எத்தனை அழகா இருந்துச்சு….அதே மாதிரிதான் இதுவும். கேட்க நீங்க ரெடியா குட்டிஸ்…..

    இன்னொரு விசயத்தை இங்க நம்ம தேவன் முக்கியமா சொல்ல விரும்புறாங்க. அது என்னதுன்னா நம்ம தேவன் முதன்முதலில் இந்த உலகத்தில ஆதாமை உருவாக்கின நேரம், அவர் தன் சாயல், ரூபம் படி படைத்தப்ப…..ஆதாமுக்குள்ள பாவம் என்கிற விதை இல்லை….தெளிவா சொல்லணும்னா தேவன் ஆதாமை படைத்த போது அவங்களை தன் பிள்ளைகளா என்றும் தன்னுடைய சமூகத்தில் இருக்கிறதுக்கு ஏற்ற வண்ணம் அத்தனை மகிமையோட படைத்தாங்க…….

    நீங்க ரொம்பவே சின்ன குழந்தைகளா இருந்த நேரம் நம்ம இயேசப்பாவை தெரிந்து கொள்ளணும் என்பதற்காக உங்க அம்மா/அப்பா உங்களுக்கு பைபிள் சம்பவங்களை குறித்து சொல்லுற காமிக்ஸ் புத்தகம் வாங்கி கொடுத்துருப்பாங்க…..என்னுடைய முதல் வேதாகமம்….இப்படி எத்தனையோ…..அதில நம்ம தேவன் ஆதாம், ஏவாள் கூட உலாவுகிற மாதிரி படங்கள் கண்டிப்பா நீங்க பார்த்தது உண்டு….அதுல நம்ம தேவன் மகிமையை வெளிப்படுத்த அவர் தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் இருக்கும், சரியா…… அதுல ஆதாம், ஏவாள் பற்றி ரொம்ப அதிகம் பிரயாசம் படம் வரைஞ்சிருக்க மாட்டாங்க….. ஆனா எப்படி நம்ம தேவன் மேல ஒரு ஒளி வட்டம் இருந்ததோ….அதே மாதிரிதான் ஆதாம், ஏவாள் மேல கூட ஒரு ஒளி வட்டம் வரைந்திருக்கணும்…..

    என்ன குட்டிஸ், ரொம்பவே ஆச்சரியமா பார்க்கிறீங்க……. தேவன் தன்னுடைய பிள்ளைகளை படைத்தப்ப அதிக மகிமையோட படைத்தாங்க….. எப்பவும் அவர் சன்னிதியில் இருக்கணும்னா பரிசுத்தமே உருவான தேவன் எந்த அளவுக்கு அவங்களை படைத்திருப்பார்ன்னு உங்களால் புரிஞ்சுக்க முடியுதா….. ஏனோதானோன்னு உருவாக்கி இருந்தாதான் அவர் என்றைக்கே ஆதாம், ஏவாளை அழிச்சிட்டு அடுத்த விசயத்தை யோசித்திருப்பாரே……ஒரு அழகான வார்த்தையில் சொல்லணும்னா நம்ம தேவனால் படைக்கப்பட்ட மாஸ்டர் பீஸ் நாம…..

    இது வரை நம்ம இயேசப்பா நம்மகிட்ட பேசிட்டு இருக்கிற காரியங்களை நீங்க இன்னும் நம்பாம பார்க்கிறீங்கன்னு எங்களாலும் புரிஞ்சுக்க முடியுது குட்டிஸ்…..ஆனா இதுல நாம நினைவில வைக்க வேண்டியது…..

    நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரங்களுக்கும் கொடேன்.

                                                                                                                                                         ஏசாயா 42 : 8

    என்ன குட்டிஸ், உங்களால புரிஞ்சுக்க முடியுதா….நம்ம தேவனுக்கு என்று ஒரு மகிமை உண்டு….அதுனால தான் நாம நம்ம தேவனை மகிமையின் தேவன் சொல்லுறோம்…..ஆனா அவர் தன்னுடைய அப்படிப்பட்ட மகிமையை வேறொருவருக்கும் கொடுக்க மாட்டேன்ன்னு சொன்னதும் நமக்கு தானா சந்தேகம் வரலாம்….நம்ம தேவன் நம்மளை ஆதாமை மகிமையோட படைத்தது உண்மை….ஆனா தன் மகிமைக்கு ஒப்பாக இல்லை…இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்…..

    நமக்கு புரியுற விதத்தில் நம்ம தேவன் சொல்ல ஆசைபடுறாங்க….. நம்ம தேவன் படத்தை நீங்க பார்த்த காமிக்ஸ் புத்தகத்தில பெரிய ஒளி வட்டத்தில் போட்டா ஆதாம், ஏவாள் படத்தை சின்ன ஒளி வட்டத்தில் போட்டா சரி வரும்…..இப்ப உங்களால் புரிந்து கொள்ள முடிந்ததா???

    நம்ம தேவன் தன் மகிமையை யாருக்கும்….அந்த வசனத்தில் நீங்க வாசித்து பார்த்தா புரிந்து கொள்ள முடியும்…வேறொருவனுக்கும்னு நம்ம தேவன் சொல்லுறதால மனுஷன்னு நம்ம தேவன் சொல்லலை. ஏசாயா 42ம் அதிகாரத்தை முதல்ல இருந்து நீங்க வாசித்து பார்த்தா நம்ம தேவன் தன் மகிமையை யாருக்கு கொடுக்க போறாங்க என்பதையும் சொல்லி இருப்பாங்க…. யார்னு நிறைய பேரு கெஸ் பண்ணி இருப்பீங்க. யெஸ், அது நம்ம இயேசப்பாதான்…..

    ஏசாயா தீர்க்கத்தரிசி இந்த புத்தகத்தை நம்ம இயேசப்பா இந்த பூமிக்கு பிறக்கறதுக்கு நூற்றுக்கணக்கான வருசங்கள் முன்னாடியே எழுதி வைச்சிட்டார்….அதன்படி நம்ம இயேசப்பா இந்த பூமிக்கு வந்ததும், பாடுபட்டதும், அடுத்து நம்ம தேவன் சொன்னப்படி மகிமையை ஏற்றுக் கொண்டதும் உங்களுக்கு தெரிந்த காரியம்……

    அப்ப உங்களுக்கு இப்ப புரிஞ்சிச்சா குட்டிஸ், நம்ம தேவன் நம்மளை மகிமையோட படைச்சது உண்மைதான்….ஆனா அவர் மகிமைக்கு ஒப்பாக இல்லைன்னு சொல்லுறதுக்காக தான் இந்த வசனத்தை எடுத்து காண்பிச்சாங்க….ஆனா அந்த மகிமையை நம்ம தேவன் யாருக்கும் கொடுக்காமயே வைச்சுக்கலை. அவர் கொடுத்தது தன் குமாரனான இயேசு கிறிஸ்துவுக்கு…..

    உடனே உங்களுக்கு ஒரு சின்ன கோபம் கூட வரலாம்….அதெப்படி தேவன் தன் மகிமையை இயேசப்பாக்கு கொடுக்கலாம்? அவர்தான சொன்னார்….நான் ஆதாமை படைத்த போதும், இந்த பூமிக்கு இயேசப்பாவை அனுப்பின போதும் ரெண்டு பேருக்கும் சாயல், ரூபம் மட்டுமில்ல மகிமை கூட ஒண்ணு போல இருந்துச்சுன்னு சொன்னாங்க…..ஆனா இங்க தன் பையனுக்கு அவர் மகிமையை கொடுத்துட்டாரே??? நல்ல கேள்வி குட்டிஸ்…..

    நம்ம தேவன் சொன்னப்படி இந்த பூமிக்கு தன் பையனை அனுப்பினப்ப ஆதாமையும், நம்மையும் எந்த மகிமையோட அனுப்பி வைச்சாரோ அதே மகிமையோட தான் அனுப்பி வைச்சார்…..அப்ப இதை ஏன் தேவன் சொன்னாங்க???

    நம்ம இயேசப்பா இந்த பூமிக்கு வந்த நாள்ல இருந்து சிலுவை பரியந்தமும் தன் தேவனுக்கு கீழ்படிந்ததால நம்ம தேவன் கொடுத்த கிப்ட்தான் அந்த மகிமை, சரியா குட்டிஸ். உங்க முகம் வாடுதே குட்டிகளா…. சப்போஸ் ஆதாம் மட்டும் அன்னைக்கு நம்ம தேவன் வைத்த அந்த டெஸ்ட்டில் கீழ்படிஞ்சி பாஸ் ஆயிருந்தார்ன்னா ஆதாமுக்கும், நமக்கும் கூட ஏற்கனவே நம்ம தேவன் கொடுத்த மகிமையை காட்டிலும் அதிக மகிமையை கொடுத்துருப்பாரே!!! உங்க எண்ணங்கள் சரியான விசயத்தை உங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கு.

    ஏற்கனவே நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொன்னாங்களே ஒரு ஒளி வட்டம் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் போட்டுக்கோன்னு சொன்னாங்களே….. ஏன்னா அவங்களை நம்ம தேவன் முதலில் மகிமையோடதான் படைச்சாங்க….சப்போஸ் நம்ம தேவன் வைச்ச டெஸ்ட்டில் ஆதாமும், ஏவாளும் பாஸ் ஆயிருந்தா கண்டிப்பா அதிக மகிமை கிடைச்சிருக்கும்….(அந்த சர்ப்பம் சொன்ன மாதிரி கூட நடந்திருக்கும்)…..இப்ப ஏற்கனவே நம்ம இயேசப்பா சொன்ன சின்ன ஒளி வட்டத்தை விட கொஞ்சம் பெரிசா வரைஞ்சுக்கோங்க…கொஞ்சம் பெரிசாகவே….ஆனா நம்ம தேவனுக்கு அவங்க போட்ட ஒளி வட்டத்தை விட கொஞ்சம் சின்னதாகவே ஆதாமுக்கும், ஏவாளுக்கும் ஒளி வட்டம் போட்டுக் கொள்ளுங்க……பார்க்கவே அழகா இருக்குதா????

    ஆனா அந்த டெஸ்ட்டில் அவங்க பாஸ் ஆகாததால் என்ன நடந்துச்சு, ஏற்கனவே தேவன் கொடுத்த மகிமை இருந்தது நிஜம்…. ஆனா என்ன ஆச்சுன்னா, அவங்க மகிமையை அந்த பாவம் என்கிற இருள் மூடியிருச்சு.

    நம்ம இயேசப்பா நமக்கு புரியுற வகையில எப்படி சொல்லுறாங்கன்னு கேட்போமா??? நீங்க இப்ப ஒரு ஒளி வட்டம் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் போட்டிருப்பீங்களே, அதை உங்க ரப்பர் எடுத்து அழிச்சிருங்க…..சுத்தமா அழிக்கணும்….சரியா….. இப்ப படத்தை பாருங்க….. நம்மால நாம போட்ட ஒளி வட்டத்தை பார்க்க முடியாது…பார்க்கவே கஷ்டமா இருக்கா குட்டிஸ்…. எத்தனை பெரிய இழப்பு???  ஆனா கொஞ்சம் படத்தை உங்க கண் பக்கத்தில் வைச்சி பார்த்தா நீங்க நல்லா அழிச்ச பிறகும் கூட அந்த தடம் தெரியும், சரியா…..இதுதான் உண்மை குட்டிஸ்…. நம்ம தேவன் வைச்ச டெஸ்ட்டில் அவங்க பெயில் ஆனாலும் நம்ம தேவன் அவங்ககிட்ட இருந்த மகிமையை எடுத்து கொள்ளலை….ஜஸ்ட் அது அவங்களுக்கு தெரிய முடியாம போச்சு….அதுவும் நம்ம தேவன் செய்யலை. ஆதாம், ஏவாளா செய்த காரியம்……

    நம்ம தேவன் அவங்களுக்கு கொடுத்த உண்மையான தண்டனை என்னன்னா தன் சமூகத்தை விட்டு அவங்களை விரட்டினது….இது கூட அவங்களுக்குள்ள பாவ இருள்(அசுத்தம்) வந்ததால பரிசுத்தம் நிறைந்த தேவனால் அவங்க அருகில் நிற்க முடியாத காரணம் மட்டுமே…..

    இப்ப சில விசயங்கள் எங்களோட பேச ஆசைபடுறீங்க, சரியா குட்டிகளா….. நாங்க முந்தி எல்லாம் நினைத்தது ஆதாம், ஏவாள் சாப்பிட்ட அந்த பழத்துக்காக என் தேவன் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்க கூடாது….. ஆனா இன்னிக்கிதான் நாங்க தெரிந்து கொண்டோம்….. ஒரு சிறிய கீழ்படியாமை எந்த அளவுக்கு வேதனையை கொடுத்திருச்சு ஆதாமுக்கும், ஏவாளுக்கும். அது மட்டுமில்ல என் தேவனுக்கு கூட அது எவ்வளவு பெரிய வேதனை. என் தேவன் எவ்வளவு அன்பு நிறைஞ்சவங்க…..சாரி பிதாப்பா. என்னுடைய எல்லா கீழ்படியாமைக்கும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன். தயவு செய்து அன்னிக்கி உங்க பிரசன்னத்தை ஆதாம், ஏவாள்கிட்ட இருந்து எடுத்த மாதிரி என்கிட்டே இருந்தும் எடுத்து கொள்ளாதீங்க. என் தப்பிதத்தை எல்லாம் மன்னிச்சி என்றும் உங்க பிள்ளையா ஜீவனுள்ள நாளெல்லாம் வாழ பண்ணுங்க, ப்ளீஸ்……ஆமென்.

    சரி குட்டிஸ், அடுத்த வாரம் நம்ம தேவன் நம்மகூட பேச ஆசைப்படுகிற இன்னொரு வேதாகம பாத்திரத்தோட சந்திக்கலாமா???

    Related Post

    Categories: வேதாகம பாத்திரங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + one = 10

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>