-
இச்சையடக்கம்
கிரேக்க நாட்டில் பாரம்பரிய கதை ஒன்று உண்டு. அடலாண்டா என்னும் பெண் மிகவும் வேகமாக ஓடக்கூடியவள். அது மாத்திரமல்ல, குறிதவறாமல் அம்பெய்வதிலும், சிறந்த வேட்டைக்காரியுமாயிருந்தாள். அவளை திருமணம் செய்ய அநேகர் முயன்றனர். அவர்களுக்கு அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். தன்னை ஓட்டப்பந்தயத்தில் யார் தோற்கடிக்கிறார்களோ, அவனை மணப்பதாகவும், இல்லாவிட்டால் அவனை கொன்று விடுவதாகவும் நிபந்தனை விதித்தாள். அநேகர் அவளோடு போட்டிப் போட்டு தோற்று தங்கள் தலைகளை இழந்தனர்.
.
ஹிப்போமெனஸ் என்பவன் இவளை நேரடியாக மோதி, தோற்கடிக்க முடியாது, எப்படியாவது தந்திரமாக தோற்கடிக்க வேண்டும் என்று சொல்லி, மூன்று தங்க ஆப்பிள்களை கொண்டு வந்து, ஓடும்போது, அவ்வப்போது ஒவ்வொன்றாக வீசினான். அடலாண்டா அது என்ன என்று பார்க்க குனிந்து எடுக்கும்போது, அவன் வேகமாக ஓடி ஜெயித்து, அவளுக்கும் மாலையிட்டான் என்பது கதை.
.
எப்பேற்பட்ட வீராங்கனையாக இருந்தாலும், கண்களின் இச்சை என்று வரும்போது விழுந்து போவது சகஜம். தன்னுடைய பெலத்தினால் அநேகரை விழப்பண்ணினவள், கண்களின் இச்சையினால் அவளே விழுந்துப் போனாள்.
.
வேத வசனம்:
—————–‘பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்’ (நீதிமொழிகள் 16:32)
‘கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்’ (கலாத்தியர் 5:24)
.
Original Source From: anudhinamanna.net
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)-37 தயவு
இச்சையடக்கம்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives