-
மனம் திரும்பி விட்டீர்களா?(3)
அர்த்தம் என்ன???
ஹாய் பிரெண்ட்ஸ், நம்ம இயேசப்பா நமக்கு அவர் நம்மை குறித்த எந்த வேதனையில் இருக்கிறாங்க என்பதை ரொம்பவே அழகா சொல்லி கொடுத்தாங்க , அப்படிதான……உடனே நீங்க முனுமுனுக்கிற சத்தம் எங்களால தெளிவாகவே கேட்க முடியுது…..
ஆமா…..என்ன வலி…..எங்களுக்கு வந்த வேதனை எங்களுக்கு தான் தெரியும்….இப்பெல்லாம் எல்லாரையும் பார்க்கும் போது ஒரு ஆராய்ச்சி கண்ணோடதான் பார்க்கிறோமான்னு எங்களுக்கே ரொம்ப சந்தேகமா இருக்கு…..தேவையா எங்களுக்கு இந்த பாடு??? உங்க மனசு புலம்புது….சரியா???
ஆனா இந்த நிமிஷம் வரை நாம செய்த காரியங்களால் நம்ம இயேசப்பாவை வருத்தபடுத்தினது அதிகமே????
ஆனா நீங்களே சொல்லுங்க……நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்த வார்த்தைகள் எல்லாம் என்ன ஈஸியா கைகொள்ளுகிற மாதிரியா இருக்கு?? சின்னதா ஒரு காரியம் எடுத்துக்கோங்க……என் மேல அன்பு வைக்கிறவங்க மேல நான் அன்பு வைக்கிறது ஈஸி….ஆனா என்னை வெறுக்கிரவங்களையும் போட்டு அன்பு கூரு…..ன்னு சொன்னா இது செய்ய முடியுற காரியமா என்ன????…… உங்க மனசு கேள்வி கேட்கிறதை எங்களால் புரிஞ்சுக்க முடியுது பிரெண்ட்ஸ்……ஆனா நம்ம இயேசப்பா இதை குறித்து என்ன சொல்லறாங்கன்னு கேட்டிருவோமே…..
அப்ப இந்த நிலையில்லாத உலகத்தில் எல்லா உறவுகளும், உணர்வுகள் கூட…..போலியானதான் இருக்கும். அதையும் அப்படியே ஏத்துக் கொள்ளுற பக்குவத்தோட ஓடினாலும் சரி…..இல்லை இவன் இப்படி…அவன் இப்படி…..அவன் கூட பேச மாட்டேன்…..அவனால எனக்கு ஒரு நன்மையையும் ஆகப் போறதில்லைன்னு சொல்லி முகத்தை திருப்பிட்டு காலம் முழுவதும் ஓடட்டுமே……ன்னு நம்ம இயேசப்பா சொல்லுறாங்க…..பிரெண்ட்ஸ்….நாம என்ன செய்ய????
அப்ப இயேசப்பா என்கிட்டே என்னதான் பேச ஆசைபடுறார்??? முதல்ல என்னை கடைசி வரை யாராலும் உண்மையா அன்பு கூர முடியாதுன்னு சொன்னாங்க…..சரின்னு நாங்களும் ஒத்துக் கொண்டோம்….மற்றவங்களை நோக்கி நீட்டின விரலை கொஞ்சம் எங்க பக்கமும் நீட்டி…..உன்னால யார் மேலாவது கடைசி வரை உண்மையா அன்பு கூர முடியுமான்னு கேட்டப்ப பதில் இல்லைன்னு வந்ததால சரி…..இது மனுசங்களுக்கே உண்டான பலவீனம்ன்னு நினைச்சி மனசை தேற்றி கொண்டோம்….ஆனா அதுக்குள்ள உறவுகள், மனுசங்கள் போலின்னு சொல்லுறதும், அடுத்து நீங்க வாழ்நாள் முழுவதும் ஒரு கோப தாபத்தோட வாழுறதுக்கும் ஓகேவான்னு சொன்னா என்ன சொல்லுவோம்????
பிரெண்ட்ஸ்….இந்த உலகம் எப்படி என்பதை பத்தி சொல்லி உங்களை வேதனைப்படுத்துறது நம்ம இயேசப்பாவுடைய நோக்கமே இல்லை. இந்த மாயையான உலகத்தில் நாம எதுக்காக அழைக்கபட்டிருக்கோம் என்பதை கூட இன்னும் தெரிந்து கொள்ளாம எப்பவும் பரபரப்பா வாழ்ந்திட்டு இருக்கேன்னு அவர்கிட்டயே நாம ஜம்பம் அடிக்கிறதினால்தான் அவர் நம்மளை பார்த்து வேதனையோட பேசுறார்…… குட்டிமா….இன்னும் உன்னை நான் அழைச்சிருக்கிற அழைப்பை கூட புரிந்து கொள்ள முடியாம….உன் வாழ்கையை எதை நோக்கி போக வைச்சிட்டு இருக்க….என்பது தான் நம்ம தேவனுடைய வேதனை.
சரி இப்ப அவர் சொல்லட்டுமே….எங்களை எதுக்காக அழைச்சிருக்கிறார் சொல்லட்டுமே…. சப்போஸ் அது ஈஸியா இருந்தா ட்ரை பண்ணுறதை பத்தி யோசிக்கலாம்….அப்படி இல்லாம ஊழியம், வேதனைன்னு சொன்னா ரொம்பவே யோசிக்க வேண்டிய விசயமாதான் இருக்கும்….நம்ம மனசு கேள்வி கேட்கிறதை நம்ம தேவன் கண்டிப்பா அறிந்து கொள்வார் பிரெண்ட்ஸ். இருதயத்தையே உருவாக்கினவருக்கு அதில் என்ன நினைவுகள் அதுவும் என்ன சொல்லுறாங்கன்னு புரிஞ்சுக்க முடியாதா என்ன???
சப்போஸ் அவர் பேசுறதை நீங்க கேட்கிற அளவுக்கு உங்களுக்கு பொறுமை இருந்தா அவர் எப்பவும் நம்ம கூட பேச ரெடியா இருக்கிறார். நம்ம இயேசப்பா நம்மகிட்ட ஒரே ஒரு விசயத்தைதான் எதிர்பார்க்கிறாராம் பிரெண்ட்ஸ்…..வாசிக்க சுலபமான வார்த்தையாதான் தோணுது….. இன்றே என்னிடத்தில் மனம் திரும்பு!!!
நாம என்ன சொல்லணும் பிரெண்ட்ஸ்??? உடனே நம்ம இயேசப்பாகிட்ட நான் உங்களிடத்தில் முழுமையா மனம் திரும்பிட்டேன்பா….. ன்னு கூட சொல்ல முடியாதே. …ஏன்னா நம்ம இருதயத்தில் என்ன நினைக்கிறோம் என்பதை கூட தெரிந்தவர் கிட்ட போய் நான் உங்ககிட்ட மனம் திரும்பிட்டேன்னு பொய் சொல்ல முடியாதே….முதலில் அப்படி மனம் திரும்பணுமா என்ன???ன்னு தெரிந்து கொள்ளாமலே அப்பா….உங்களுக்கு ஒரு குட் நியூஸ்….நான் உங்ககிட்ட முழுமையா மனம் திரும்பிட்டேன்னு சொன்னா அது கேலி கூத்தா ஆகிருமே???
அப்ப உண்மையில் மனம் திரும்புதல்ன்னா என்னதான் அர்த்தம்??? நீங்க ஏற்கனவே பொறுமை இழந்து போய் மனசுக்குள்ள கேட்க ஆரம்பிச்சிட்டீங்க??? அதுக்கு நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு அடுத்த முறை அவர்கிட்டேயே கேட்டு தெரிந்து கொள்ளுவோமா???
Bible Characters (1) Are your repent?(3)
மனம் திரும்பி விட்டீர்களா?(3)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives