• மனம் திரும்பி விட்டீர்களா?(2)

    வலி????

    pain1

    என்ன பிரெண்ட்ஸ், நம்ம தேவனை இருதயத்தில் வைச்சிருக்கிறேன், அவர் வார்த்தையை என்றும் என் வாய் சமீபத்தில் இருக்குதுன்னு சொல்லிட்டு இருந்த நம்ம பந்தா எல்லாம் நம்ம இயேசப்பா இப்படி ஒரே வார்த்தையில் சுக்கல் நொறுக்கலாய் ஆக்கிட்டாரேன்னு நீங்க புலம்ப ஆரம்பிச்சது எங்களுக்கும் புரியுது. நீங்க மட்டும் இல்லை, நம்ம தேவனை அறிந்த விசுவாசிகள், அவர் வார்த்தையை மற்றவங்களுக்கு சொல்லி கொடுக்கிற உபதேசியார்கள், போதகர்கள் கூட…..கொஞ்சம் தங்களுடைய இருதயம் பக்கத்தில் கையை வைச்சி……உண்மையில் நான் என் இயேசப்பாவை ஒரு பயத்தின் காரணமா மட்டும்தான் நினைச்சி பார்க்கிறேனான்னு நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க…..

    உடனே நீங்க ஒரு பெரு மூச்சு விடுறது எங்களுக்கும் புரியுது பிரெண்ட்ஸ்….. நான் என்னமோ நான் மட்டும்தான் தப்பு செய்துட்டு இருந்தேன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எனக்கு துணையா ஒரு பெரிய கூட்டமே இருக்குது போல…..கொஞ்சம் உங்க முகத்தில் ஒரு சந்தோசம் தெரியுதே???

    ஆனா இது சந்தோசம் பட வேண்டிய விசயம் இல்லைன்னு உங்க மனசே உங்களை இடித்து காண்பிக்குமே?? இது வரை கண் முழிச்சி பைபிள் வாசித்தது, முழங்கால் வலிச்சாலும் பரவாயில்லைன்னு நினைச்சி ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் என prayer பண்ணினது எல்லாம் அப்ப வேஸ்ட்டா??? உங்க மனசு உங்களுள்ள அழுற சத்தத்தை கேட்காம தன் காதை அடைத்து வைக்கிற அளவுக்கு நம் இயேசப்பா ஒண்ணும் இருதயம் இல்லாதவர் கிடையாது. நம்மளை உண்மையில் நாம இருக்கிற பிரகராமாகவே நேசிக்க முடிந்த ஒரு உண்மையான தகப்பன்.

    உடனே உங்க மனதில் ஒரு கேள்வி வரலாம்? எப்ப பார்த்தாலும் எல்லாரும் இப்படியே சொல்லுறீங்க, ஏன் ஒரு மனுஷனால என்னை என் குணம் தெரிந்தும் கடைசி வரை விரும்ப முடியாதா என்ன?? சரியா பிரெண்ட்ஸ்???

    அப்ப நீங்களே சொல்லுங்க, உங்களை இந்த அளவுக்கு நேசிக்க தெரிந்த நபர் யாருன்னு??? கொஞ்சம் நீங்க யோசிக்க அவகாசம் தேவைன்னா தாராளாமா எடுத்து கொள்ளுங்க…..அப்ப நம்ம சாலொமோன் ராஜா மாதிரி யோசிக்கலாமா? அப்படி என்னதான் அவர் செய்தாருன்னு உங்க மனசுல ஏற்கனவே கேள்வி எழும்பிருச்சு? நம்ம சாலோமோன் ராஜா என்ன செய்தார் தெரியுமா பிரெண்ட்ஸ்? எதுதான் உண்மையா ஒரு மனுசன் இந்த வானத்தின் கீழே அனுபவிக்க முடியும்ன்னு தெரிந்து கொள்ள தன்னுடைய ஞானம், மது பானம், பெண்கள், வீடு, ஐஸ்வரியம்ன்னு எல்லாத்தையும் ட்ரை பண்ணினாராம். ஆனா கடைசியில எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமாய் இருக்கிறது என்ற ஒரு தீர்மானத்துக்குதான் அவரால வர முடிஞ்சது.

    நாம கூட நம்ம சாலொமோன் மாதிரி, நாம ஒரளவு அபிப்ராயம் உள்ள சொந்த பந்தங்கள் முன்னாக நம்மளை உத்தம வழியில் சீராக்கி, அவங்களுக்கு ஒரு உண்மையானவரா நடக்கும் போது, நீங்க ஆசைப்பட்ட…. நான் இருக்கிற பிரகாரமாய்  என்னை நேசிக்க தெரிந்தவங்க??ன்னு நிருபிக்கிற வகையில் யாராவது ஒருத்தரை சொல்ல முடியுமா???? சாரி பிரெண்ட்ஸ், நாம ஒரு வருஷம் எடுத்து இந்த அசைன்மென்ட் செய்தாலும் சரி, இல்லை உங்க வாழ்நாள் முழுவதும் ஒருத்தர்கிட்ட தோத்து அடுத்த ஆளை ட்ரை பண்ணி, இதே மாதிரி ஒவ்வொருத்தர் உங்க வாழ்கையில் வந்து போனாலும் சரி……கடைசி வரை நம்மால அப்படி ஒருத்தரை கண்டுபிடிக்கவே முடியாது.

    இல்லை உங்களை உங்க குறை, நிறை தெரிந்த பிறகும் கூட, உண்மையா கடைசி வரை அன்பு கூர முடிந்த ஒருத்தரை கண்டுபிடிச்சிட்டீங்களா?? சில பேரு இல்லைன்னு உதடுகளை பிதுக்கினாலும், பலபேரால இன்னும் தங்களுடைய தோல்வியை ஒத்துக்க முடியலைன்னு சொன்னா சரி வருமா???

    நீங்க எப்ப பார்த்தாலும் ஏன் நெகடிவ்வாகவே பேசுறீங்க….எனக்கும் நிறைய பிரெண்ட்ஸ் உண்டு, எத்தனை க்ளோஸ் தெரியுமா??? அதெல்லாம் உங்களுக்கு என்ன புரிய போகுது??? நான் எப்படிபட்டவனா இருந்தாலும் அவன் இன்னமும் நேசிக்கிறான்……அப்படியா பிரெண்ட்….அப்ப எங்களுக்கு சொல்லுங்க, உங்க பிரண்ட் உங்க வாழ்கையில் வந்து எத்தனை நாள் ஆகுது….இல்லை இது எத்தனையாவது பிரெண்ட்? யோசித்து பார்த்தா நீங்க உங்க பழைய பிரெண்டால ஏற்பட்ட காயங்களை நினைக்க வேண்டியது வரும்….இல்லை அப்படி ஒண்ணும் கிடையாது….அவன் என் அன்பை தெரிந்து கொள்ளாம என்னை விட்டு போயிட்டான்….ஆனா இவன் அப்படி கிடையாதுன்னு சொல்லும் போதே உங்களுக்குள்ள ஒரு பயம் வர்றது உங்களுக்கே புரியலையா?? அது என்ன பிரெண்டா இருந்தாலும், ஆண் இல்லை பெண் யாரா இருந்தாலும் உங்க பிரெண்ட் லிஸ்ட்ல ஒவ்வொருத்தரையும் ஒரு வித பயத்துடன் தான் சேர்த்திட்டு இருக்கீங்க….அட்லீஸ்ட் இவனாச்சும் கடைசி வரை என்னுடைய பிரெண்டா கூட வருவானா???ன்னு உங்களுக்குள்ள ஒரு பயம். இதை உங்களால இல்லைன்னு சொல்ல முடியுமா???

    அட்லீஸ்ட் இப்பனாச்சும் ஒத்துக் கொள்ளுவீங்களா??? நம்ம இயேசப்பாவால மட்டுமே அவர் உருவாக்கின அவருடைய பிள்ளைகளாகிய நம்மளை அப்படியே கடைசி வரை நேசிக்க முடியும்னு. உடனே அப்ப இந்த பூமியில் அவர் உருவாக்கின சொந்தம், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, கணவன், மனைவி, பிள்ளைகள், பிரெண்ட்ஸ் எல்லாமே சாலொமோன் ராஜா சொன்ன மாதிரி மாயை தானா…..எல்லாம் என் மனதுக்கு சஞ்சலத்தை கொடுக்க கூடியதா???? அப்படி தான் சொந்தம் இருக்குதுன்னா அவர் ஏன் எல்லாத்தையும் படைச்சி எங்களை எல்லாத்திலயும் தோத்து போக வைக்கணும்??? உங்க கேள்வி நல்ல கேள்விதான் பிரெண்ட்ஸ்…..ஆனா இதை நீங்க எந்த வம்பு பண்ணுற நோக்கில் கேட்கலைன்னு நாங்க நம்புறோம்.

    எல்லாம் எங்களுக்கு புரிய வைச்சது சரி…..ஆனா எல்லாம் சொல்லிட்டு எங்க மனசை உடைச்சிட்டு அப்படி என்னதான் உங்களுக்கு சந்தோசம் கிடைச்சிருச்சு எங்க வேதனையால??? நீங்க கோபப்பட ஆரம்பிச்சதை எங்களால் புரிஞ்சுக்க முடியுது.

    ஒண்ணும் இல்லை பிரெண்ட்ஸ். ஒரு சின்ன டெஸ்ட். நம்ம இயேசப்பா தன் பிள்ளைகள் தன்னை ஒரு பயத்துடன் மட்டும்தான் யோசிக்கிறாங்கன்னு சொன்னப்ப அந்த வேதனையை அப்ப நம்மால புரிஞ்சுக்க முடியலையே. இல்லை நான்தான் அப்படி கிடையாதுன்னு எத்தனை முறை நம்ம மனசுக்குள்ளயே அவர் சொன்ன வார்த்தையை எதிர்த்தோம்…..ஆனா நமக்கு நம்ம மனசு உடையும் போது மட்டும் ஏன் பொறுமை இருக்கிறதில்லை. கொஞ்சனாச்சும் அவர் எந்த வேதனையில் அந்த வார்த்தையை சொன்னாருன்னு நாமளும் புரிஞ்சுக்கணுமே??? இப்ப சொல்லுங்க….அவர் தன் பிள்ளைகள் தன்னை உண்மையான அன்போடு நினைச்சி பார்க்கிறதில்லைன்னு சொன்னப்ப எந்த வேதனையோடு சொன்னார்ன்னு புரிஞ்சுக்க முடியுதா??? என் மேல உண்மையில் கடைசி வரை எந்த ஒரு மனுஷனாலும் உண்மையான அன்பு வைக்க முடியலைன்னு தெரிந்து கொண்டப்ப உங்க மனசு உடைஞ்சதே அந்த வலி…..அதே வலிதான் நம்ம இயேசப்பாவும்….. என் பிள்ளைகளை நான் முழுமையா நேசித்தாலும் அவங்களால என் மேல கடைசி வரை உண்மையா அன்பு வைக்க முடியலைன்னு உடைஞ்சு துடிக்கிறார்…..அவர் படுகிற அளவுக்கு நம்மால முழுமையான வலியை உணர முடியலைன்னாலும் ஏற்கனவே ஒருத்தர் மேல உண்மையான அன்பு வைச்சி அதை அவங்க புரியாம உங்களை உதாசீன படுத்தின நேரம் இப்ப உங்களுக்கு ஞாபகம் வருதா???அது வெறும் நம்ம இயேசப்பா நமக்காக தினமும் படுகிற வேதனையில் 10ல் 1 பங்கு மட்டுமே….(நம்ம இயேசப்பாக்கு நாம நம்ம நன்மையில் 10ல் ஒரு பங்குதான கொடுக்கிறோம் பிரெண்ட்ஸ்!!!) அப்ப மிச்ச உள்ள வலியையும் நாம தெரிந்து கொண்டா என்ன ஆவோம்????

    Related Post

    Categories: மனம் திரும்புதல்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    nine − = 8

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>