-
மனம் திரும்பி விட்டீர்களா?(7)
ஸ்ட்ரிக்ட் டீச்சர்????
ஹாய் பிரெண்ட்ஸ், நம்ம தேவனுடைய கிருபையால உங்களை மறுபடியும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசப்படுறோம்.
தேவனுடைய வார்த்தைகள் என்றும் இனிமையானவை. அதை நித்தமும் படிக்கிறது மட்டுமில்ல தியானிக்க வேண்டிய கட்டாயத்தில நாம இருக்கோம்…… சப்போஸ் நீங்க நினைக்கலாம்….. எப்ப பார்த்தாலும் இவங்க எல்லா விஷயத்தையும் லென்ஸ் போட்டு பெரிசாகவே யோசிக்கிறாங்க, சாதாரணமா இவங்களுக்கு யோசிக்கவே தெரியாதா?
பிரெண்ட்ஸ், தேவனுடைய வார்த்தைகள் நமக்கு ஜீவன்…ன்னு எப்பவும் வாய் அலுக்காம சொல்லிக்கிற நாம எத்தனை தடவை அதை வாசிக்க சிரமம் எடுத்துருக்கோம்……
ஏன் நாங்க வாய் ஜாலம் பேசுரவங்கன்னு நினைச்சீங்களா? அப்படியொண்ணும் கிடையாது. காலையில ஒரு அதிகாரம், நைட் ஒரு அதிகாரம்ன்னு படிச்சிட்டிருக்கிற எங்களை பார்த்து எப்படி நீங்க சொல்லலாம்?
உங்க கேள்விகளுக்கு ரொம்பவே நன்றிகள் பிரெண்ட்ஸ்….ஆனா பாருங்க நம்ம இயேசப்பா தன்னுடைய வேலையை தன் பிள்ளைகள் அசதியா செய்ய கூடாதுன்னு என்பதில் மட்டும் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்.
நாங்க என்றும் எங்க இயேசப்பா கொடுத்த வேலையை அசதியா செய்யறது கிடையாதே?
அப்ப ஏன் பிரண்ட்ஸ், நம்ம தேவன் உங்ககிட்ட சொன்ன கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்லலை….புரியாம பார்க்குறீங்க….நம்ம இயேசப்பா நம்மகிட்ட முதல்ல இருந்து கேட்டுட்டு இருக்கிற காரியம்…..குட்டிமா, நீ என்னிடத்தில் திரும்பிட்டியா?ன்னு.
என்ன பிரெண்ட்ஸ், உங்ககிட்ட இருந்து ஒரு பதிலும் வரலை. நம்ம தேவன் ஆத்துமாவை பத்தி நம்மகிட்ட பேசினதும், நம்ம குடும்பத்தை பத்தி விவரித்து சொன்ன காரியங்களும், நம்ம தேவன் நம்ம பிள்ளைகளுக்கு நம்மளை ஒரு ரோல் மாடலா இருந்து வாழ சொல்லி ரொம்பவே மாசக்கணக்கில் ஆச்சு…..ஆனா பாருங்க அவர் அமைதியா இருந்தாருங்கிற காரணத்தினால் நாம என்ன நினைச்சிட்டோம் பிரெண்ட்ஸ்……
அப்பாடா…..இயேசப்பா எல்லாத்தையும் மறந்துட்டார்ன்னு நினைச்சோமா? இல்லை நம்மகிட்ட அவர் எதிர்பார்த்த மனம் திரும்புதல் நடந்திருச்சுன்னு நாமளே முடிவு பண்ணிட்டோமா? நம்மால நம்ம இருதயத்தை பார்த்து கண்டிப்பா பொய் சொல்ல முடியாது…..சோ முதல் கூற்றுதான் உண்மை….நம்ம இயேசப்பா நம்மகிட்ட இத்தனை மாதங்கள் பேசாம இருந்ததால நாமலே முடிவு கட்டிடோம்…..இயேசப்பா இனிமே நம்மகிட்ட கேள்வி கேட்க மாட்டாங்கன்னு…….
ஆனா அவர் நம்மகிட்ட கேட்குராங்களே? என்ன குட்டிமா பண்ணின? இத்தனை மாசங்கள் உனக்கு டைம் கொடுத்தேனே? ஏதாவது உன்கிட்ட மாறுதல் வந்திருக்கா? என்ன சொல்ல போறோம் பிரெண்ட்ஸ்?
எங்க இயேசப்பா எங்ககிட்ட பேசினதில இருந்து நாங்க எங்களை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டோம்…..
குட் பிரெண்ட்ஸ்….கிடைத்த பதில் என்ன, அதுதான நம்ம இயேசப்பா நம்மகிட்ட கேட்கிற கேள்வி?
இந்த உலகத்தில் என்னதான் நான் என் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க ஆசைபட்டாலும் என் தேவன் என் மூலமா என் பிள்ளைகளை தன்னை தேட சொன்ன காரியம் ரொம்பவே அழகா இருந்துச்சு….உண்மையில் அந்த நாள் முழுவதும் அதை பத்தி மட்டும்தான் நான் யோசிச்சேன்….. எப்படி என் பிள்ளைகள் முன்னாடி ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழன்னு…..
நீங்க உங்களை இந்த ஒப்பு கொடுத்த காரியம் நம்ம தேவனை கண்டிப்பா சந்தோசப்படுத்திருக்கும் என்பது உண்மை….
நாங்க இன்னும் முழுமையா சொல்லி முடிக்கலை…..அந்த நாள் முழுவதும் எங்களுக்குள் இருந்த அந்த தீர்மானம் அடுத்த நாள் நிலைக்கலை…… அதுனால நாங்க திரும்பவும் என்ன வாழ்க்கை இதுவரை வாழ்ந்தோமோ அதையே தொடர ஆரம்பிச்சிட்டோம்…..
அப்ப நம்ம இயேசப்பா வேதனைப்பட்டது எல்லாம் நாம உண்மையாக்கிடோம், அப்படித்தான பிரெண்ட்ஸ்….
ரொம்பவே ஈஸியா எங்களை குற்றப்படுத்துறீங்க? ஆனா தீர்மானத்தில் நிலைச்சி நிற்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
சரி பிரெண்ட்ஸ்….நாம நம்ம கஷ்டத்தை சொல்லிட்டோம்…..நம்ம இயேசப்பா நம்ம பிரச்னைக்கு என்ன பதில் சொல்லுறாங்கன்னு பார்ப்போமா?
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.
மத்தேயு 11 : 28 – 30
என்ன பிரெண்ட்ஸ், நம்ம தேவன் நமக்கு கொடுத்த வார்த்தைகளை படிச்சிட்டீங்களா? முதல் வசனம் நமக்கு என்றும் மனப்பாடம்….. ஏன்னா வாழ்கையில அல்லைகள், தொல்லைகள்ன்னு எது வந்தாலும் தானாகவே நம்ம மனசில தோணுற வசனம் முதல் வசனம்தான பிரெண்ட்ஸ்……
ஆனா நம்ம இயேசப்பா சொல்லுறாங்க, அந்த முதல் வசனத்தில இருக்கிற இளைப்பாறுதல் நமக்கு கிடைக்கணும்ன்னா நாம மத்த இரண்டு வசனங்களை கைக்கொண்டா மட்டுமே அது நடக்கும்ன்னு சொல்லுறாங்க…..அப்படி அந்த வசனங்களில் நம்ம இயேசப்பா என்ன ரகசியத்தை வைச்சிருக்காங்கன்னு அவர்கிட்ட கேட்டே தெரிந்து கொள்ளலாமா?
நமக்கு நல்லாவே தெரிந்த உண்மை….நம்ம இயேசப்பா நமக்கு ஒரு நல்ல டீச்சர்…….அதை யாரும் மறுக்க முடியாது. என்ன ஸ்கூல்ல இருக்கிற டீச்சர் பாடப்புத்தகத்தில இருக்கிற பாடங்களை தன் முழு பிரயாசத்தையும் செலவழிச்சி நம்ம மனதில பதிய வைச்சாங்க…. ஆனா நம்ம இயேசப்பா வாழ்க்கை பாடங்களை சூழ்நிலைகளாலும், பாடுகளாலும் அழகாக சொல்லி கொடுக்கிற உன்னதமான டீச்சர்……
ஸ்கூல்ல இருக்கிற பாடங்கள் மனதில பதிந்தாலும் சரி, இல்லை புரியமா போனாலும், மக்கப் பண்ணினாச்சும் அடுத்த கிளாஸ், அதுக்கடுத்துன்னு…… ஒரு இடத்தில எல்லாரும் கௌரவமா பார்க்கிற அளவுக்கு ஒரு வேலையில் இருக்கோம்…..ஆனா இந்த வாழ்க்கை பாடம் பாருங்க…..சப்போஸ் இப்ப நம்ம இயேசப்பா பொய் சொல்லக் கூடாதுன்னு ஒரு பாடம் கத்து கொடுக்கிறாங்கன்னு வைச்சுகோங்க…… அந்த போர்சன்ஸ் பிடிக்கலைன்னு சொல்லியோ இல்லை போர் அடிக்குத்துன்னு சொல்லியோ ஸ்கிப் பண்ண முடியாதே? That only the problem………
இந்த பாடம் நம்ம பொண்ணுக்கு/பையனுக்கு பிடிக்கலைன்னு சொல்லி அவரும் வேற பாடம் கத்துக் கொடுக்க மாட்டாரே….இதுதான் நம்ம தேவன். என்ன பிரெண்ட்ஸ், கொஞ்சம் உங்க மனசில நம்ம இயேசப்பாவை கொடுமையான டீச்சரா கற்பனை பண்ணி வைச்சிட்டீங்க போல…..
அப்ப நீங்களே ஒத்துக் கொள்ளுறீங்க, நம்மளால ஒவ்வொரு புது வருசமும் தேவனுக்குள்ள எடுக்கிற தீர்மானங்களை நிறைவேற்ற முடியாம போனதுக்கு காரணம் நம்ம இயேசப்பா ரொம்பவே ஸ்ட்ரிக்ட் டீச்சரா இருக்கிற காரணம்தான….. அப்ப மனம் திரும்புதல் மட்டும் எப்படிங்க ஈஸி?? நம்ம பையன் இந்த அளவுக்கு தேறி வருகிறானேன்னு சொல்லி அவர் மட்டும் கொஞ்சம் நல்ல டீச்சரா இருந்தா வைத்து கொள்ளுங்க…..எல்லாரும் சென்டம் தான்…
ஆனா நீங்க ஒரு முக்கியமான விசயத்தை மறந்துட்டீங்களே….வெறும் ஸ்கூல்/காலேஜ் படிப்பில ஒரு வருஷம் தவறுசுன்னா அடுத்த வருஷம் எழுதிரலாம்…..ஆனா நம்ம இயேசப்பா நமக்கு தினமும் கத்து கொடுக்கிற இந்த வாழ்க்கை பாடத்தில தவறுச்சுன்னா பரலோகத்துக்கு சொந்தமான நாம நரகம் போக வேண்டியதா போயிருமே….அது மட்டுமில்ல நம்மளை இப்பவும் தொல்லைப்படுத்த சாத்தான் இருக்கானே….
இன்னொரு முக்கியமான விசயம் நாம மறந்திட்டோம் பிரெண்ட்ஸ்…நம்ம தேவனால் நமக்கு குறிக்கப்பட்டிருக்கிற கிருபை காலங்கள் இன்னும் எத்தனை நிமிசங்கள்ன்னு கூட நமக்கு தெரியாது…..
அப்படி இருக்கும் போது நாம ஸ்ட்ரிக்ட் டீச்சர்ன்னு சொல்லுற நம்ம இயேசப்பாக்கு வேற வழி இல்லையே? ஆனாலும் பாருங்க….நம்ம ஸ்ட்ரிக்ட் டீச்சர், நம்ம தேவன் நாம எந்த வகையிலயும் பரலோகத்துக்குரிய குணங்கள் கொள்ளாம வெறும் உலகத்தில உள்ளதை பத்தியே வாழுறவங்களா இருக்கும் போது…..
அப்பொழுது அவன்(தேவன்) தோட்டக்காரனை(நம்ம ஸ்ட்ரிக்ட் டீச்சர்) நோக்கி: இதோ மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையும் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி எருப்போடுவேன்,
கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
லூக்கா 13 : 7 – 9
இப்ப சொல்லுங்க பிரெண்ட்ஸ், நாம நம்ம சோம்பேறித்தனத்தால் நம்ம இயேசப்பா கற்று கொடுக்கிற பாடங்களை மனசில வாங்கி கொள்ளாம வாழ்ந்திருக்க, தேவனுக்கு நம்ம மேல எவ்வளவு கோபம் வருது பார்த்தீங்களா? உடனே நீங்க நினைச்சிர வேண்டாம்…..தேவன் சொன்ன மூன்றாவது வருசத்தில நான் இப்ப எந்த நாள்ல இருக்கேன் கணக்கு போட்டுட்டு உட்கார வேண்டாம்….
அதாவது இதுவரைக்கும் ரொம்பவே ஸ்ட்ரிக்ட் டீச்சர்ன்னு சொன்ன நம்ம அழகான, அன்பான டீச்சர் தேவன்கிட்ட கெஞ்சி கேட்கிறாங்க…… இந்த வருசமும் இருக்கட்டும்ன்னு….கண்டிப்பா தெரியலை பிரெண்ட்ஸ்…..நமக்கு இது எத்தனையாவது grace period…… அது மட்டுமில்ல நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்…… நம்ம இயேசப்பா நம்மளை பத்திதான் சொல்லுராங்க…..
எங்களுக்கு ஒரு உண்மை சொல்ல முடியுமா பிரெண்ட்ஸ்…சப்போஸ் நீங்க ஒரு ஸ்கூல்ல எல்லாராலும் மதிக்க படுகிற நல்ல டீச்சர்ன்னு வைத்து கொள்ளுங்க….. உங்க கிளாஸ்ல எது சொன்னாலும் மண்டையில் ஏறாத ஒரு மாணவன் இருக்கான்ன்னு வைத்து கொள்ளுங்க…. நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு அவனுக்கு உங்களுக்கு தெரிந்த முறையில் கற்றுக் கொடுத்தாச்சு…..பட் ஒரு பிரயோஜனமும் இல்லை(நாம கூட பல நேரத்தில நம்ம இயேசப்பா கற்று கொடுக்கிற நேரம் மக்காதான் இருக்கோம்). அப்ப உங்க கிளாஸ்க்கு உங்க பிரின்சிபால் வர்றார்….. அதே வார்த்தைதான் இது என் நிலத்தையும் கெடுக்கிறது….TC கொடுத்துருவோம்ன்னு சொல்லுறார்….. நீங்க என்ன சொல்லுவீங்க பிரெண்ட்ஸ்…..
தலைக்கு மேல ஒரு பெரிய கும்பிடு போட்டு நல்ல வார்த்தை சொன்னீங்க…..இதுக்கு மேல என்னால கண்டிப்பா முடியாது. நீங்க சொன்னப்படியே செய்யுங்க…..சரியா பிரெண்ட்ஸ்….. நாம இதைத்தான செய்வோம்…..ஆனா நம்ம அன்பான ஸ்ட்ரிக்ட் டீச்சர் என்ன சொல்லுறாங்க பாருங்க….. இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி எருப்போடுவேன்….னு.
ஒரு நாள் கொடுத்த பாடத்தை ஒழுங்கா பிள்ளைகள் படிச்சிட்டு வராட்டியே நாம நம்ம டென்ஷன்ல உச்ச கட்டத்துக்கு போயிருவோம்….. ஆனா நம்ம ஸ்ட்ரிக்ட் டீச்சர் பாருங்க…நம்ம வாழ்கையில கிட்டத்தட்ட 20 வருசமோ இல்லை 70 வருசங்கலோ கூட தாண்டி இருக்கலாம்…..ஆனா இன்னும் நம்ம மேல நீடிய பொறுமை உள்ளவரா இருந்து இன்னும் கற்றுக் கொடுத்திட்டேதான இருக்கார்…..
அது மட்டுமில்ல இன்னும் என் பிள்ளைக்கு புரியும் படியா சொல்லி கொடுப்பேன்ன்னு எத்தனை டீச்சர்ஸ் சொல்ல முடியும்? அதுதாங்க நம்ம ஸ்ட்ரிக்ட் டீச்சருடைய சிறப்பான குணம்….. தன் இரத்தம் சிந்தி பெற்றுக் கொண்ட பிள்ளைகள் ஆச்சே….எப்படி அவர் விட்டு கொடுப்பார்…. அதுனாலதான் நம்ம இயேசப்பா நமக்காக இப்பவும் நம்ம தேவன்கிட்ட பரிந்து பேசிட்டு இருக்காங்க…..
என்ன பிரெண்ட்ஸ், நம்ம ஸ்ட்ரிக்ட் டீச்சர் நம்மால அவர் அப்பாகிட்ட வேதனைப்பட்டு பேச நாம காரணமா ஆயிட்டோமேன்னு கஷ்டமா இருக்கா?
இல்லை இனிமே அவர் எங்களுக்கு ஸ்ட்ரிக்ட் டீச்சர் கிடையாது…..என்றும் எங்களுக்கு அவர்தான் உண்மையான டீச்சர்…..
உங்க வார்த்தைகளுக்காக தேங்க்ஸ் பிரெண்ட்ஸ்…..அடுத்த தடவை வரும் போது கண்டிப்பா மறந்திராதீங்க…..நம்ம அழகான டீச்சர் நமக்கு கற்று கொடுக்க போற பாடங்களை நோட்ஸ் எடுக்கிறதுக்கு பென் வித் நோட்……. அதோட என்ன கற்று கொடுக்க போறாங்க நம்ம இயேசப்பா என்கிற ஆர்வமும் சேர்த்து????? தேவனுக்குள் சந்திப்போம்
One thought on “மனம் திரும்பி விட்டீர்களா?(7)”
Leave a Reply
மனம் திரும்பி விட்டீர்களா?(7)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives
god is good