• மனம் திரும்பி விட்டீர்களா???(6)

    திருப்பாமல் போனீர்கள்???

    images

    என்ன பிரெண்ட்ஸ், நமக்கு நம்ம ஆத்துமாவை குறித்த பாரமும் இல்லை, நம்ம குடும்பத்தை குறித்த பாரமும் இல்லைன்னு தெரிந்து கொண்ட நேரம் அதிர்ச்சியா இருக்கா???

    நீங்க வேற, நாங்க உழைக்கிறது, எங்களை வேதனைப்படுத்துறது எல்லாம் எங்க குடும்பத்துக்காகதான…….அப்படி இருக்கும் போது எங்க பிள்ளைகளை நம்ம இயேசப்பா வழிகளில் எங்களுக்கு நடத்த தெரியலை என்கிற காரியத்தால எங்களுக்கு அவங்களை குறித்த கரிசனையே இல்லைன்னு ஈஸியா சொல்லிட்டீங்க…..நாங்க நினைக்கிறோம்……….. உங்களுக்கு எல்லாரையும் குறை சொல்லுகிற பழக்கம் உண்டுன்னு……

    என்ன பிரெண்ட்ஸ், எங்களை திட்டி முடிச்சாச்சா? தேங்க்ஸ் உங்களுடைய திட்டுதலுகளுக்கு. ஆனா நம்ம இயேசப்பா உங்ககிட்ட சொல்ல வந்த காரியத்தை இன்னும் சொல்லி முடிக்கலை. என்னன்னு அவர்கிட்டயே கேட்டு தெரிந்து கொள்ளலாமா? உங்க முகம் வேறுபடுகிறது எங்களுக்கும் புரியுது….ஆனா தயவு செய்து அவர் உங்ககிட்ட பேச நினைக்கிற காரியத்தை கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமா?

    உங்க பிள்ளைகளுக்கு நீங்க அப்படி என்ன உங்களை கஷ்டபடுத்தி சேர்த்தீங்க?ன்னு நம்ம இயேசப்பா கேட்டா உங்களால் என்ன பதில் சொல்ல முடியும் பிரெண்ட்ஸ்…..பணம் என்பதை தவிர ஆடம்பரம் என்கிற வார்த்தையை தவிர நீங்க உங்களை கஷ்டபடுத்தி, உங்க பொன்னான நேரங்களை செலவழிச்சி உங்க குடும்பத்திற்கு இது வரை சேர்த்து வைத்தது உண்டா?

    அப்ப நாங்க எங்க பிள்ளைகளை ஒண்ணும் இல்லாத பிள்ளைகள் போல வளர்க்க சொல்லுறீங்களா?

    நம்ம இயேசப்பா நம்ம பிள்ளைகளை வளர்க்க சொன்ன சூழ்நிலை …….தன்னுடைய தேவனை பற்றி அவர்கள் புரிந்து கொள்ளுற சூழ்நிலை…..அவர் அண்மையை, அவர் அன்பை புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில….. ஓரளவு உங்களுக்கும் புரிந்திருக்கும்.

    யெஸ்….. நம்ம வாழ்க்கை நம்ம தேவனுக்கு பிரியமான வழியில் இருக்கும் போது நம்ம ஆத்துமாவை மட்டும் இல்லை அது நம்ம பிள்ளைகள் ஆத்துமாவை கூட ஆதாயப்படுத்துமாம்…..இன்னும் நம்ம இயேசப்பா நமக்கு அழகாக, விளக்கமா சொல்ல நினைக்கிற காரியம்….உன் வாழ்க்கை எனக்கு பிரியமான வாழ்கையில் இருக்கும் போது அது உன்னை பரலோக ராஜ்யத்தில் சேர்க்கும் என்பது மட்டுமில்ல உன் பிள்ளைகளையும் கூட என் ராஜ்யத்தை தேட வைக்கும்…… உங்களுக்கு கண்டிப்பா புரிந்திருக்கும் பிரெண்ட்ஸ்…… எல்லா விசயத்தையும் தெரிந்த பிறகும் கூட நம்மால எதுவும் தெரியாத மாதிரி நடிக்க முடியாதே, சரியா பிரெண்ட்ஸ்?????

    சப்போஸ் உங்களுக்கு சந்தேகம் இருந்தா தேவன் தன் குழந்தைகளை ஆசீர்வதிக்கும் போது அவர்களுடைய தலைமுறையும் சேர்த்து ஆசீர்வதித்ததை பைபிள் வாசித்து தெரிந்து கொள்ளுங்க…..நம்ம தேவன் தன் மேல் பிரியமாய் இருந்த ஆபிரகாமை ஆசீர்வதித்தது மட்டுமில்ல அவருடைய பையன் ஈசாக்கு, பேரன் யாக்கோபு, அடுத்த அந்த தலைமுறையில் வந்த யோசேப்பு…..இப்படி அவர்கள் தலை முறை நம்ம இயேசப்பா வரைக்கும் ஆசீர்வதிக்க பட்டிருக்கே…..தன் வார்த்தைக்கு கீழ்படிந்த ஒரே ஒரு குணத்திற்காக நம்ம ஆபிரகாம் வம்சத்தில் தன் பையனை(இயேசப்பாவை) பிறக்க செய்ய நம்ம தேவனால் செய்ய முடியுமானால் நம்மளுடைய ஒரு சின்ன கீழ்படிதல் கூட நம்ம தேவன் இதயத்தில் நமக்குன்னு ஒரு இடத்தை பிடித்து கொடுக்க முடியுமே?????

    நம்ம இயேசப்பா பைபிள் மூலமா தன் வார்த்தைகளுக்கு கீழ்படிந்த பாத்திரங்களை பத்தி சொல்லணும்ன்னா நிறைய சொல்ல முடியும்……ஆனா இப்ப நம்ம தேவன் நம்மகிட்ட ஆசைபடுறது,…. ஏன் குட்டிமா, உன்னால அதே மாதிரி வாழ முடியாதா? இல்லை அவங்களை மாதிரி உன்னை என்னால ஆசீர்வதிக்க முடியாதுன்னு உனக்குள்ள சந்தேகமா?ன்னு நம்ம இயேசப்பா நம்மளை பார்த்து கேட்குறாங்க. நாம என்ன சொல்ல பிரெண்ட்ஸ்????

    ஆபிரகாமை நம்ம தேவன் ஆசீர்வதித்தது உண்மைதான்…..ஆனா??? என்ன பிரெண்ட்ஸ் ஆனா? இன்னமும் நம்ம பிள்ளைகளுக்கு உண்மையான தேவை என்னதுன்னு தெரியாம வீடு நிறைய நிறைய பணத்தை கொள்ளை கொள்ளையா சேர்த்து வைக்க போறோமா??? இல்லை உண்மையில் தன் பிள்ளைகளுக்கு எது தேவைன்னு தெரிந்து கொண்டு இப்பவும் அதை உங்ககிட்ட பேசிட்டு இருக்கிற உங்க இயேசப்பாவின் பேச்சை கேட்க போறோமா??? இப்ப கூட சாய்ஸ் உங்க கையில் தான் கொடுக்கிறாங்க……நம்ம இயேசப்பா. ஏன்னா நம்ம தேவன் தான் ஆட்டி படைக்க நினைக்கிற பொம்மைகள் மாதிரி நம்மளை நினைக்கலை…..உயிரும், சதையும் உள்ள மனுசங்களா நினைக்கிறதினால் தான் இப்பனாச்சும் தன் பிள்ளைகள் தன் பேச்சை கேட்க மாட்டங்களான்னு உங்க வாழ்கையில் எத்தனையோ தருணங்கள் கொடுத்த பிறகும் இந்த தருணத்தையும் கொடுத்து ப்ளீஸ் குட்டிமா….உன்கிட்ட நான் பேச நினைக்கிற காரியத்தை கொஞ்சம் கேளு…. வெறும் இந்த உலக இன்பங்கள் மட்டுமில்ல இதையும் தாண்டி இன்னொரு உலகம் இருக்கு……..வெறும் இப்ப நீ வாழுற வாழ்க்கை மட்டுமில்ல என்னோடு என்றென்றும் வாழ போற நித்திய வாழ்க்கை இருக்கு….. வெறும் உன் கண்களால் காண்கிற இந்த அழிந்து போகுற காரியங்கள் மட்டுமில்ல என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற பரலோக சந்தோசங்கள் இருக்கு. அதுனால கொஞ்சம் காது கொடுத்து கேளுமா?ன்னு வேதனையோட பேசிட்டு இருக்கிறார்……..

    நம்ம இயேசப்பா நம்மை பற்றிய அவருடைய எல்லா வேதனைகளை வெளிபடுத்திய பிறகும் கூட…….. என்னை குறித்து இயேசப்பா இவ்வளவு வேதனைப்பட அவசியம் தேவையே இல்லை. நான் என் வாழ்கையில் என் இயேசப்பாவைத்தான் முதல் இடத்தில் வைச்சிருக்கேன். என் பிள்ளைகளை கூட அவர் விரும்புற மாதிரிதான் வளர்க்கிறேன்னு….. அவர்கிட்டயே சொல்ல போறோமா????

    ஆகாய் 2 : 15 – 19

    1. இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப் பாருங்கள். (நான் என் இயேசப்பாக்குள்ள நிறைவா வாழ்ந்துட்டு இருக்கிறேன்னு….எந்த நாள்ல இருந்து நீங்க உங்க வாழ்கையில் களி கூர்ந்தீங்களோ அந்த நாள்ல இருந்து இப்ப இந்த வார்த்தைகளை படிச்சிட்டு இருக்கிற நிமிசம் வரைக்கும் நடந்த காரியங்கள் தயவு செய்து கொஞ்சம் திரும்பி பாருங்க).
    2. அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்து மரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.(நம்ம வாழ்கையில் கிடைக்கும்னு நாம எதிர்பார்த்த பதவி உயர்வா இருக்கலாம்…..இல்லை இந்த தடவை நான் இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன். அதுனால இவ்வளவு மகசூல் வரும்னு நாம தீர்மானிச்ச எந்த ஒரு காரியம் இருந்தாலும் அது உங்களுக்கு அப்படியே எதிர்மறையா நடந்திருக்கா???)
    3. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதை திருப்பாமல்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (உன் கை வேலை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் உபாகமம் 14 : 29, நம்ம கை வேலையை எல்லாத்தையும் ஆசீர்வதிப்பேன்னு சொன்ன அதே நம் ஆண்டவர் அடித்தேன்னு ஏன் சொல்லுறாங்க பிரெண்ட்ஸ். ஆனா அப்படி இருந்தும் நம்ம மனதை அவர்கிட்ட நாம திருப்பலைன்னு சொல்லுறாங்களே?)
    4. களஞ்சியத்தில் இன்னும் விதைத் தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்க வில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான். (எந்த வியாதி படுக்கையா இருக்கட்டும், இல்லை நாம ரொம்பவே எதிர்பார்த்த காரியத்தில் ஏற்படுகிற பெரிய ஏமாற்றங்களா இருக்கட்டும்….அனைத்தும் வருகிற நேரம் புலம்ப தெரிந்த நம்மளால் ஏன் அவர் சமூகத்தில உட்கார்ந்து அவர் நம்மகிட்ட என்ன பேச நினைக்கிறார்ன்னு தெரிந்து கொள்ள முடியலை…. இயேசப்பா என்னை அடிக்கிறாங்க ஈசியா சொல்ல முடிந்த நம்மளால் ஏன் அவர் நம்மை அடிக்கிறார்ன்னு தெரிந்து கொள்ள முடியலை….அட்லீஸ்ட் அடுத்த முறை அந்த வேதனை வருவதை தவிர்க்கலாமே?? அதாவது நம்ம இயேசப்பா பேச்சுக்கு கீழ்படிவதால் அடுத்த முறை வேதனைகள் வராதே???)

    என்ன பிரெண்ட்ஸ் நம்ம இயேசப்பா ஆகாய் தீர்ககதரிசி மூலமா சொல்லி கொடுத்த காரியம் கண்டிப்பா உங்களை பாதித்திருக்கும்னு நம்புறோம். ஆனாலும் இப்ப நமக்கு கிடைச்ச ஒரே ஆறுதல்….அவருடைய வாக்குத்தத்தம்….நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்…..என்கிற வார்த்தை. தன் பிள்ளைகள் தன்கிட்ட திரும்பணும் ஆசைபடுற நம்ம இயேசப்பா அவர்களை ஆசீர்வதிக்க என்றும் ரெடியா இருக்கார் என்பது மறுக்க முடியாத உண்மை.

    சப்போஸ் நாம அவர்கிட்ட திரும்புற நாள் இந்த நாளா இருந்தா அவர் இன்னைக்கே ஆசீர்வதிப்பார் என்பது சத்தியம்….. சோ நம்மளை நாமே ஆராய்ந்து பார்ப்போமா? இன்னிக்கி நான் இரவு படுக்கைக்கு தூங்க போற நேரமும், தூங்குற நேரமும், அடுத்து அடுத்த நாளை காண்கிற நேரமும் என்னுடைய எண்ணங்கள் எதில் இருக்குன்னு நாம நம்மளை கண்டுபிடிச்சிட்டோம்ன்னா கண்டிப்பா நம்ம இயேசப்பா நம்மகிட்ட கேட்ட கேள்விக்கு நாம பதில் சொல்ல ரெடியா இருக்கோம் என்று அர்த்தம்…. கர்த்தருக்குள் சந்திப்போம்!!!

    Related Post

    Categories: மனம் திரும்புதல்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − 2 = one

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>