• இயேசு கிறிஸ்து யார்?(33)

    ஏவாளின் மனமாற்றம்

    jesus33

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம தேவன் ஆதாம், ஏவாள் விசயத்தில உண்மையில் கோபப்பட்ட சந்தர்ப்பத்தை நம்ம இயேசப்பா நமக்கு கற்றுக் கொடுத்தது மூலமா நல்லாவே தெரிந்து கொண்டோம். ஆனா என்றும் நாம மறக்க முடியாத காரியமாய் நம்ம ஞாபகத்தில நிற்கிறது,

                    ஆதாம், ஏவாளை மட்டுமில்ல நம்மளை கூட நம்ம தப்புகளின் ஆக்கிரமிப்பு அதாவது பாவங்களின் வலிமை எந்த வகையில மாற்றுது

                      நம்மளுடைய தப்புகள் நம்ம வலிமை வாய்ந்த தேவனையே எந்த அளவுக்கு வேதனைப்பட வைக்கிறது

                      நம்ம தப்புகளில்(பாவங்களில்)  நாம மூழ்கி இருக்கும் போது, அவருடைய எதிர்பார்ப்புகள் அந்த நேரத்தில கூட எந்த வகையில இருக்கும்

    இவை எல்லாம் ரொம்பவே நீங்காத எண்ணங்களா நமக்குள் மாறிப் போச்சுன்னு சொன்னா, ஒத்துக் கொள்ளுவீங்களா குட்டிகளா?

    சரி குட்டிகளா, நம்ம ரொம்பவே எதிர்பார்த்த காரியம், ஆதாம், ஏவாளுக்கு நம்ம தேவன் ஏன் அப்படிப்பட்ட சாபத்தை கொடுக்கணும்னு? ஏற்கனவே இது நம்ம மனதில ஓடின காரியம். இப்ப கண்டிப்பா தெரிந்தே ஆகணும்னு ஒரு பிடிவாதமே வந்தது போல தோணுதா?

    என்னுடைய தேவன் ரொம்பவே அன்பான தேவன், மற்ற விசயங்கள் முன்னாடி நாங்க பயந்து நடுங்குற மாதிரி என்னுடைய தேவனையும் பார்த்து நான் நடுக்கமோ இல்லை கலக்கமோ அடைய வேண்டியதில்லை. ஏன்னா என்னுடைய தேவன் நான் எப்பவும் அவர்கிட்ட பேச மாட்டேனான்னு துடிக்கிற, என் கூட இடைப்பட துடிக்கிற தேவன். அவர் என்னையும், ரொம்பவே பாவங்களால் சோர்ந்து போயிருக்கிற என்னையும் பாதுகாக்கிற தேவன். இப்படிப்பட்ட என்னுடைய தேவன் தன்னை பார்த்து பயப்பட சொல்லி இருப்பாங்க தன்னுடைய வார்த்தைகளில். ஆனா அது கண்டிப்பா என்னுடைய மகிமை, மகத்துவம், வல்லமை இதை பார்த்து பயப்பட சொன்னதா இல்லை. அவர் அவரைப் பார்த்து பயப்பட சொன்ன காரியம், பொல்லாப்பு செய்ய பயப்படு குட்டிமா, ஏன்னா நான் உன்னை நேசிக்கிற தேவன் , உனக்குள் வாசம் பண்ணுகிற தேவன். சப்போஸ் நீ தப்புகள் செய்யும் போது, அது நான் உன்னில இருக்க விடாம தள்ள கூடிய ஆற்றல் உடையது. அதுனால தப்பு செய்ய பயப்படு, என்னை பார்த்து, உன்னை இருக்கிற பிரகாரமே நேசிக்கிற என்னை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லைன்னுதான் சொல்லி இருப்பாங்க.

    இப்ப புரியுதா குட்டிகளா, கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிற வசனத்தின் அர்த்தம். நீ உன் தேவனுக்கு பிடித்தம் இல்லாத காரியங்களை செய்ய பயப்படு, அன்னைக்கி யோசேப்பு என்கிற இளைஞன் தனக்கு விரோதமா வந்த பாவ காரியத்தை பார்த்து, பயந்து ஓடினான். ஏன்னா அவனுக்கு தெரியும், நம்ம தேவனுக்கு இந்த பாவம் பிடிக்காது. தான் துணிந்து அந்த பாவத்தை செய்திட்டா என்றும் தன் தேவனுடைய அருகாமையை இழந்து போக வேண்டிய கட்டாயம் நேரிடும். அதற்கு அவன் இடம் கொடுக்க விரும்பலை. அந்த பாவத்தின் வலிமையை காட்டிலும், தன்னுடைய தேவனின் அன்பை ரொம்பவே அவன் நேசித்ததால துணிந்து எதிர்த்து நின்னான்.

    யோசேப்பு வாழ்க்கை மூலமா புரிந்து கொண்டீங்களா? கர்த்தருக்கு பயப்படுதல், அதாவது தேவனுக்கு பிடித்தம் இல்லாத காரியங்களை செய்ய பயப்படுதல்னா என்னன்னு. அது எதற்கு ஆரம்பம் கேட்டா அழகாக சொல்லுவீங்க, ஞானத்தின் ஆரம்பம். ஞானம் சொன்னவுடன் புத்திசாலித்தனம் என்பதுதான் அர்த்தம்ன்னு நம்ம மனதுக்கு தோணும் குட்டிகளா. ஆனா ஞானம்ன்னு சொல்லும் போது, நம்ம இயேசப்பா தன்னை பற்றி தான் குறிப்பிட்டிருப்பாங்க(நீதிமொழிகள் 8ம் அதிகாரம்). அதாவது புத்திசாலியா நாம மாற போறதின் ஆரம்பம் இல்லை குட்டிகளா, அது நாம நம்மை நம்ம தேவனின் பிள்ளைகளா, இயேசப்பா பிள்ளைகளா வாழுற ஒரு வாழ்கையின் ஆரம்பம். அது மட்டுமில்ல பரலோக சுவையை இந்த பூவுலகத்திலேயே நாம சுவைக்க போறதுக்கான ஆரம்பம்.

    சாரி குட்டிகளா, நாம நம்ம தேவனுக்கு பிடித்தம் இல்லாத காரியங்களுக்குத்தான் பயப்பட்டு ஒதுங்கணுமே தவிர, நம்ம தேவனை விட்டு ஒதுங்கி வாழ அவர் நமக்கு கற்றுக் கொடுக்கலை. நம்ம தேவன் கர்த்தருக்கு பயப்படும் பயத்தை பற்றி நமக்கு இப்ப சொல்லி கொடுத்தது கூட, இன்னும் நாம அந்த வசனத்தை தெளிவா தெரிந்து கொள்ளாத காரணத்தினால்தான்னு நாங்க சொல்லுறதுக்கு முன்னாடியே நீங்க தெரிந்து வைச்சிருப்பீங்க. இப்ப, நாம ஆதாம், ஏவாளை நம்ம தேவன் கோபப்பட்டு சாபம் கொடுத்த விசயத்தை பற்றி நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு அவர்கிட்டயே கேட்டு தெரிந்து கொள்ளலாமா?

    சரி, நம்ம மேல அன்பு மட்டுமே காட்ட தெரிந்த நம்ம தேவனுக்கு கூட கோபத்தை வர வைச்சது, நம்ம ஆதாமும், ஏவாளும் செய்த காரியம். அடுத்து நாமளும்(இப்பவும் நம்ம வாழ்கையில அறிக்கை செய்யப்படாத பாவங்கள் இருக்குதே குட்டிகளா).

    கோபம் வந்ததும் நம்ம தேவன் முதலில் சபித்தது யாரை குட்டிகளா? திரும்பவும் வரிந்து கட்டி கொண்டு கேள்வி கேட்க ரெடியா இருக்கீங்கன்னு நினைக்கிறோம் குட்டிகளா. உங்க கேள்விகளுக்கு நம்ம இயேசப்பா என்ன பதில் சொல்ல போறாங்கன்னு பார்ப்போமே?

    தப்பு செய்தது ஆதாம், ஏவாள். அப்படி இருக்கும் போது, நம்ம தேவன் முதலில் சாபம் ஏன் அந்த பாம்புக்கு கொடுக்கணும்? இதெல்லாம் ஓர வஞ்சனைன்னு நீங்க நினைத்தா சாரி குட்டிகளா, உங்களுக்காக இப்பவும் சாத்தானோடு எதிர்த்து போராடிட்டு இருக்கிற நம்ம தேவனை நாம குற்றபடுத்துறோம்னு அர்த்தம். உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை குட்டிகளா. அந்த ஏதேன் தோட்டத்தில பாம்பாக வந்து வேதனை தந்தது சாத்தானாகிய வலு சர்ப்பம். நம்ம தேவனுக்கு விரோதமாய் வானத்தில சண்டை வந்தப்ப ஜெயிக்க முடியாதவன், அவர் ரொம்பவே நேசித்த ஆதாம், ஏவாளை (நம்மளை), அவன் விழுந்த பாவ வலையில் விழ வைச்சிட்டானேன்னு கோபம் வராட்டினா தான் பிரச்சனை குட்டிகளா. ஏன்னா நரகத்தில அவன் பேர் மட்டுமில்ல இந்த காரியம் மூலமா முழு மனித இனத்தையே அவன் தள்ள நினைச்ச சதி வேலையை நம்ம தேவன் கடிந்து கொள்ள கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    ஒரு ஊர்ல ஏதோ ஒரு இடத்தில நாலு, ஐந்து பேர் செய்கிற திமிர்வாத நிகழ்வுகளால் அந்த ஊரே அழிக்கபட்டா, அப்ப மட்டும் நம்ம தேவனை குறை சொல்லுகிற நம்ம மனது, இந்த சாத்தானின் சதி செயலால் ஒரு முழுமையான வர்க்கமே வேதனை அடைய போறதுன்னு நம்ம தேவன் அறிந்து கொண்டவுடன் எந்த அளவுக்கு துடித்து அவனுக்கு அந்த கோபத்தின் உச்சியில் சாபத்தை கொடுத்திருப்பாங்கங்கிறதை மட்டும் ஏன் புரிஞ்சுக்க முடியலை?

    இப்ப உங்களுக்கு புரிந்து கொள்ள முடியுதா குட்டிகளா? நம்ம தேவன் நம்ம மேல உள்ள பாசத்தினாலும், தன்னை விட்டு தன்னுடைய பிள்ளைகளை இந்த பொல்லாத சாத்தான் பிரிச்சிட்டான் என்கிற கோபத்தினாலும் அவனுக்கு கொடுத்த நியாயமான சாபத்தை இப்ப நீங்களும் ஏற்றுக் கொள்ளுவீங்கன்னு நம்புறோம். சப்போஸ் சில பேரு இன்னும் ஒரு படி மேல போய், எங்களை இப்பவும் அலைக்கழிக்கிற சாத்தானுக்கு இன்னும் வெயிட்டா தண்டனை அப்பவே கொடுத்திருக்கணும் நம்ம தேவன்னு யோசிக்கிறதும் புரியுது. அது மட்டுமில்ல குட்டிகளா, நம்ம தேவன் பாம்புக்கு முதலில் தண்டனை கொடுத்ததுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு.

    சரி குட்டிகளா, நம்ம தேவன் அந்த பழைய பாம்பாகிய வலு சர்ப்பத்திற்கு அப்படி என்ன தான் தண்டனை கொடுத்தாங்கன்னு பார்ப்போமா?

    நம்ம தேவன் படைத்த படைப்புகள் தான் எல்லா உயிரினங்களும். எல்லா படைப்புகளும் நம்ம தேவன் நம்ம இயேசப்பா மூலமா விரும்பி படைத்தவைகள் தான். ஆனா இந்த சர்ப்பத்தை மட்டும் அதற்குள்ள இருந்த தந்திரத்தை மட்டும், இந்த சாத்தான் ரொம்பவே சாதகமா பயன்படுத்திக் கொண்டது. ஏற்கனவே ஏதேன் தோட்டத்தில இருந்த அவனுக்கு தான் தெரியும் எந்த மிருகம் எப்படிப்பட்டதுன்னு. அதுனால சாயம் வாய்த்தப்ப அழகாக தன்னுடைய காயை நகர்த்தினான் இந்த சாத்தான். அந்த சர்ப்பத்திற்குள் அவன் தன்னுடைய பெருமையின் ஆவியை செலுத்தினவன், ஏவாளை வஞ்சிக்க நேரங்களை எதிர்பார்த்து காத்திருந்தான் என்பது தான் உண்மை.

    அதுனால,தான் நம்ம தேவன் அவனுக்கு இடம் கொடுத்த சர்பத்தை தான் முதலில் திட்டினாங்க. இப்ப புரியுதா குட்டிகளா. ஏவாள் சாத்தான் மூலமா ஏமாற்றப் படுகிரதுக்கு முன்னாடியே, சர்ப்பத்தை அவன் ஏமாற்றினதுதான் முதல் நிகழ்ச்சி. அதுனால நம்ம தேவன் சரியா வரிசையா தான் தண்டனை கொடுத்திருக்காங்க என்பது நல்லாவே புரியும்.

    சாத்தனால் ஏமாந்த சர்ப்பத்திற்கு அப்படி என்ன விசேஷமான தண்டனைன்னு இப்ப பார்க்கலாமா?

    சகல நாட்டு மிருகங்களிலும், நாட்டு மிருகங்களிலும் சபிக்க பட்டிருப்பாய் என்பது தான் முதலில் நம்ம தேவன் சொன்னது. சாரி குட்டிகளா, நம்மளுக்கு மிருகங்கள் பாஷை தெரியாது. அப்படி தெரிந்திருந்தா எல்லா wild animalsம், domestic animalsம் எந்த வகையில சர்பத்தை அற்பமான ஜந்துவாய் பார்க்கிறதுன்னு நமக்கும் தெரிந்திருக்கும். ஆனா நம்ம தேவன் வார்த்தை மூலமா தெரிந்து கொண்டாதால நிச்சயமாய் எந்த மிருகங்களும், அதை ஏற்றுக் கொள்ளலை என்கிற உண்மை மட்டும் புரியுது குட்டிகளா.

    அது மட்டுமில்ல, அது தன்னுடைய வயிற்றினால் நகர்கிறதும், தன் வாழ்நாள் எல்லாம் மண்ணை திண்ணுகிறதும் நாம கண்ணார கண்டது, கேட்டது, வாசித்து தெரிந்து கொண்ட விசயங்கள். ஏதேன் தோட்டத்தில இருக்கும் போது, அது எப்படி இருந்ததுன்னு தெரியா விட்டாலும் கண்டிப்பா ரொம்பவே நல்ல நிலையில இருந்திருக்கும்னு மட்டும் புரிஞ்சுக்க முடியுது. மேலும், தலைமுறை, தலைமுறையா நமக்கும், அந்த சர்ப்பம் இனத்திற்கும் சண்டை நடக்கிறதும் நமக்கு தெரிந்த விஷயம்தான். சாத்தான் பேச்சுக்கு கீழ்படிந்த சர்ப்பத்திற்கு நம்ம தேவன் சாபம் கொடுத்து முடிச்சாச்சு. இனி யாருக்கு?

    ஏவாள்ன்னு நாம நினைச்சா சாரி குட்டிகளா, அதற்கு முன்னாடி, நம்ம தேவனை தோற்கடிச்சிட்டேன்னு ரொம்பவே பெருமையில இருந்த சாத்தானுக்கு தான் நம்ம தேவன் அடுத்த தீர்க்கக்தரிசனத்தை சொன்னாங்க. அடுத்ததுதான் ஏவாள்.

    ஏவாளுக்குரிய சாபத்தை பற்றி தெரிந்து கொள்ளுவோமா?

    வேதனையின் உச்சத்தில குழந்தையை பெற்றெடுப்பாய் என்பது தான் முதல் சாபம். ஒவ்வொரு குழந்தைகளும் இந்த உலகத்தில பிறக்கும் போது, அது நம் தேவனின் நாமத்தை மகிமைபடுத்துமாம். ஏன்னா அந்த குழந்தைக்கு தெரியும் குட்டிகளா, அவங்க நம்ம தேவன்கிட்ட இருந்து வருகிறதால் அவங்களுக்கு புரியும், என் தேவன் எவ்வளவு நல்லவர்ன்னு. ஆனா அந்த குழந்தையை நம்ம ஏவாள் பெற்றேடுக்கிற நேரம்(ஏவாள் மட்டுமில்ல குட்டிகளா, அவங்க சந்ததியான எல்லா பெண்களுக்கும்), நம்ம தேவன் ஏன் ஒரு குழந்தையை இந்த உலகத்தில கொடுக்கிற சமயத்தில் அவ்வளவு பெரிய வேதனையை கொடுக்கணும்? உங்க மனதில கேள்விகள் எழும்பலாம்.

    சாத்தான் பேச்சுக்கு செவி கொடுத்து, அவன் வார்த்தைக்கு இணங்கி ஏவாள் அந்த பழத்தை சாப்பிட்ட நேரம் நம்ம தேவனுக்கு எத்தனை மடங்கு வேதனையை கொடுத்திருக்கும். ஆனா அந்த வேதனையை அப்படியே ஏவாள் அனுபவிக்காட்டியும், அட்லீஸ்ட் ஒரு மடங்காவது தெரிந்து கொள்ளணுமே? அதற்காகத்தான் குட்டிகளா. ஏவாள் பிள்ளை பெறும் நேரம், தன் தேவனை தேட வேண்டிய நேரம். அதாவது, என் தேவன் எந்த வலியை தனக்குள்ள உணர்ந்தார் என்பதை அவங்க கொஞ்சமாவது உணர்கின்ற நேரம் குட்டிஸ்?

    கண்டிப்பா இதை தெரிந்து கொள்ளுற நம்ம அம்மாமார்களுக்கு இது அதிர்ச்சியா இருக்கும் மட்டும் நம்புறோம். அடுத்து என்ன குட்டிகளா, ஒரு மனைவியின் ஆசை தன் கணவனை பற்றியிருப்பதும், அவன் அவளை ஆண்டு கொள்வதும் நம் தேவன் நியமித்த நியதி. ஆனா பெண்மை பற்றி பேசுறவங்களுக்காக இதை சொல்லி இருப்பாங்களா குட்டிகளா? நம்ம தேவன் முதலில் ஏவாளை படைத்த சமயம் இரண்டு பேரும் ஓரே மாம்சமாய் இருப்பாங்க மட்டும்தான் சொன்னாங்க. ஆனா இந்த நேரம் மட்டும் ஆதாம், ஏவாளை ஆண்டுக் கொள்ளுவான்னு சொன்னாங்க. அப்ப இதுவும் ஏவாளின் தப்புக்கான தண்டனைன்னு சொன்னா சரியா வரும்ன்னு நம்ம இயேசப்பா நினைக்கிறாங்க.

    நம்மில் யார் உயர்ந்தவங்களும் கிடையாது, தாழ்ந்தவங்களும் கிடையாது. ஆனா நம்ம தேவன் பெண் இனத்தை, ஆண் இனம் ஆண்டு கொள்ள உரிமை கொடுத்தார் குட்டிகளா. ஏன்னா நாம எல்லாரும் நம்ம தேவனுடைய பிள்ளைகள். அவர்தான் நம்ம ராஜா. நம்மளை ஆள, ஆண்டு கொள்ள அவர் ஒருத்தருக்கு மட்டுதான் உரிமை உண்டு? ஆனா இங்கே மட்டும் ஏன்?

    இது உண்மையில் வேதனை பட வேண்டிய விஷயம் குட்டிகளா. வழக்காட வேண்டிய விஷயம் கிடையாது. தேவனின் அறிவுரையை மறந்து, இந்த உலகத்தை தேடின ஏவாளுக்கு அவர் கொடுத்த பெரிய தண்டனையே இதுதான்னு சொன்னாதான் சரி வரும் குட்டிகளா.

    ஒரு சின்ன குழந்தையை கூப்பிட்டு, அவங்க அம்மா, “குட்டிமா, இனிமே உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்டே வராத, அந்த பாரு, பக்கத்து வீட்டு ஆண்டி, அவங்க வீட்டுல தான் நீ இப்ப இருக்கிற, அதுனால இனிமேலும் அங்கேயே இருந்துக்கோ”ன்னு சொன்னா அந்த குழந்தை(அம்மாவின் அருகாமையை உணர்ந்த குழந்தை) எந்த அளவுக்கு வேதனைப்படும் குட்டிகளா.   

    இப்ப புரியுதா குட்டிகளா, நம்ம ஏவாள் எந்த அளவுக்கு உண்மையான வேதனையை, தேவன் தன் சமூகத்தை தன்னை விட்டு எடுத்துக் விலக்கினப்ப உணர்ந்திருப்பாங்க. சாரி குட்டிஸ், அதை வார்த்தையில் சொல்ல தெரியலை.

    சரி குட்டிகளா, இந்த இரண்டு வேதனைகளையும் நம்ம ஏவாள் அட்லீஸ்ட் ஏதேன் தோட்டத்தை வெளியேறின பிறகாவது  உணர்ந்து கொண்டாங்களான்னு நம்ம மனது கண்டிப்பா கேள்வி எழுப்பும்?

    நம்ம ஏவாள் தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு பேர் வைத்ததா நம்ம வேதாகமத்தில சொல்லபட்டிருக்கு. கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்னு முதல் குழந்தைக்கு காயீன் பேர் வைச்சது நம்ம ஏவாள்தான். சரி குட்டிகளா, கண்டிப்பா முதல் குழந்தை மூலமாகவே நம்ம தேவனின் வேதனையை கொஞ்சம் ஏவாள் புரிந்து வைச்சிருப்பாங்க. அடுத்த குழந்தை ஆபேல் மூலமா இன்னும் கொஞ்சம் வேதனை. சொல்லப் போனா, காயீனை காட்டிலும், நம்ம தேவனின் விருப்பங்களை பற்றி ஆபேல் தெரிந்து வைச்சதுக்கு காரணம் சப்போஸ் அவர் தான் தன்னுடைய அம்மா/அப்பாவோட அதிக நேரம் செலவு பண்ணிருக்கலாம்.

    அதுனாலத்தான் தேவனுடைய விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிந்ததால்தான், அவர் தன் முழு அன்போட நம்ம தேவனுக்கு கொடுத்த காணிக்கையை அவரும் ஏற்றுக் கொண்டார் குட்டிகளா. கண்டிப்பா, ஆதாமும், ஏவாளும் தன்னுடைய வாழ்கையில நம்ம தேவனுக்கு விரோதமாய் எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டோம்னு ஒரு தடவை இல்லை குட்டிகளா, பல தடவை நம்ம ஆபேல் பிறந்த பிறகுதான் உணர்ந்திருப்பாங்க போல. அதுனால தான் காயீன் கிட்ட காணப் பட்ட புலம்பலோ, கோபமோ, இல்லை வெறுப்போ ஒரு துளி அளவு கூட ஆபேல்கிட்ட காணப்படலை. காயீன் பிறக்கிறதுக்கு முன்னாடியும், அடுத்தும் கூட சரி, அவங்க நம்ம தேவனின் அன்பை உணராம, அவர்தான்  எங்களை விலகிட்டார் என்கிற மனோ விசனத்தில தான் நடமாடியிருப்பாங்க.      

    ஆனா அவங்களும் புரிந்து கொள்ற சந்தர்ப்பம் வந்தது குட்டிகளா. ஆபேலை பெற்ற போது, நம்ம ஏவாளுக்கு அது புரிந்தது. அதுனாலத்தான்  நம்ம தேவன்தான் எங்களை விலகிட்டார்ன்னு சொன்ன, புலம்பின புலம்பல் மாறி போய், ஆபேல்கிட்ட பேசும் போது, கதறி, அழுது, குட்டிமா, நான்தான் என் தேவனை மனம் நோக வைச்சிட்டேன், அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? என்னையும் மன்னிச்சி இந்த உலகத்தில உனக்கு அம்மாவா நடமாட வைச்சதே அவர் கிருபைதான்ன்னு புலம்பியிருப்பாங்க. அதை புரிந்து கொண்டதால்தான் ஆபேல் சரியான காணிக்கை, தன்னுடைய அன்பை தன் தேவனுக்கு படைத்தார்.

    ஆனா அதை பற்றி முதலில் இருந்தே புரிஞ்சுக்க முடியாத காயீன், தப்பு தான் மேல இல்லை, மற்றவங்க மேலதான், தேவன் மேலதான், குற்றம் கண்டுபிடிச்சி, கண்டுபிடிச்சி ஆபேலை கொலையும் பண்ணினான் குட்டிகளா.

    நம்ம சண்டே ஸ்கூல் டீச்சர் நமக்கு காயீன், ஆபேல் கதை சொன்னப்பவே ரொம்பவே பிடித்த விசயமா மாறியிருச்சு. ஆனா காயீன் தீய குணமா இருக்கட்டும், ஆபேல் அன்பு குணமா இருக்கட்டும், அது முழுக்க முழுக்க அவருடைய அம்மா/அப்பா எண்ணங்களில் இருந்துதான் வந்ததுன்னு நினைச்சி கூட பார்த்திருக்க மாட்டீங்க, சரிதான குட்டிகளா. அதுவும் ஒரு குழந்தையுடைய நல்ல/தீய குணங்களை அவங்களை பெறுகிற, கர்ப்பத்தில அந்த நேரம் சுமக்கிற அம்மாமார்களின் எண்ணங்கள் மட்டுமே தீர்மானிக்கும்ன்னு நம்ம தேவன் சொன்னா நாம கண்டிப்பா ஒத்துக் கொள்ளுவோம்.

    ஆனா நம்ம ஏவாளுடைய எண்ணங்கள், கதறல் எல்லாம் நம்ம ஆபேல் இறந்து போனப்ப இன்னும் இரட்டிப்பு மடங்காய் மாறுச்சு குட்டிகளா. தான் முழுமையாய் நம்பியிருந்த ஆபேல் தன் கையை விட்டு போனப்ப, என் தேவன் என்னுடைய இழப்பை கூட இப்படித்தான் உணர்ந்திருப்பார்ன்னு தெரிந்து கொண்டாங்க. ஒரு பையனை இழந்து தவிக்கும் போது, என் மனது எப்படி கஷ்டப்படுதோ, அதே மாதிரிதான் என் தேவனும், நான் அவர் சமூகத்தை விட்டு விலகி வந்தப்ப, தன்னுடைய பொண்ணை இழந்து போன நிலைமையை உணர்ந்திருப்பாங்கன்னு நம்ம ஏவாளுக்கும் புரிந்தது. அதுனாலத்தான் தன்னுடைய மூன்றாவது பையனுக்கு ஆபேலுக்கு பதிலாக வேறொரு புத்திரனை கொடுத்தார்னு சொல்லி சேத் என்கிற பெயரை வைச்சாங்க குட்டிகளா. இது உங்களுக்கும் புரிய வைச்சிருக்கும், ஆபேலை இழந்தது நம்ம ஏவாள்கிட்ட ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கும்னு.

    நம்ம தேவன் அன்பான தேவன் குட்டிகளா. தன் பிள்ளைகள் தன்னை மறந்து எவ்வளவு தூரத்தான் ஓடினாலும், ஒரு நேரம் வரும் போது, அவர்களுடைய தப்புகளை அவர்களுக்கு உணர்த்தி, புரிய வைச்சி, தான் இன்னும் அவங்க மேல அன்பா இருக்கிறதை சொல்லி, தன் மார்பில் சாய்த்து கொள்ளும் ஒரு அழகான தகப்பன். நம்ம தேவனை விட்டு ஓடிட்டு இருந்த ஏவாளுக்கு ஆபேல் பிறப்பின் மூலமாகவும், இறப்பின் மூலமாகவும் நிறையவே கற்று கொடுத்து, மீண்டும் தன்னுடைய பிள்ளையா வாழ பண்ணினாங்க.

    நாம எப்படி குட்டிகளா, நமக்கு நம்ம தேவன் நம்ம தப்பை உணர்த்தும் போதே, கையை தூக்கி, சாரின்னு கதற ரெடியா இல்லை ஏவாள் மாதிரி இழப்புகளை சந்தித்தாதான் யோசிக்கணும்னு சொல்ல ரெடியா?

    Related Post

    Categories: Do you know Jesus

    One thought on “இயேசு கிறிஸ்து யார்?(33)

    Leave a Reply to Pearl Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *


    5 − four =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>