ஸ்தோத்திரங்கள் 851-900
851
சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம். ஏசாயா 40:29
852
சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம். ஏசாயா 40:29
853
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம். ஏசாயா 44:3
854
வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம். ஏசாயா 44:3
855
எல்லார் மேலும் தயையுள்ளவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 145:9
856
எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 145:15
857
விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவரே ஸ்தோத்திரம். 2கொரிந்தியர் 9:10
858
பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 146:7
859
தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 111:5
860
தமக்குப் பயந்தவர்களுடைய மனவிருப்பத்தின் படி செய்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 145:19
861
தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 127:3
862
தம்மில் அன்பகூருகிறயாவரையும் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 145:20
863
கபடற்றவர்களை காக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம். சங்கீதம் 116:6
864
உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம். சங்கீதம் 145:18
865
தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 145:17
866
தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 145:17
867
வெண்கலக் கதவுகளை உடைப்பவரே, இரும்புத் தாழ்ப்பாள்களை முறிப்பவரே ஸ்தோத்திரம். ஏசாயா 45:4
868
அந்தகாரத்தில் உள்ள பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் உள்ள புதையல்களையும் கொடுப்பவரே ஸ்தோத்திரம். ஏசாயா 45:4
869
துரத்துண்ட இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 147:2
870
பறந்து காக்கிற பட்சி போல் எருசலேமின் மேல் (எங்கள் மேல்) ஆதரவாயிருப்பவரே ஸ்தோத்திரம். ஏசாயா 41:5
871
பர்வதங்கள் எருசலேமைக் சுற்றியிருக்குமாப் போல என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றி நீர் இருக்கிறதற்காக ஸ்தோத்திரம். சங்கீதம் 125:2
872
எருசலேமைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 147:2
873
கர்த்தாவே, நீர் வீட்டை கட்டுகிறவர் ஸ்தோத்திரம். சங்கீதம் 127:1
874
கர்த்தாவே, நீர் நகரத்தைக் காக்கிறவர் ஸ்தோத்திரம். சங்கீதம் 127:2
875
தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்பவது போல எங்கள் சிறையிருப்பைத் திருப்பகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 126:4
876
நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பவரே ஸ்தோத்திரம். மத்தேயு 12:20
877
துன்மார்க்கனி்ன் கயிறுகளை கர்த்தர் அறுத்தீரே ஸ்தோத்திரம். சங்கீதம் 129:4
878
துன்மார்க்கரின் வழியை கவிழ்த்துப் போடுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 146:9
879
துன்மார்க்கரை தரைமட்டும் தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 147:6
880
துன்மார்க்கரை சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 73:18
881
பூமியின் நியாயதிபதிகளை அவாந்தரம்மாக்குபவரே ஸ்தோத்திரம். ஏசாயா 40:23
882
பாவிகளுக்கு விலகினவரே ஸ்தோத்திரம். எபிரேயர் 7:26
883
தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவரே ஸ்தோத்திரம். 2சாமுவேல் 24:16
884
மன்னிக்க தயை பெருத்தவரே ஸ்தோத்திரம். ஏசாயா 55:7
885
பணிந்தவர்களின் ஆவியை நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம். ஏசாயா 57:15
886
ஒருவனை தாழ்த்தி ஒருவனை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 75:7
887
பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்பவரே ஸ்தோத்திரம். 1பேதுரு 5:5
888
தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிப்பவரே ஸ்தோத்திரம். 1பேதுரு 5:5
889
ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவரே ஸ்தோத்திரம். தானியல் 2:21
890
காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். தானியல் 2:21
891
ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம். தானியல் 2:21
892
அறிவாளிகளுக்கு அறிவைப் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம். தானியல் 2:21
893
மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 94:10
894
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பைத்தியமானவைகளை தெரிந்துகொண்டீரே ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 1:27
895
ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தில் பிடிக்கிறவரே ஸ்தோத்திரம். யோபு 5:13
896
மெய்யாகவே ஜனங்களை சிநேகிக்கிறவரே ஸ்தோத்திரம். உபாகமம் 33:3
897
ஜாதிகளை தண்டிக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 94:10
898
சமுத்திர ஜலம் தன்னுடைய கரையைவிட்டு மீறாத படிக்கு அதற்கு எல்லையை கட்டளையிட்டவரே ஸ்தோத்திரம். நீதிமொழிகள் 8:29
899
சமுத்திரத்தின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 65:7
900
ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்கிறவரே ஸ்தோத்திரம். எரேமியா 32:18