-
வேதாகம பாத்திரங்கள்(1)
சாட்சியுள்ள வாழ்க்கை???
ஹாய் குட்டிஸ், உங்களை இந்த வேதாகம பாத்திரங்கள் என்கிற தலைப்பில் நம்ம இயேசப்பாவின் கிருபையால சந்திக்கிறதால ரொம்பவே சந்தோசப்படுகிறோம். நாம பைபிள் எடுத்து வாசிக்க ஆரம்பித்த நாட்களில் ரொம்பவே அதிகமா விருப்பப்பட்டு வாசித்தது என்னவா இருக்கும் சொல்ல முடியுமா?? ஈஸியா சொல்லுவீங்க??? சங்கீதமும், நீதிமொழிகளும், சரியா குட்டிஸ். கிட்டத்தட்ட அம்மா, அப்பாவும் அதில உள்ள எல்லா வசனங்களையும் மனப்பாடம் பண்ண வைச்சிட்டாங்க சரியா…. சில நேரம் உங்க அம்மா, அப்பா மேல இந்த காரியத்திற்காக கோபம் கூட பட்டிருப்பீங்க….அப்ப நீங்க கூட எங்க அம்மா, அப்பா செய்தது சரின்னு சொல்லுறீங்க….நாங்க எவ்வளவு சின்ன பிள்ளைகள். எங்களை போய் அவ்வளவு பெரிய வசனங்களை படிக்க வைக்கிறது தப்பு கிடையாதா??? நம்ம இயேசப்பா கூட பைபிள்ல சொல்லி இருக்காங்களே, எபேசியர் 6 :4, கொலேசெயர் 3 : 21…..உங்களை ரொம்பவே திடனற்று போகாதப்படிக்கு, கோபப்படுத்த கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, சரியா….பரவயில்லையே எங்களை பற்றி நீங்க நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்கீங்க, நீங்க எங்களை பாராட்ட நினைக்கிறீங்க சரியா குட்டிகளா???
ஆனா அதுக்காக நாங்க உங்க அம்மா,அப்பாவின் முயற்சியை குறை சொல்லலையே. அப்ப நீங்களும் எங்க அம்மா, அப்பாவின் கட்சிதானா…..இல்லை குட்டிகளா, அப்படி கிடையாது. நம்ம இயேசப்பா கொடுத்த வார்த்தைகளை நீங்க நல்லாவே தெரிந்து வைச்சிருக்கணுமே. நாங்க தான் தினமும் நம்ம இயேசப்பா வார்த்தைகள் இருக்கிற இந்த பைபிள்ளை தினமும் காலை, நைட்ன்னு ரெண்டு தடவை படிக்கதான செய்யுறோம்….அப்படி இருக்கும் போது அதை மனப்பாடம் பண்ணனும்னு ஏதாவது அவசியம் இருக்கா??? கேட்க நீங்க நினைக்கிறது எங்களுக்கும் புரியுது குட்டிஸ்.
ஆனா உங்க பாட புத்தகத்தை கூட, பத்து தடவை படிச்சி, ரெண்டு தடவை எழுதி பார்த்தாதான உங்களால் தெளிவா உங்க exams டைம்ல முகத்தில ஒரு குழப்பம் கூட இல்லாம டெஸ்ட் எழுத போக முடியுது. இந்த உலகத்தில் உங்களை தகுதி படுத்தி கொள்ள வைக்கிற உங்க பாட திட்டத்தையே நீங்க இந்த அளவுக்கு விழுந்து விழுந்து படிக்க நினைக்கும் போது ஜீவனை அதாவது உங்களுக்கு என்றும் வாழ்கையை கொடுக்கிற தேவ வசனங்களை மனப்பாடமா தெரிந்து வைச்சிருக்கணும்ன்னு உங்க அம்மா, அப்பா நினைக்கிறது தப்பா???
ரொம்பவே அழகா சொல்லுறீங்க, ஆனா எங்க அம்மா, அப்பாவை யார் அவங்க சின்ன வயசில இந்த அளவுக்கு பைபிள் வசனங்களை மனப்பாடம் பண்ண வைச்சாங்க….. உங்க கேள்வி சரிதான்….ஆனா ஒரு காரியத்தை நீங்க உங்க அம்மா, அப்பா வாழ்கையில் கவனித்து பார்த்தது உண்டா??
உங்க அம்மா, அப்பா வாழ்கையில் பண விசயத்தில், சொந்த பந்த காரியங்களில் பிரச்சனைகள் வரும் போது எந்த அளவுக்கு தேவ வசனங்களை முதல் நிறுத்தி முடிவு எடுக்கிறாங்க. உங்க உதடை பிதுக்குறீங்களே குட்டிஸ். தீடீர்னு பண பிரச்சனையை உங்க குடும்பம் பேஸ் பண்ணுகிற நேரத்தில் நீங்களும் இப்ப பெரி பிள்ளைகளாச்சே. அப்ப வீட்டில் என்ன நடக்குதுன்னு உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்….அம்மா, உங்க அப்பா முகத்தை பார்க்கிறதும், அப்பா தன் பிரெண்ட்ஸ் நம்பரை ஒண்ணு கூட விடாம ட்ரை பண்ணி, ஒரு உதவி கூட கிடைக்காம, கடைசியில உங்க அம்மாவும், அப்பாவும் நம்ம இயேசப்பா சமூகத்தில் போய் முழங்கால் போட்டு, நாங்க உங்க பிள்ளைகள்தான. அப்ப எங்களுக்கு ஏன் இத்தனை பிரச்சனைகள்ன்னு கதறி அழுத நேரங்களை நீங்க பார்த்தது உண்டா???
சாரி…இந்த காரியத்தை எல்லாம் நாங்க பார்க்கிறதே கிடையாது. எங்களுக்கு தேவையானதை அவங்க வாங்கி தந்தாங்களா??? அது மட்டும்தான் எங்களுக்கு தெரிந்த விசயம்ன்னு சொல்லி உங்களை நீங்களே அவமானப்படுத்திக்க ஆசையா??? அப்படி அவங்க அழும் போது உங்களுக்கே கூட கொஞ்சம் வேதனையா இருக்கும்….என்னடா நானும்தான் family prayer ல இந்த காரியத்தை குறித்து எத்தனை நாள் இயேசப்பாகிட்ட சொல்லுறது…ஆனா அவர் மனசு ஏன் எங்க மேல இரக்கம் பாராட்ட மாட்டிக்கிது….நம்ம இயேசப்பாவை திட்டின நேரங்கள் உண்டா??? கொஞ்சம் தலை குனியுரீங்களே குட்டிஸ். எல்லா நேரமும் நாம அற்புதங்களை எதிர்பார்க்கிறது தப்புன்னு உங்களுக்கே தோணலையா???
நம்ம இயேசப்பா கொடுக்கிற வார்த்தைகளுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்காம நம்ம இஷ்டப்படி வாழ்ந்திட்டு கடைசியில அவர் சமூகத்தில் கெஞ்சி நின்னா அவரால மட்டும் என்ன செய்ய முடியும்? சப்போஸ் நம்ம இயேசப்பா நம்ம மேல இரக்கப்பட்டு உதவி செய்தாலும் நம்மளை சுத்தி இருக்கிறவங்க என்ன நினப்பாங்க….
இவங்களுக்கு என்னப்பா….இவங்க என்ன கேட்டாலும் அவங்க இயேசப்பா கொடுக்கிறாங்க…..ஆனா இந்த ஆட்கள் குணத்தில மட்டும் இது வரைக்கும் ஒரு மாற்றமும் இல்லைன்னு நம்ம காதுக்கு பக்கத்திலேயே சொல்லிட்டு போவாங்க. அப்ப நம்ம இயேசப்பா நாமம் தூஷிக்கப்படுமே, பரவாயில்லையா???….இப்ப புரியுதா குட்டிகளா….ஏன் எல்லா கிறிஸ்தவர்களும் தன் வாழ்கையில் இன்னும் தான் விரும்புற அளவுக்கு நம்ம தேவன்கிட்ட இருந்து அற்புதங்களையும், அதிசயங்களையும் வாங்கிக்க முடியலை??? இதுதான் காரணம்…..எப்ப பார்த்தாலும் அதிசயமும், ஆச்சர்யங்கள் இருப்பது மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கை கிடையாது….பாடுகள், கண்ணீர் வரும் போது நம்ம வாழ்க்கை நம்ம தேவனுக்குள் எப்படி இருக்கு என்பதை நம்ம பக்கத்தில் இருக்கிறவங்க மட்டும் இல்லை…. நம்ம இயேசப்பாவும் ரொம்பவே விரும்பி பார்க்கிறாங்க….
அப்ப கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு சாட்சியுள்ள வாழ்க்கையா??? ன்னு நீங்க கேள்வி கேட்க நினைக்கிறீங்க சரியா….நீங்க கேட்டது சரிதான். நம்ம இயேசப்பாவை குறித்த உங்க ஒரு மணி நேர போதகம் செய்ய முடியாத சாதனையை, உங்க வாழ்க்கை ஒரே நிமிஷத்தில் செய்திரும்….உங்க பக்கத்தில் இருக்கிறவங்க வாழ்கையை தலை கீழா நம்ம இயேசப்பாக்குள்ள கொண்டு வந்திரும். அப்ப தன் பிள்ளைகள் வாழ்கையில் நம்ம இயேசப்பா இடைப்படணும்னு அவர் ஆசைபடுறது தப்பா….அதுக்கு நீங்க நம்ம இயேசப்பாவை தெரிந்து வைச்சிருக்கணும்ன்னு அவர் நினைக்கிறது தப்பா…..அது மட்டுமில்ல உங்க வாழ்க்கை உங்க கண்ட்ரோல் கூட இல்லாம பல நேரங்களில் தவறி நீங்க வேதனைப்படுற சமயம் உங்க பக்கத்தில் வந்து ஒரு பிரெண்டா உங்களை தூக்கி விட நினைக்கிற அவர் அன்பு தப்பா குட்டிஸ்….. இதுக்கு எல்லாமே ஆதாரம்….அவரோட நீங்க இடைப்படுற நேரங்கள்….பைபிள் வாசிக்கிறதும், அவரோட பேசுறதும்….. ஆனா சின்ன வயசில இருந்து அதே ரெண்டு நிமிச prayer….ஐந்து நிமிச பைபிள் வாசிப்புன்னு இருந்தா நம்மால எப்படி நம்ம இயேசப்பாவுடைய அருகாமையை உணர முடியும்???
அதுனாலத்தான் அவர் உங்களுக்கு தன்னை புரிய வைக்கிறதுக்காக அவரோட வாழ்ந்த தன் பிள்ளைகளை குறித்து சொல்லி நீங்க எப்படி அவருக்குள்ள வாழ அழைக்கக்பட்டிருக்கீங்கன்னு சொல்ல ஆசைபடுறார்??? அடுத்த முறை நம்ம இயேசப்பா வேதாகம பாத்திரங்கள் குறித்து என்ன சொல்லுறாங்கன்னு அவர்கிட்டயே கேட்டு தெரிந்து கொள்ளலாமா???
மனம் திரும்பி விட்டீர்களா?(2) Are you repent?(2)
வேதாகம பாத்திரங்கள்(1)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives