ஸ்தோத்திரங்கள் 801-850
801
உம் வசனத்தை நம்பச் செய்தீரே ஸ்தோத்திரம். சங்கீதம் 119:49
802
உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம். சங்கீதம் 119:50
803
உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் (நடத்துகிறீர், நடத்துவீர்) ஸ்தோத்திரம். சங்கீதம் 119:65
804
உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம். சங்கீதம் 119:105
805
உம்முடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளதாக்குகிறதற்காக ஸ்தோத்திரம். சங்கீதம் 119:130
806
மிகவும் புடமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம். சங்கீதம் 119:140
807
உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம். எரேமியா 15:16
808
உம்முடைய வார்த்தை உத்தமமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம். சங்கீதம் 33:4
809
உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம். சங்கீதம் 33:4
810
நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் (செய்கிறீர், செய்வீர்) ஸ்தோத்திரம். சங்கீதம் 65:5
811
நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 65:5
812
உம்முடைய கற்பனை மகா விஸ்தாரம் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 119:96
813
உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே, உம்முடைய தயவோ நீடிய வாழ்வு ஸ்தோத்திரம். சங்கீதம் 30:5
814
எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 103:9
815
என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 103:9
816
எகிப்தியரின் தலைச்சன்களை சங்கரித்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 136:10
817
கடலை உலர்ந்த தரையாக மாற்றினீர் ஸ்தோத்திரம். யாத்திராகமம் 14:21
818
சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலையை உடைத்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 74:13
819
தேவரீர் முதலைகளின் தலையை நருக்கிப் போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 74:14
820
ஊற்றையும் ஆற்றையும் பிளந்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 74:15
821
மகாநதிகளை வற்றிப் போகப் பண்ணினீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 74:15
822
ஆற்றை கால்நடையாய் கடக்கச் செய்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 68:6
823
பகலிலே மேகத்தினாலும் இரவிலே அக்கினி வெளிச்சத்தினாலும் ஜனத்தை வனாந்தரத்திலே நடத்தினீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 78:14
824
கன்மலையைப் பிளந்து தண்ணீரை குடிக்கக் கொடுத்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 78:15
825
மாராவின் தண்ணீரை மதுரமாக்கினீர் ஸ்தோத்திரம். யாத்திராகமம் 15:25
826
தூதர்களின் அப்பமாகிய மன்னாவைக் கொடுத்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 78:25
827
பார்வோனையும் அவன் சேனையையும் சிவந்த சமுத்திரத்திலே கவிழ்த்துப்போட்டீரே ஸ்தோத்திரம். சங்கீதம் 136:15
828
எரிகோவின் கோட்டையை வீழ்த்தினீர் ஸ்தோத்திரம். யோசுவா 6:20
829
பெரிய ராஜாக்களையும் பிரபலமான ராஜாக்களையும் சங்கரித்தீர் ஸ்தோத்திரம். சங்கீதம் 136:17.
830
கழுதையின் வாயைத் திறந்தீர் ஸ்தோத்திரம். எண்ணாகமம் 22:28.
831
சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் மேலும் தரித்து நிற்கச் செய்தவரே ஸ்தோத்திரம். யோசுவா 10:12.
832
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 107:33.
833
நீருற்றுகளை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 107:33.
834
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 107:34.
835
அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 107:35
836
கனமலையைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 114:8
837
கற்பாறையை நீரூற்றாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 114:8
838
வறண்ட நிலத்தை நீருற்றுகளாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 107:35
839
மலடியை சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்குபவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 113:9
840
நிர்மூலமானவைகளைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம். எசேக்கியல் 36:36
841
பாழானதை பயிர் நிலமாக்குகிறவரே ஸ்தோத்திரம். எசேக்கியல் 36:36
842
காணாமற்போனதை தேடுகிறவரே ஸ்தோத்திரம். எசேக்கியல் 34:16
843
துரத்துண்டதை திரும்பச் செய்கிறவரே ஸ்தோத்திரம். எசேக்கியல் 34:16
844
நசல் கொண்டதை திடப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம். எசேக்கியல் 36:16
845
எலும்ப முறிந்ததை காயங்கட்டுபவரே ஸ்தோத்திரம். எசேக்கியல் 34:16
846
காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே ஸ்தோத்திரம். ஏசாயா 32:2
847
பெரு வெள்ளத்துக்குப் புகலிடமே ஸ்தோத்திரம். ஏசாயா 32:2
848
வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக இருப்பவரே ஸ்தோத்திரம். ஏசாயா 32:2
849
விடாய்த்த பூமிக்கு பெருங் கன்மலையின் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம். ஏசாயா 32:2
850
குருடரின் கண்களைத் திறக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 146:8