• மனம் திரும்பி விட்டீர்களா???(5)

    நமது குடும்பம்!!!

    repent5

    என்ன பிரெண்ட்ஸ், நம்ம தேவன் சொன்ன வார்த்தையின் படி நீங்க ஆத்துமா குறித்து பைபிள் வாசித்து தெரிந்து கொண்டீங்களா? தெரிந்து வைச்சிருப்பீங்கன்னு முழுமையா நம்புறோம்.

    ஆத்துமா ஏதோ வெறும் காரசாரமான விவாதங்களுக்கு மட்டும் எடுத்து பேசுற டாபிக் இல்லை….ஏன்னா அது என்றும் நமக்குள்ள இருந்து நாம செய்யுற ஒவ்வொரு காரியத்தையும் கண்காணிக்குது சொன்னா சரி வருமா, பிரெண்ட்ஸ்!!!

    நம்ம எல்லாருக்கும் நம்ம தேவன் படைக்கும் போதே மூன்று இயல்புகளோடதான் படைச்சாங்க…..ஆனா என்ன பிரச்சனை பாருங்க பிரெண்ட்ஸ்….வெளிப்படையா நாம பார்க்கிற உடம்பு….அதாவது சரீரம் என்ன தப்பு பண்ணுதோ அதை எல்லாம் ரெகார்ட் எடுத்துட்டு இந்த ஆத்துமா இருக்கே அது நம்ம தேவனுக்கு விரோதமா தன்னை அசுத்தப்படுத்த ஆரம்பிக்குது……

    நம்ம இயேசப்பா இதை குறித்து என்ன சொல்லுறாங்கன்னு கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா????

    நம்ம தேவன் தன் பிள்ளைகளை எகிப்தில இருந்து கானான் கூட்டிட்டு போன நேரம் சீன் வனாந்திரத்தில் தன் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ளனும்ன்னு நியாய பிரமாணங்களையும், 10 கற்பனைகளையும் மோசே மூலமா சொல்லி கொடுத்தாங்க….அதுல என்ன சொல்லப் பட்டிருந்துச்சுன்னு உங்களுக்கும் நல்லா தெரியும்…. இந்த 10 கற்பனைகள் இருக்கே, ரொம்பவே அழகான விசயம்….

    ஆனா நம்ம இயேசப்பா இப்ப எதுக்கு மோசே மூலமா சொன்ன 10 கற்பனைகள் பத்தி சொல்லுறாங்கன்னு கண்டிப்பா உங்களுக்குள்ள குழப்பங்கள் வரலாம்….. நம்ம இயேசப்பா சொல்லுற காரியங்களை முதல்ல தெரிஞ்சிகிட்டு அடுத்து நம்ப கேள்விகளை கேட்கலாமா???

    10 கற்பனைகளில் முதல் கற்பனை இருக்கே…..ரொம்ப ரொம்ப sensitiveஆன விசயம்….சுருக்கமா சொல்லப் போனா நம்ம தேவன் தன் பிள்ளைகளுக்கு இதை முதலில் சொல்லி கொடுத்தப்ப இதை எந்த அர்த்தத்தில் சொல்லி கொடுத்தாங்கன்னு அவங்களில் தெளிவு இருந்துச்சா??? சரி பிரெண்ட்ஸ்….. இது உங்களுடைய டேர்ன்…. நீங்களே சொல்லுங்க…நம்ம தேவன் தன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு 10 கற்பனைகள் கொடுத்தப்ப, தன்னை நடத்தி வந்த தேவன் எந்த அர்த்தத்தில் அதை சொல்லி கொடுத்தார்ன்னு சொல்ல முடியுமா??? சரி, அதை விடுங்க பிரெண்ட்ஸ், ரொம்ப சின்ன கேள்வி நம்ம இயேசப்பா நம்மகிட்ட கேட்க ஆசைப்படுறாங்க.

    ரொம்ப சின்ன கேள்விதானாம்…..ஆனா நாம பதில் சொல்லிருவோமா பிரெண்ட்ஸ்….. நம்ம தேவன் தன் பிள்ளைகளுக்கு கொடுத்த முதல் நாலு கற்பனைகளையும், நம்ம இயேசப்பா ஒரே ஒரு பிரதானமான கற்பனையா சுருக்கி தான் இந்த பூமியில் இருந்த சமயம் தன் மக்களுக்கு சொல்லி கொடுத்துட்டாங்க…..அது உங்களுக்கு நல்லாவே தெரியும்….. ஆனா தன் பிள்ளைகள்கிட்ட தேவன் விரும்பிய அந்த ரொம்பவே பிரதானமான கற்பனையான முதல் கற்பனை(முதல் நாலு கற்பனைகள்)யை குறித்த விளக்கம் அவர் தன் சொந்த பிள்ளைகளா தெரிந்து கொண்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு புரிஞ்சிச்சா????

    என்ன பதில் சொல்ல போறோம் பிரெண்ட்ஸ்??? ஆமாவா?? இல்லையா??

    சரி ஆமாம் என்பது உங்க பதில்ன்னா ஏன்  ஆமாம்?? சப்போஸ் இல்லைனா ஏன் இல்லை?? நல்ல வம்பில மாட்டி கொண்டது போல தோணுதா பிரெண்ட்ஸ்….

    இந்த கேள்வி நம்ம இயேசப்பா கேட்டதுக்கு முதல் காரணம் தன்னுடைய பிள்ளைகள் பைபிள் வாசிக்கிற பழக்கம் எந்த அளவுக்கு இருக்கு என்பதை நமக்கு உணர்த்த அவர் ஆசைப்படுகிறார்…..

    ஏன் என் இயேசப்பாக்கு இதில் சந்தேகம் வந்துச்சு நாம நம்ம மனசில நினைக்கலாம்…. சப்போஸ் நம்மகிட்ட யாராவது பைபிள் சம்பந்தமா கேள்வி கேட்டா என்ன சொல்லுவோம்….. சரி நம்ம பொண்ணே நம்மகிட்ட வந்து அம்மா/அப்பா எனக்கு இந்த வசனம் புரிந்து கொள்ள முடியலை…எனக்கு சொல்லி கொடுங்கன்னு கேட்டா என்ன சொல்லுவோம்?

    உனக்கும் உன் அண்ணனுக்கும் வேற வேலையே இல்லை….இதை குறித்து சந்தேகம் இருந்தா உங்க சண்டே ஸ்கூல் டீச்சர்கிட்ட கேட்க வேண்டியதுதான…..ஏன் என் உயிரை போட்டு எடுக்குற…... இப்படி சொன்ன தருணங்கள் உண்டா? உங்க பொண்ணு தன் முகம் முழுவதும் முழுமையான வாட்டத்துடன் அடுத்து அந்த பைபிளை வாசிக்கிறதை நீங்க பார்த்தது உண்டா….. உங்க பொண்ணு அடுத்து பைபிள்ளை வாசிப்பான்னு சொல்லுறதை விட ஒரு வித கோபத்தோடு, குழப்பத்தோடு முறைச்சி பார்த்துட்டு இருப்பான்னு சொன்னா சரி வருமா???

    நாங்க வெறும் சாதாரண மக்களுக்கு மட்டும் இந்த கேள்வியை கேட்க ஆசைப்படலை பிரெண்ட்ஸ்….போதகர்கள், ஊழியர்கள், இன்னும் நம்ம இயேசப்பா பணியில் இருக்கிற எல்லார் வீட்டில நடக்கிற காரியத்தைதான் கேட்கிறோம்???

    அது நம்ம தேவனை தெரிந்து கொண்ட ஜனங்களா இருந்தாலும்(சாரி பிரெண்ட்ஸ், நம்ம இயேசப்பா விசுவாசிகள்ன்னு கூட நம்மளை கூப்பிட ஆசைபடலை), அவருக்காக இராவும், பகலும் பார்க்காம ஊழியம் செய்யுறேன்னு சொல்லுற எந்த பிள்ளையா இருந்தாலும் சேம் கேள்வியைதான் கேட்குறாங்க???

    தன் பிள்ளைகள் கிட்ட தன் தேவனுடைய வார்த்தைகளை கூட கலந்து கொள்ள நேரம் எடுத்துக்க முடியாத அளவுக்கு பாவம் என் பிள்ளைகள்….உலகத்தை நோக்கி ஓடுறாங்களே என்பது நம்ம இயேசப்பாவுடைய வருத்தம்(இது நம்மை குறித்த வருத்தம்)….

    தேவ ஊழியர்கள்ன்னு எடுத்து கொண்டாலும் அதே கேள்வியை தான் நம்ம இயேசப்பா கேட்க ஆசைபடுறாங்க…. ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த ஒரே ஓட்டமா ஓடினா கூட அப்ப உன் பிள்ளைகள் நிலை என்னன்னுதான் கேட்க ஆசைபடுறார்….. காலை நைட் பார்க்காம உங்களுக்காகத்தான நான் ஆத்துமாக்களை ஆதாயம் படுத்துறேன் சொன்னா…..ஏதாவது நம்ம இயேசப்பா excuse கொடுப்பாரா???

    சாரி பிரெண்ட்ஸ்….. அந்த excuse எதுவும் இங்க செல்லுப்படி ஆகாதாம். நம்ம இயேசப்பா பைபிள்ல அவர்கள் தேவ ஊழியர்களா இருந்தாலும் அவர்கள் பிள்ளைகள் ரொம்பவே சீரழிஞ்சி போன நபர்களை குறித்து நமக்கு சொல்ல நினைக்கிறாங்க.

    பைபிள்ல நீ வாசித்தது இல்லையா… ஏலி யாரு??? தேவ உடன்படிக்கை பெட்டி மேல தன் உயிரையே வைச்சிருந்தவர்….ஆனா அந்த முக்கியத்தை தன் பிள்ளைகளுக்கு அவர் சொல்லி கொண்ட மறந்ததால என்ன நடந்துச்சு….. அவருடைய பசங்க ஓப்னி, பினெகாஸ் தேவனுடைய பலியை குறித்த விசயத்தில ரொம்பவே வேதனையை நம்ம தேவனுக்கு கொடுத்தாங்க…. அதுவும் தேவ சமுகத்திற்கு வந்த பெண்கள்கிட்ட விபசாரம் என்கிற காரியத்தை துணிந்தே செய்தாங்க….. யார் இதுக்கு காரணம் பிரெண்ட்ஸ்?? ஓப்னி, பினெகாஸா??? இல்லையே ஆசாரிய பதிவியில இருந்த அவங்க ரெண்டு பேருக்கும் அப்பா என்கிற ஸ்தானத்தில இருந்த ஏலிதான காரணம்….

    தன் பிள்ளைகளுக்கு தேவனுடைய முக்கியத்தையும், அது எந்த அளவுக்கு ஜீவன் என்பதையும் அவர்  சின்ன வயசில இருந்து சொல்லி கொடுக்க அவர் மறந்துட்டார்…. அது கடைசியில் என்ன பிரச்சனையை கொண்டு வந்துச்சு ….முழுக்க முழுக்க அவர்களுடைய தலைமுறைகள் கூட தேவ சந்நிதானத்தில் சேவை செய்ய முடியாத துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துச்சு….

    சரி இப்ப நம்ம வாழ்க்கையை பார்போம் பிரெண்ட்ஸ்…..ஏற்கனவே நம்ம தேவன் பைபிள் மூலமா சொல்லி கொடுத்த ஏலி என்பவர் நமக்கு கலக்கத்தை உண்டு பண்ணிட்டார்…..இனிமே நம்ம தேவன் கேள்வி கேட்கறதுக்கு முன்னாடியே நாம கையை தூக்கிடோம்ன்னு நினைக்கிறோம்…..சாரி இயேசப்பா….இது வரைக்கும் நான் ஊழியம், ஊழியம்னு அதை பத்தியே யோசித்து என் மனைவியை/ கணவனை பத்தி மறந்துட்டேன்…..இனிமே இந்த தவறை பண்ண மாட்டேன்….. என் தேவன் கொடுத்த ஊழியம் உன்னதம்….அதே அளவுக்கு ரொம்பவே முக்கியமான காரியம்….நான் என் குடும்பத்தில் உள்ள என் மனைவிக்கும், என் பிள்ளைகளுக்கும் உங்க முக்கியத்தையும், நீங்க என் கையில் கொடுத்திருக்கிற பைபிள் முக்கியத்தையும் கண்டிப்பா தினமும் சொல்லி கொடுப்பேன்….. சப்போஸ் அதில் ஏதாவது ஒரு நாள் செய்ய தவறி விட்டாலும் அந்த நாள் இரவு சாப்பாடையும், தூக்கத்தையும் நான் கண்டிப்பா எடுத்துக்க மாட்டேன்…..இது இன்னிக்கி நான் உங்க முன்னாடி எடுத்து கொள்ளுற தீர்மானம்…..

    நம்ம இயேசப்பா பிள்ளைகளா இருந்து ஊழியம் செய்யுறவங்க தீர்மானம் எடுத்துட்டாங்க….. நாம என்ன செய்ய போறோம் பிரெண்ட்ஸ்??? சண்டே ஸ்கூல் டீச்சர்கிட்ட தான் போய் இனிமே நம்ம பிள்ளைகள் பைபிள் வசனங்களை குறித்த விளக்கத்தை தெரிந்து கொள்ளணுமா??? இல்லை வேற எதுவும் முடிவு எடுத்துட்டோமா??? சப்போஸ் என் பிள்ளை சண்டே ஸ்கூல்ல போய் உங்க வசனத்தை கத்துட்டு வந்தாலும், நானும் தினுமும் நீங்க எனக்கு கொடுக்கிற வார்த்தைகளை என் பிள்ளைக்கு புரியுற வகையில சொல்லி கொடுப்பேன்……. குட் பிரெண்ட்ஸ்…..உங்க தீர்மானத்துக்கு ரொம்பவே நன்றிகள்…..ஆனா நம்ம பிள்ளைகளுக்கு நாம சொல்லி கொடுக்கணும்ன்னா நமக்கு நம்ம தேவ வார்த்தைகள் நல்லாவே தெரிந்திருக்கணுமே….

    வெறும் full ஸ்டாப் கூட விடாம பைபிள்ல இருக்கிற வசனங்களை மட்டும் வாசித்திட்டு சரி குட்டிமா….. இன்னிக்கி பைபிள்ல வேத பாடம் முடிந்ததுன்னு சொன்னா நம்ம நிலை என்ன ஆகும்….நீங்க உங்க குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிற வசனங்களை உங்க பிள்ளை வெறும் மனப்பாடமா சொன்னா மட்டும் போதுமா….அதை ஏன் அவர் தன் பிள்ளைகளுக்கு(உங்களுக்கும், உங்க குழந்தைக்கும் சேர்த்து) சொன்னார்….எதுக்காக??? எந்த சமயத்தில இந்த வசனம் நமக்கு உபயோகம் ஆகும்னு நம்ம பிள்ளைகளுக்கு சொல்லுறதுக்கு முன்னாடி நமக்கு தெரிந்திருக்கணுமே….. இல்லாட்டி அது ஏலி செய்த தப்பை காட்டிலும் ஏழு மடங்கு நாம நம்ம பிள்ளைகள் தப்பு செய்யுறதுக்கு காரணமா ஆயிருவோமே???

    அப்ப என்னதான் செய்யணும்?? இந்த பாவத்தில இருந்து, என் குழந்தைகளை குறித்து, என் மனைவி/ கணவனை குறித்து என் தேவன் நியாய தீர்ப்பில கணக்கு கேட்கும் போது என்னால என்ன செய்ய முடியும்? உதட்டை பிதுக்கிட்டு சும்மா நிற்க முடியாதே….. நம்ம தேவன் நம்மகிட்ட ஒழுங்கா நீ பைபிள் வாசிக்கிறியா குட்டிமா, தினமும் prayer பண்ணிறியா?ன்னு கேட்டா மட்டும் கொஞ்சம் கூட நாம என்ன பண்ணிட்டு இருந்கோம்ன்னு ஆராய்ந்து பார்க்கமா டப்….டப்…ன்னு பதில் சொல்லுகிறோம்……ஆனா இந்த நரகம், பரலோகம்னு பேர் வந்ததும், அதுவும் நம்ம இயேசப்பா தன் பிள்ளைகள் மூலமா நம்மகிட்ட பேசிட்டா ஐயோ….என்ன செய்ய போறேன்…ன்னு தானா பயம் வந்து நம்மளை ஒட்டிக்குது……

    சரி பிரெண்ட்ஸ்….நம்ம இயேசப்பா நாம பைபிள் வாசிக்கிற விஷயத்தில, அதை நம்ம குடும்பத்தில இருக்கிறவங்களுக்கு சொல்லி கொடுக்கிறததில ஏன் முக்கியத்துவம் காண்பிக்கணும்னு ஏற்கனவே சொல்லி கொடுத்துட்டாங்க,சரிதான…..ஆனா அதை ரொம்பவே கவனமா செய்யணும் என்பதை குறித்து அவர் அடுத்த முறை சொல்லி கொடுக்கும் போது தெரிந்து கொள்ளலாமா?

    Related Post

    Categories: மனம் திரும்புதல்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + one = 2

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>