-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 3
ஏஞ்சல் நீங்களும், உங்களோட சேர்ந்து எல்லா தூதர்களும் நம்ம தேவனை இரவும் பகலும், ஓயாது தொழுது கொண்டிருப்பார்கள்ன்னு நான் பைபிள்ல வாசித்திருக்கேன். நம்ம தேவனை பக்கத்தில இருந்து தொழும் போது, அந்த சந்தோசம் எப்படி இருக்கு?
அது ரொம்பவே பாக்கியத்திற்குரியவை குட்டிமா. அந்த சந்தோசத்தை எங்களால் வார்த்தையால் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட மகிமை உள்ள தேவனை துதிக்கிறதுக்கு அவர் எங்களை தெரிந்து கொண்டதே அவர் எங்களுக்கு காண்பித்த கிருபை. நம்ம தேவன் ரொம்பவே வல்லமையுள்ளவர், மகிமையானவர், ஒளியானவர், பரிசுத்தம் நிறைந்தவர்…..நீயும் பைபிள்ல படிச்சிருப்ப. அப்படிப்பட்ட மகிமையுள்ள நம்ம தேவனை நாங்க எப்பவும் பக்கத்தில இருந்தே துதித்தாலும், அவர் பரிசுத்தத்திற்கு முன்னாடி நாங்க கூட நிற்க முடியாது.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 2
அவள் சற்றும் எதிர்பாராத நேரம் அவளுடைய கைகளை பற்றிய ஏஞ்சல், காற்றின் வேகத்தை விட அதிக வேகமாய் பறந்தார். காற்று இவ்வளவு வேகமாகவா வீசும்……மனத்துக்குள் நினைத்து கொண்டாள். புயலா இருக்குமோ….கண்களை இறுக்க மூடி கொண்டாள்.
கண்களை திறந்த நேரம் ஏதோ ஒரு இருட்டினுள் இருந்த நிலை தோன்றியது அவளில்.
ஏஞ்சல் என்னை இந்த இடத்திற்கு ஏன் கூட்டிட்டு வந்தீங்க?
நீ என்ன பார்க்குற குட்டிமா?பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 1
என்ன எங்க பார்த்தாலும் இருட்டு, ஒரு சத்தமும் காணும்……..என்னால ஒண்ணும் பார்க்க முடியலை, உங்களுக்கு ஏதாவது தெரியுதா, உங்களால எதையாது கேட்க முடியுதா……..என்ன ஒரு சத்தத்தையும் காணும், யாராவது பக்கத்தில இருக்கீங்களா பிரெண்ட்ஸ்………
நான் எதுவும் கனவு பார்த்திட்டு இருக்கேனோ……இல்லை என் கண்லத்தான் எதுவும் பிரச்சனை வந்திருச்சோ….தயவு செய்து யாராவது பேசுங்களேன், ப்ளீஸ்…..
ஆ…..கிள்ளினா கை வலிக்குதே. அப்ப இது கனவில்லை. அப்ப நான் படுத்திருந்த பெட் எங்க? எங்க அம்மா, அப்பாவை காணும். எங்க வீடு எங்க போச்சு?
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives