ஸ்தோத்திரங்கள் 351-400

351

உம் தெளிக்கப்படும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்.  எபிரேயர் 12:24

352

உம் நன்மையானவைகளைப் பேசும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்.  எபிரேயர் 12:24

353

தேவனுடைய ஈவே ஸ்தோத்திரம்.  யோவான் 4:10

354

எம்முடைய பஸ்காவே ஸ்தோத்திரம்.  1கொரிந்தியர் 5:7

355

கிருபாதார பலியே ஸ்தோத்திரம்.  1யோவான் 2:2

356

பிணையாளியானவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:22

357

மேசியாவே ஸ்தோத்திரம்.  யோவான் 1:41

358

முன்னோடியே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 6:20

359

நடத்துபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 48:14

360

ரபீ, ரபூனி, ஐயரே ஸ்தோத்திரம்.  லூக்கா 8:24; யோவான் 1:49; 20:16

361

ஈசாயின் அடிமரமே ஸ்தோத்திரம்.  ஏசாயா 11:1

362

தாவீதின் வேரானவரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:5

363

கிளை என்னப்பட்டவரே ஸ்தோத்திரம்.  சகரியா 6:12

364

ராஜாவாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்.  எரேமியா 30:9

365

தாசனாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்.  எசேக்கியல் 37:24

366

துதிக்குப் பாத்திரரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:3

367

என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமூகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்து போவார்கள் ஸ்தோத்திரம்.  சங்கீதம் 9:3

368

துதிகளில் பயப்படத்தப்பவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 15:11

369

துதியின் மத்தியி்ல் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 22:3

370

உன்னதத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 57:15

371

கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 37:16

372

சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  1தீமோத்தேயு 6:16

373

எருசலேமில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 135:21

374

மனுஷருக்குள் வாசம் செய்ய வரம் பெற்றவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:18

375

நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 57:15

376

கர்த்தருக்குப் பிரியமானவனின் எல்லைக்குள் வாசமாயிருப்பவரே ஸ்தோத்திரம்.  உபாகமம் 33:12

377

உன்னதரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்.  கொலோசெயர் 3:1

378

பூமி உருண்டையின் மேல் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 40:22

379

ஜலப்பிரவாகத்தின் மேல் உட்கார்ந்திருப்பவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:10

380

பரலோகத்தில் விற்றிருக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 2:4

381

திரளான தண்ணீர்களின் மேலிருக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 29:3

382

பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்.  எபேசியர் 1:21

383

தயவுள்ளவனுக்கு தயவுள்ளவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:25

384

உத்தமனுக்கு உத்தமரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:25

385

புனிதனுக்கு புனிதரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:26

386

மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராக தோன்றுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:26

387

பிரதான அப்போஸ்தலரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 3:1

388

ஆண்டவரும் போதகருமானவரே ஸ்தோத்திரம்.  யோவான் 13:14

389

தேவனிடத்திலிருந்து வந்த போதகரே ஸ்தோத்திரம்.  யோவான் 3:2

390

பிரதான தீர்க்கதரிசியே ஸ்தோத்திரம்.  யோவான் 4:19

391

பிரதான (பரம) வைத்தியரே ஸ்தோத்திரம்.  லூக்கா 5:31

392

பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 3:1

393

மகா பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 4:14

394

நித்திய பிராதான ஆசாரியரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 6:20

395

உண்மையுள்ள பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 2:17

396

பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 4:15

397

பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 4:15

398

வரப்போகிற நன்மைக்குரிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 9:11

399

மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:24

400

மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:17