ஸ்தோத்திரங்கள் 501-550

501

சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:27

502

மேட்டிமையான கண்களை தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:27

503

ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 103:6

504

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், என்ன முடியாத அதிசயங்களையும் செய்கிறவரே ஸ்தோத்திரம்.  யோபு 5:9

505

ஏழைகளைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 12:5

506

எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 69:33

507

எளியவனை சிறுமையினின்று எடுத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 107:41

508

எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 20:13

509

எளியவனின் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 107:41

510

எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 109:31

511

எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 113:7

512

எளியவனை பிரபக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 113:8

513

எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 140:12

514

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:5

515

நீர் எனக்கு துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 63:7

516

விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:5

517

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 10:14

518

திக்கற்ற பிள்ளைகளின் ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 102:16

519

திக்கற்ற பிள்ளைகளையும் விதவையையும் ஆதரிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 146:9

520

பரதேசிகளை காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 146:9

521

தேவன் தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:6

522

உம்முடைய தயயினாலே ஏழைகளை பராமரிக்கிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:10

523

ஊழியக்காரர் மேல் பரிதாபப்படுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 135:14

524

ஊழியக்காரன் சுகத்தை விரும்புகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 35:27

525

ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 44:26

526

ஊழியக்காரரை அக்கினி ஜீவாலையாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 104:4

527

தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுகொள்வதற்காக ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:22

528

உமது முகத்தை ஊழியக்காரர் மீது பிரகாசிக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 31:16

529

நல்ல மனுஷனுடைய நடைகளை உறுதிப்படுத்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:23

530

நல்ல மனுஷன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் உமது கையினால் அவனைத் தாங்குகிறீர் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:24

531

செம்மையான இருதய முள்ளவர்களை இரட்சிக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 7:10

532

இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 7:9

533

நீதிமானை சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 11:5

534

நீதிமானுடைய சந்ததியோடிருக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 14:5

535

நீதிமான்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:17

536

நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:19

537

நீதிமானுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 34:20

538

நீதிமான்கள் கைவிடப்பட்டதில்லையே, அவன் சந்ததி அப்பத்திற்கு இரந்து திரிகிறதில்லையே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:25

539

நீதிமான்களை தாங்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:17

540

நீதிமான்களுக்கு உதவி செய்து விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:40

541

நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 55:22

542

நீதிமானை பனையைப் போல செழிப்பாக்கி லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளரச் செய்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 92:12

543

நீதிமான்களை சிநேகிக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 146:8

544

நீதிமான்கள் முதிர் வயதிலும் கனி தந்து பஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் என்றீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 92:15

545

உத்தமனுக்கு துணையாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  2நாளாகமம் 19:11

546

உத்தமர்களின் நாட்களை அறிந்திருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 37:18

547

உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 84:11

548

சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:6

549

சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 149:4

550

சாந்த குணமுள்ளவர்களுக்கு வழியை போதிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 25:9