-
ஐசுவரிய பெருக்கு
உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரான பில்லி கிரகாம் தனது சுய வரலாற்று புத்தகத்தில் ஒரு நிகழ்ச்சியை பின்வருமாறு எழுதியிருந்தார்: “உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். எழுபத்தைந்து வயதான அவர் நாங்கள் இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய நிலையிலேயே இருந்தார். ‘உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன், உலகில் நான் எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும் என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே உணர்கிறேன்’ என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு கடந்து வந்தோம்.
.
அன்று மதியம் அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின் மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும் நிறைந்திருந்தார். அவர், ‘என்னுடைய பெயரில் இரண்டு பவுண் நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன்’ என்றார். அவர் எங்களை விட்டுசென்ற பிறகு, ‘இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர் யார்’ என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும் அதற்குரிய விடை தெரியும்” என்று எழுதியிருந்தார்.
.
பிரியமானவர்களே, நாம் பல ஆசீர்வாதங்களை பெற்றிருப்பவாகளாக வாழலாம். ஆனால் நமது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாக இருப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும். வேதத்திலே சாலமோன் ராஜாவின் வாழ்வில் ஏராளமான ஐசுவரியங்களும், ஆசீர்வாதங்களும் நன்மைகளும் காணபட்டன. அவருடைய வாழ்விலிருந்த செழிப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஆனால் அவர் வாழ்வை குறித்து சொன்னது, ‘எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது’ என்பதே. அவர் தங்க தட்டில் சாப்பிடும் அளவிற்கு ஐசுவரியத்தை பெற்றிருந்த போதிலும் விரக்தியுள்ள வாழ்க்கையையே வாழ்ந்து முடித்தார்.
.
வேத வசனம்:
—————–கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவருக்கும், தேவன் காட்டும் வழி, உலகப்பிரகாரமான ஆஸ்தியும், மேன்மையும் புகழும், அந்தஸ்தும் அல்ல, ‘இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்’ (மத்தேயு 6:32-33) என்று இயேசுகிறிஸ்து கூறினார்.
.
‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ (நீதிமொழிகள் 10:22)
.
பின்பு அவர் (இயேசு) அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். – (லூக்கா 12:15)
.
Original Source From: anudhinamanna.net
தெரிந்து கொள்ளப்பட்டு மாற்றப்பட்டவர்கள் மோசேயின் நீண்ட பயணம்
ஐசுவரிய பெருக்கு
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives