விசேஷித்தவர்களாய் மாற்றுபவர்

பல வருடங்களாக அந்த மரம் அக்காட்டிலே இருந்தது. மிகுந்த ருசியுள்ள நல்ல கனிகளைக் கொடுத்து, பறவைகள், விலங்குகள், வழிப்போக்கர்கள் என அனைவரும் பசியாற பழங்களைக் கொடுத்தது, ஆனால் ஒருநாள் வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது அந்த மரம். அவ்வழியே சென்ற ஒருவரும் அதை தூக்கி நிறுத்த முன்வரவில்லை. பரிதாபத்தோடு அதைப் பார்த்துவிட்டு சென்று விட்டனர். அந்த மரமோ, ‘நான் எவ்வளவோ கனிகளைக் கொடுத்து மற்றவர்களுக்கு உதவியாகத்தானே