கெட்ட குமாரன்
ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை, இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பாவம் செய்பவர்களாக கருதப்பட்ட ஆயக்காரரும்(வரி வசூல் செய்பவர்), பாவிகளும் (கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்ட்வர்களும் பாவம் செய்தவர்களாகவே யூத சமயத்தவரால் கருதப்பட்டனர்) அவருடைய போதனையை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நல்லவர்களாக, பாவம் அறியாதவர்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும்