-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 36
ஊரில் இருந்து வந்த நாள் முதல் அவள் மனதில் என்றும் அந்த கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. எனக்கு அன்னிக்கி என்ன ஆச்சு….. ஆனால் அவளுக்கு யாரிடமும் வாய் திறந்து கேட்கத்தான் பயமாக இருந்தது. இதை பத்தி நான் பேச கூடாதுன்னு என்னுடைய இயேசப்பா நினைச்சி….சப்போஸ் அதை நான் கேட்கிறதால என் இயேசப்பா மனசை நான் ஏன் கஷ்டபடுத்தனும்….எப்போதும் போல இன்றும் தன்னை சமாதானப்படுத்தி கொண்டாள்.
ஸ்கூல் ஆரம்பித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளும் தனக்குள் அந்த கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு அவளே பதிலை சொல்லி கொள்வாள். மண்டையை போட்டு குழப்பி கொண்டது மட்டும்தான் மிச்சம்…..ஊருக்கு கிளம்பும் போகும் போதும் கூட…..தன் பிரெண்ட் வேதாவிடம் நைஸாக பேசி பார்த்தாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 35
உண்மையில் அவன் அம்மாவின் பார்வை மட்டும் ரொம்பவே பரிதாபமாக இருந்தது. ஏதோ நடக்க கூடாத விபரீதத்தை நடந்தது போல திகைத்தார்.
என்னடி….அம்மாவும், பையனும் ஒவ்வொரு வீடா நுழைந்து என் பெயரை கெடுக்குறீங்களா??? கையை, காலை வெட்டி போட்டா எப்படி ஒவ்வொரு வீடா நுழைய முடியும்னு நானும் பார்க்கிறேன்???? வேதா அப்பா வார்த்தைகளை அள்ளி வீச எல்லாருக்கும் வேதனையாகி விட்டது. கொஞ்சம் நேரத்திக்கு முன் இருந்த சந்தோசம் எல்லாம்……அப்படியே எங்கோ தொலைந்து போனதை போல உணர்ந்தாள் அவள். அதுவும் முதன்முறையாக அவள் இந்த மாதிரி உள்ள காரியங்களை பார்ப்பதால் உண்மையில் பயந்து போனாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 34
இவர்கள் சிரித்து கொண்டு இருக்கும் போதுதான் அவனின் அம்மா வீட்டினில் நுழைந்தார். அவர் கேட்டின் முன் நிற்கிற கூட்டத்தை அதிசயமாகத்தான் பார்த்தார். ஆனால் இது வரை சத்தம் எழுப்பி பேசி கொண்டிருந்த கூட்டம், இப்போது கப்சிப்பாகி விட்டது. எல்லாருடைய கண்களும் இப்போது, அவன் அம்மா மேல்.
பார்ப்பதற்கு வேதாவின் சாயல் தெரிந்தது. ஆனால் கண்களில் கண்ணீர் வந்து அதை துடைத்தது அழகாகவே தெரிந்தது. வேதாவும் தன் அம்மாவை பார்த்ததும், ஓடி போய் கட்டிப் பிடித்து கொண்டான். அவன் கண்களிலும், அவன் அம்மாவின் கண்களிலும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதுவரை இருந்த துக்கம் எல்லாம் இன்றோடு மாறி போச்சு என்பதை சொல்லுகிற சந்தோஷ கண்ணீராய் தான் அவளுக்கு தோணியது.
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives