-
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.
.
வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். ‘ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்’ என்றனர். ‘வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்’ என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். ‘நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்’ என்றார்.
.
நாம் முதலில் யாரோடு பேசுகிறோம்? அன்றைய செய்தி தாளுடனா? அல்லது தொலைகாட்சி பெட்டியுடனா, அல்லது மற்றவர்களுடனா? யாருடன் முதலில் பேசுவீர்கள்? அதிகாலையில் எழும்பும் பழக்கம் உண்டா? தொலைபேசி அழைப்போ, அல்லது யாரோ எழுப்பிதான் நீங்கள் எழுவதுண்டா? இவர்கள் உங்களை எழுப்புவதற்கு முனபே தேவனோடு உறவாடி, அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்பீர்களானால் தூங்கி வழிந்த முகத்தோடு அல்ல, புன்சிரிப்போடு எழுந்தரிப்பீர்கள். யாரையும் புன்சிரிப்போடு சந்திப்பீர்கள். அந்த நாளின் எல்லா காரியங்களிலும் நிதானத்தோடு யோசித்து செயல்படுவீர்கள். அன்று வரும் பிரச்சனைகளினால் பதற்றப்பட்டு உங்க்ள சமாதானத்த இழக்க மாட்டீர்கள். கர்த்தரை நம்பி அவர் பொறுப்பில் விட்டு விடுவீர்கள்.
.
வேத வசனம்:
—————–அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். – (சங்கீதம் 143:8)
.
Original Source From: anudhinamanna.net
அன்பு உப்பரிகையின் மேல் நின்ற இருவர்
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives