-
வேதாகம பாத்திரங்கள்(2)
ஆதாமும், ஏவாளும்
ஹாய் குட்டிஸ், உங்களை இந்த வேதாகம பாத்திரங்கள் என்கிற தலைப்பில் நம்ம இயேசப்பாவின் கிருபையால சந்திக்கிறதால ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
ஏற்கனவே வேதாகம பாத்திரங்கள்ன்னா என்னமா?ன்னு உங்க அம்மா/அப்பாவை கேட்க ஆரம்பிச்சிருப்பீங்க, சரிதான குட்டிகளா….உங்க அம்மா, அப்பாவும் உங்களுக்கு வேதாகம பாத்திரங்கள்ன்னா என்னன்னு விளக்கம் சொல்லியிருப்பாங்க….. நீங்க சொல்லுவது ரொம்ப சரி…..பைபிளில் தேவ ஆவியானவரால் குறிப்பிடப்பட்ட எல்லா பேர்களுமே பாத்திரங்கள்தான்…… நம்ம பைபிளில் ஆதாம் ஏவாள் என்கிற பேர்ல ஆரம்பித்து வெளிப்படுத்தின விசேஷத்தில் முடியுற நம்ம யோவான் தாத்தா வரைக்கும் எல்லா பேர்களும் வேதாகம பாத்திரங்கள்தான்…..அவங்க வாழ்கையில் நம்ம தேவன் விரும்பின, விரும்பாத காரியங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் அழகா பைபிளில் சொல்லப்பட்டிருக்கும்…..
விரும்பின காரியங்கள் அவர்கள் மாதிரி நம்ம தேவன் நம்மளையும் வாழ அழைக்கிறார்…. விரும்பாத காரியங்கள்….நம்ம வாழ்கையில் இருக்கான்னு பார்த்து நாம உடனே மாத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்….. அதுனால எல்லா பாத்திரங்களும் நம்ம தேவன் நம்ம கூட பேச விரும்புற விஷயம் மட்டுமே….
அப்ப நாம வேதாகம பாத்திரங்கள் குறித்து நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு அவர்கிட்டயே கேட்டு தெரிந்து கொள்ளலாமா??? ஏற்கனவே தலைப்பை பார்த்ததும் நீங்களும் தெரிந்து வைச்சிருபீங்க….. ஆதாம், ஏவாள்…..ஆனா ஆதாம் ஏவாள்கிற பேரை கேட்டதுமே நீங்க சின்ன வயசில இருந்து உங்க அம்மா, அப்பா மூலமா கேட்ட எல்லா நிகழ்ச்சிகளும் இப்ப கூட உங்க ஞாபகத்தில் வந்து நிற்கும்….. முதன் முதலில் நம்ம தேவன் ஆதாமை உருவாக்கின காரியம், அடுத்து அவரை ஏதேன் தோட்டத்தில் உட்கார வைச்சி நம்ம தேவன் சந்தோசப்பட்ட விஷயம், அடுத்து ஒவ்வொரு animalசையும் நம்ம தேவன் களிமண்ணால் உருவாக்கி அதை நம்ம ஆதாம்கிட்ட காண்பிச்சி அதுக்கு அவர் என்ன பேர் இட்டாரோ அதுக்கு அதே பெயரை வைச்சி நம்ம தேவன் சந்தோசபட்ட விஷயம்…..நம்ம ஏவாளை ஆதாமுக்கு துணையா கொடுத்து அவங்க வாழ்ந்த வாழ்கையை பார்த்து நம்ம தேவன் சந்தோசப்பட்டது…… இதெல்லாம் நம்ம தேவன் அவங்களை பார்த்து சந்தோசபட்ட காரியங்கள்….
அடுத்தது உங்களுக்கு நல்லாவே தெரிந்த விஷயம்….நம்ம தேவன் வேண்டாம்னு சொன்ன நன்மை, தீமை மரத்தின் பழத்தை அவங்க சாப்பிட்டு நம்ம தேவனுடைய வேதனையை அதிகப்படுத்தினது மட்டுமில்ல…கடைசிவரை நம்ம தேவன்கிட்ட சாரி கேட்டு ஒப்புரவாகுற வேலையை விட்டுட்டு தப்பை மத்தவங்க மேல போட்டு தப்பிக்க நினைச்ச வேதனை…. அடுத்து ஏதேன் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்ட வேதனை….இதெல்லாம் நமக்கு நம்ம அம்மா, அப்பா சின்ன வயசில இருந்து சொல்லி கொடுத்த காரியங்கள்….அது மட்டுமில்ல அந்த பாத்திரங்களை பத்தி நம்ம அம்மா, அப்பா சொல்லி கொடுத்த போது என்னைக்கும் நாம நம்ம தேவன் பேச்சுக்கு கீழ்படியணும்ன்னு என்கிற சத்தியத்தையும் சொல்லி கொடுத்தாங்க….சரியா???
சரி சொல்லுங்க குட்டிஸ்….இதெல்லாம் நம்ம அம்மா, அப்பா மூலமாகவோ இல்லை நீங்களே பைபிள் வாசித்து நம்ம பரிசுத்த ஆவிப்பா சொல்லி கொடுத்தால தெரிந்து கொண்ட உண்மைகள்…. இது மூலமா உங்க மனசில் நிற்கிறது எல்லாம் கீழ்படியாமையும், அதன் மூலமா கிடைச்ச தண்டனையும்….வேற இதுல ஏதாவது விசேஷம் உண்டுன்னு சொல்ல முடியுமா குட்டிஸ்…..
உங்களுக்கு தெரிந்த காரியங்களை நீங்க எங்களோட பகிர்ந்து கொள்ளலாமே???? உங்களுக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கலாம்……முதல் கேள்வி ஆதாம்தான் நம்ம தேவனால் உருவாக்கபட்ட முதல் மனிதன்னா அவர் அப்படியே பார்க்க நம்ம பிதாப்பா மாதிரி இருப்பாரா??? உங்க கேள்வி நல்ல கேள்வி குட்டிகளா…. நம்ம பைபிளில் உண்மையில் சொல்ல போனா ரெண்டு ஆதாம்கள் பத்தி சொல்லப்பட்டிருக்கு. ஒன்று நம்ம தேவனால் முதலில் உருவாக்கப்பட்ட ஆதாம்…..அடுத்து நாம செய்த எல்லா தப்புகளுக்கும் தண்டனை அனுபவிக்கறதுக்காகவே இந்த பூமியில் வந்த நம்ம இயேசப்பாதான் அந்த ரெண்டாவது ஆதாம்….. ஏன் இந்த ரெண்டாவது ஆதாமாகிய நம்ம இயேசப்பாவையும் குறித்து இப்ப சொல்லுறாங்கன்னு உங்களுள்ள கேள்விகள் வரலாம்…..
முதல் ஆதாம் தேவன் அழைத்த அழைப்பை தெரிந்து கொள்ளாம தன் தேவையில்லாத தப்பால அனைத்து ஆசீர்வாதங்களையும் இழந்து போன ஒரு நபர்…..ஆனா ரெண்டாவது ஆதாம் இருக்காரே…..அவர் நம்ம தேவன் பக்கத்திலேயே இருந்ததால நம்ம தேவனுடைய உணர்வுகளை புரிஞ்சிக்கிட்டு அவர் சொன்ன அழைப்பை புரிந்து கொண்டு தன் கீழ்படிதலால் அனைத்து ஆசீர்வாதங்களையும் நம்ம தேவன் கிட்ட இருந்து வாங்கி கொண்டவர்….
சுருக்கமா சொல்லப்போனா ஒரே வார்த்தையில் கீழ்படியாமை அடுத்து கீழ்படிதல்….இதுதான் முந்தின ஆதாமுக்கும், பிந்தின ஆதாமுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்…..மத்தபடி வேற எந்த வித்தியாசம் இல்லைன்னு நம்ம தேவன் சொல்லுறதால நம்ம இயேசப்பா சாயலுக்கும் , நம்ம ஆதாம் சாயலுக்கும் வித்தியாசம் அப்படி ஒண்ணும் இருந்திருக்க முடியாது என்பது எங்களுடைய நம்பிக்கை…..
அதே மாதிரி நம்ம தேவன் நம்ம இயேசப்பாக்கு கொடுத்த அதிகாரங்களா இருக்கட்டும் இல்லை மகிமையா இருக்கட்டும் கொஞ்சம் கூட ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருந்திருக்காது என்பதும் எங்களுடைய நம்பிக்கை…. எப்படி நம்ம இயேசப்பா நம்ம தேவனுடைய தற்சுருபமாய் இருந்தும் அதை கொள்ளையாடின பொருளாய் எண்ணாமல்.……அதுமட்டுமில்ல கொலேசெயர் 1 : 15 லயும் சொல்லபட்டிருக்கு……அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்……. இந்த ரெண்டு வசனங்களுக்கும் ஏன் நம்ம இயேசப்பா சொல்லுறாங்கன்னு உங்க மனது கேள்வி கேட்கலாம்……
முதலில் நம்ம இயேசப்பா சொன்ன இந்த ரெண்டு வசனங்களுக்கும் அப்படி என்ன முக்கியம் இருக்கு என்பதை தெரிஞ்சிக்கிட்டு அடுத்து இந்த வசனங்களை ஏன் சொன்னாங்க என்பதை தெரிந்து கொள்ளுவோமா???
நம்ம தேவனுடைய தற்சுரூபம்ன்னு யார் கேட்டா நீங்க அழகா சொல்லிருவீங்க….. நம்ம இயேசப்பா. உங்களுக்கு இன்னொரு முக்கியமான உண்மை தெரியுமா குட்டிஸ்….. நம்ம தேவனின் தற்சுரூபம் நம்ம இயேசப்பா ஒருத்தர்தானா….. அடுத்தது யாராவது உண்டா குட்டிஸ்??? சரி இதை குறித்து கொஞ்சம் விவரமா பிறகு பார்போமா??? இப்ப சொல்லுங்க நம்ம தேவன் சொன்ன முதல் வசனத்தில் நம்ம இயேசப்பா என்ன சொல்லி இருக்காங்க குட்டிஸ்…. அதை கொள்ளையாடின பொருளாய் எண்ணாமல்…..இப்ப புரியுதா குட்டிஸ், நம்ம இயேசப்பா நம்ம தேவனின் தற்சுரூபமாய் இருந்தும் அதை கொள்ளையாடின பொருளாய் எண்ணவில்லை. அப்ப யாராவது அப்படி நினைச்சாங்களா??? கண்டிப்பா குட்டிஸ்….இல்லைன்னா நம்ம தேவன் இந்த காரியத்தை சொல்லி இருக்க மாட்டாங்களே??? ஆனா நினைச்சது ஒருத்தரா இல்லை நிறைய பேரா???
நீங்க உங்க இதயத்துக்கு பக்கத்தில கை வைச்சி ஏன் கேள்வி கேட்குறீங்க குட்டிஸ்??? நான் ஏதாவது அந்த தப்பை பண்ணி இருக்கேனா??? ன்னு…… நம்ம கேள்விகளை பத்தி பிறகு யோசிக்கலாமே??? முதலில் இந்த தப்பை முதலில் செய்தவனை பத்தி தெரிந்து கொள்ளுவோமா??? கொஞ்சம் பேர் ஏற்கனவே சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க குட்டிஸ், குட். நீங்க சொன்னது ரொம்ப சரி…..
லூசிபர்ன்னு முந்தி நம்ம தேவனால் அழைக்கப்பட்டு….தேவனின் முத்திரை மோதிரமாய் இருந்தவனும், நம்ம தேவனாலேயே விடி வெள்ளின்னு அழைக்கப்பட்ட சாத்தானே அவன்….. அவன் என்ன அப்படி தப்பு பண்ணினான்னு நீங்க தெரிந்து கொள்ள ஆசைபட்டா ஏசாயா 14 : 12, 13 வசனங்களிலும், எசேக்கியேல் 28 : 17, 18 வசனங்களை வாசித்து பாருங்க…. உங்களால் தெளிவா புரிந்து கொள்ள முடியும்…. அப்ப எதுனால அவனுக்கு மேட்டிமை வந்துச்சு….அவன் அழகு….அவன் மினுக்கு….. அப்ப அவன் நம்ம தேவனால் படைக்கப்பட்ட ஒரு கேருபாய் இருந்தும்…..இதுல நாம ரொம்பவே நிதானமா கவனிக்க வேண்டியது…..இப்ப நாம சாத்தான் சொல்லுற….சோதனைக்காரன்னு அழைக்கப்படுகிற அவன் நம்ம தேவனுடைய தற்சுரூபம் கண்டிப்பா கிடையாது….. ஆனா அவன் எதை கொள்ளையாடினான்??? தேவன் அவனுக்கு கொடுத்த ரூபத்தை கொள்ளையடித்தான்…..இப்ப புரியுதா….ஏன் நம்ம தேவன் அந்த முதல் வசனத்தை சொன்னார்ன்னு புரியுதா???
இப்ப சொல்லுங்க….நாம கூட நம்ம தேவன் கொடுத்த ரூபத்தை அப்ப கொள்ளையடிக்கிறோமா? ஆனா அதுக்கு முன்னாடி நம்ம ரூபம் என்னன்னு தெரிந்து கொள்ளுவோமா??? நான் உண்மையிலேயே யாரு??? உங்க மனது உங்களுக்குள்ள கேள்வி கேட்டா…..இன்னும் பிள்ளைகளா எத்தனை கேள்விகள் நமக்குள்ள???? எனக்கு மட்டும் ஏன் மூக்கு சின்னதா இருக்கு….எனக்கு முடி ரொம்பவே நீளமா இல்லை….. என்னுடைய முகம் மட்டும் ஏன் அந்த அளவுக்கு களையா இல்லைன்னு எத்தனை கேள்விகள்…..ஆனா நம்ம தேவன் நம்மளை படைக்கும் போது எப்படி படைத்தார்….சொல்ல முடியுமா……
திரும்பவும் உங்களால் முடிந்தா ஆதியாகமம் 1 : 26ஐ வாசித்து பாருங்க…..நமது சாயலாகவும், தமது ரூபத்தின் படியேயும் மனுசனை உண்டாக்குவோமாக…..கண்டிப்பா நீங்களும் எங்களோட சேர்ந்து வாசித்திருப்பீங்கன்னு நம்புறோம்…..அப்ப ஆதாம் எப்படி நம்ம தேவனுடைய ரூபமும், சாயலுமோ…..அதே மாதிரிதான் ஆதாம் சந்நிதியாகிய நாம கூட நம்ம தேவனின் ரூபமும், சாயலும்….இதுல நம்ம இயேசப்பா எந்த அளவுக்கு விசேஷம் என்பதை தான் ரெண்டாவது வசனம் மூலமா சொல்லி இருக்காங்க….. நம்ம இயேசப்பா நம்ம தேவனின் தற்சுரூபம்……அப்ப நாம கூட நம்ம தேவனின் தற்சுரூபம் தான்….ஆனா நம்ம இயேசப்பா நமக்கு முந்தினவர்….அதாவது இந்த உலகமும், அதில் இருக்கிற அனைத்தும் படைக்கப்படுறதுக்கு முன்னாடி, நம்ம தேவன் தன் சர்வ சேனைகளை படைக்கறதுக்கு முன்னாடியே நம்ம தேவனில் இருந்து வெளி வந்த அவருடைய ரூபமான இயேசப்பாதான் நமக்கு எல்லாம் முந்தின பேறுமானவர்.
ஏற்கனவே எத்தனை பேரு உங்க கண்ணாடி முன்ன நின்னு நான் கூட என் இயேசப்பா மாதிரி இருக்கேனா??? பார்க்க ஆரம்பிச்சாச்சு…..ஆனா இதுல இன்னொரு முக்கியமான காரியம் உங்களுக்கு தெரியுமா குட்டிஸ்….ஆதாம் நம்ம தேவனால் படைக்கப்பட்ட நம்ம தேவனின் ரூபம்…..ஆனா இயேசப்பா நம்ம தேவனில் இருந்து வெளியே வந்த அவருடைய ரூபம்…..இதுதான் தேவன் தன்னுடைய ஒரே குமாரனான நம்ம இயேசப்பாக்கும் அவரால் படைக்கப்பட்ட ஆதாமுக்கும் கொடுத்த ஒரே வித்தியாசம்……அதுவும் படைப்பில மட்டுமே…..ஆனா அன்பில கண்டிப்பா கிடையாது குட்டிகளா…..சொல்லப்போனா அப்படி வித்தியாசம் காண்பிச்சிருந்தா தான் படைத்த உலகத்தையே அழிச்சிட்டு ஏற்கனவே தவறி போன ஆதாமுக்கு பதிலா இன்னொரு புது விதமான ஒன்றை நம்ம தேவன் தன் விருப்பம் போல படைச்சிருக்கலாமே??? ஆனா அப்படி செய்யாம தான் படைத்த தன் ரூபமாய் இருந்த ஆதாமுக்கும் அவன் சந்நிதிக்கும் துணையா, அவங்களை எல்லா பாவங்களில் இருந்தும் விடுதலை கொடுக்க நம்ம இயேசப்பாவை….அவருடைய ஒரே குமாரனான தன் பையனையே அனுப்பி வைச்சிருக்கார்ன்னா யார் மேல ரொம்ப பிரியம்…..சொல்ல முடியுமா குட்டிஸ்…..சின்ன குழந்தைகள் கூட ஈஸியா சொல்லுவாங்க….நம்ம மேலதான் அதிக பிரியம்……
அப்ப நம்ம தேவன் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை விட என்னை தான் அதிகமா நினைக்கிறாங்களா? நேசிக்கிறாங்களா??? இன்னமும் நம்ம தேவன் நம்ம மேல வைச்சிருக்கிற அன்பை குறித்து சந்தேகம் இருந்தா நம்ம இயேசப்பாகிட்டேயே கேட்டு தெரிந்து கொள்ளுங்க…. அது மட்டுமில்ல நம்ம இயேசப்பாக்கும், ஆதாமுக்கும் தேவன் தன்னுடைய சாயலையும், ரூபத்தையும் எப்படி வித்தியாசம் இல்லாம கொடுத்தாரோ…..அதே மாதிரி தான் அதிகாரங்களையும், மகிமையும் கூட கொடுத்தார்??? உண்மையாகவா??? நீங்க கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்க…..ஆனா இதுக்கான பதிலை நம்ம இயேசப்பாகிட்டயே கேட்டு அடுத்த முறை தெரிந்து கொள்ளுவோமா??
Are your repent?(3) Bible Characters (2)
வேதாகம பாத்திரங்கள்(2)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives